மின்வா
மின்வா | |
---|---|
![]() மாக்பி மற்றும் புலி என்பது கொரிய நாட்டுப்புற ஓவியத்தின் முதன்மையான ஓவியங்களில் ஒன்றாகும். | |
Korean name | |
Hangul | 민화 |
Hanja | 民畵 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Minhwa |
McCune–Reischauer | Minhwa |
மின்வா (Minhwa) பெரும்பாலும் முறையான பயிற்சி இல்லாத நாடோடி ஓவியர்கள் அல்லது அறியப்படாத ஓவியர்களால் உருவாக்கப்பட்ட கொரிய நாட்டுப்புறக் கலையைக் குறிக்கிறது. இது அன்றாட பயன்பாட்டுக்காகவும், அலங்கார நோக்கத்திற்காகவும் நுண்கலையின் சமகால போக்குகளைப் பின்பற்றுகிறது. [1] "மின்வா" என்ற சொல் யானகி முனேயோஷி என்பவரால் உருவாக்கப்பட்டது. [2]
மின்வா என்றால் "மக்களின் ஓவியம்" அல்லது "பிரபலமான ஓவியம்" என்று பொருளாகும். இந்த வகை ஓவியங்களானது பெரும்பாலும் பெயர் தெரியாத கைவினைஞர்களின் படைப்புகளாகும். அவர்கள் பாரம்பரிய பாணிகள், விதிகள், வகைகள் போன்றவற்றை கடைப்பிடித்தனர். மின்வா ஓவியங்கள் தீமையை விரட்டி வீட்டுக்கு நன்மையைக் கொண்டுவரும் என்று நம்பப்பட்டன. இவை கொக்குகள், பாறைகள், நீர்ப்படுக்கைகள், மேகங்கள், சூரியன், சந்திரன், பைன் மரங்கள், ஆமைகள், பூச்சிகள், பூக்கள் போன்ற பிரபலமான கருப்பொருள்களைக் கொண்டவையாக உள்ளன. மின்வா ஓவியமானது சோசுன் அரசவம்ச (1392-1910) காலத்தில் காகிதத்தில் அல்லது துணியில் வரையப்பட்ட பாரம்பரிய கொரிய நாட்டுப்புறக் கலையாகும். "மின்வா என்பது கொரிய மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்ட ஒரு பாரம்பரிய கலை வடிவமாகும், எனவே இது கொரிய உணர்வை சிறப்பாக வெளிப்படுத்துகிறது" (பக். 14) என்று யூன் (2020) குறிப்பிடுகிறார்.
பெயர் தெரியாத ஓவியர்களால் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் வீட்டில் தீய சக்திகளை விரட்டவும், நல்ல செயல்கள் நடக்க வேண்டும் என்று விரும்பும் எளிய மக்களிடையே பரப்புவதற்கு முன்பே, அரசவை ஓவியர்களால் அரண்மனைகளில் பயன்படுத்தத்தப்பட்டன. மின்வா ஓவியக்கலை பதினேழாம் நூற்றாண்டில் அதன் தற்போதைய வடிவத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த ஓவியர்கள், பெரும்பாலும் திருவிழாக்களின்போது இடம்பெயர்ந்து சென்று, உள்ளூர் மக்களுக்காக ஓவியம் வரைந்து, அந்த இடத்திலேயே தங்கள் பணிகளைச் செய்யும் எளிய மக்களாக இருந்தனர். இந்தக் ஓவியர்கள் பெரும்பாலும் அறியப்படாத சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர். மேலும் சிலர் வழக்கமாக விழாக்களைச் சுற்றிப் பார்க்கும் பார்வையாளர்களாக இருந்தனர். அவர்கள் நுண்கலையின் போக்குகளைப் பின்பற்றி, குறியீட்டுவாதம், நம்பிக்கை, நகைச்சுவை, நையாண்டி ஆகியவற்றைப் பயன்படுத்தி அதன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கச்சா மின்வா பாணி ஓவியப் படைப்புகளை உருவாக்கினர். வாழ்க்கையின் முக்கியமான கட்டங்கள் மின்வா ஓவியத்தால் குறிக்கப்பட்டன. சாதாரண மக்களும் பிரபுக்களும் இந்தக் கலைஞர்களை வேலைக்கு அமர்த்தினர்.
இந்த ஓவியங்கள் நாட்டுப்புறக் கதைகள், இதிகாசங்களில் குறிப்பிடப்படும் உருவங்கள், மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியத்தின் சின்னங்கள், அன்றாட வாழ்க்கையின் காட்சிகளைக் காட்டுவனவாக உள்ளன. புலி போன்ற ஆற்றல் மிக்க விலங்குகள் அல்லது வெற்றியைக் குறிக்கும் கெண்டை மீன் போன்ற தெய்வீக அம்சங்களாக கருதப்படுபவை இந்த ஓவியங்களில் காணப்படும் மிகவும் பொதுவான உருவங்களாகும். ஓவியங்கள் காகிதத்திலும் துணிகளிலும் வரையப்பட்டன.
மின்வா அக்காலத்தின் பார்வைகள், சமயங்கள், அன்றாட வாழ்க்கை, ஆசைகளின் குறியீடுகள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றை வண்ணமயமாக பிரதிபலிக்கின்றன. இது புலிகள், டிராகன்கள், பூச்சிகள், கொக்குகள் போன்ற விலங்குகளைக் கொண்டுள்ளது. மேலும் மேகங்கள், தாமரைகள், நீர், சூரியன் போன்ற வண்ணமயமான இயற்கை பின்னணியைக் கொண்டிருக்கின்றன. பௌத்தம், ஷாமனிசம், கன்பூசியனிசம், தாவோயிசம் ஆகியவற்றைக் கலந்த தனித்துவமான குறியீட்டுவாதத்தைக் கொண்ட்வையாக உள்ளன.
காலனித்துவ ஆட்சியின் போது ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, கொரியப் போர் முடிவுக்கு வரும் வரை கலை வடிவம் ஒரு குறுகிய கால தேக்கத்தைக் கொண்டிருந்தது. இருப்பினும், 1980களில், மின்வா மறுமலர்ச்சி பெற்றது, அதன் மீதான ஆர்வமும் புகழும் இன்றுவரை நீடிக்கிறது.
மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் தரும் என்பதற்காக மின்வா முன் கதவில் தொங்கவிடப்பட்டன. இது இயற்கை பொருட்களிலிருந்து நிறமிகளை உருவாக்குவதையும், ஹன்ஜி அல்லது கொரிய காகிதத்தை வண்ணமயமாக்குவதையும் உள்ளடக்கிய பணியாக இருந்தது.
காட்சியகம்
[தொகு]-
ஹ்வான்ஜோகுஜாடோ ((குட்டிகள், பூக்கள், பறவைகள் படம்))
-
Cat
-
காமோ யோஜேடோ (감모여제도 感慕如在圖)
-
புலி
-
மாக்பியும் புலியும்
-
சாங்ஹாக் பண்டோடோ, அதாவது "சங்யோங்கில் இரண்டு கொக்குகள் மற்றும் பீச் பழங்களின் படம்", கொரிய தாவோயிசத்தின் சொர்க்கம்.
-
இயோஹாடோ (மீன், நண்டுகளின் படம்)
-
சேக்கியோலி
-
அவாஜோடோ (பூக்களும், பறவைகளும்)
-
ஜாங்சாங் ஹ்வரக்டோ
-
முன்ஜாடோ
-
முன்ஜாடோ
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Korean Culture and Information Service (2011). Korean Beauty (in ஆங்கிலம்). 길잡이미디어. p. 272. ISBN 9788973751204. Retrieved 3 December 2017.
- ↑ "민화". Encyclopedia of Korean Folk Culture. National Folk Museum of Korea. Retrieved 15 September 2018.