மின்மினி இசைத்திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்மினி இசைத்திருவிழா என்று அழைக்கப்படும் இசை விழாவானது, 2003ம் [1] ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தின்னேபால்யா என்ற இடத்தில் அமைந்துள்ள மின்மினி பன்கலாச்சார மையம் மூலம் நிகழ்த்தப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் பூமி ஜாத்ரே என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த திருவிழாவில் உலகமெங்கும் இருக்கும் இசைக்கலைஞர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

திருவிழா[தொகு]

கக்கலிபுரா ஏரிக்கரையில் உள்ள ஒரு பழமைவாய்ந்த ஆலமரத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அரங்கத்தில் தான் இத்திருவிழா நடைபெறும். இந்த இசைத்திருவிழாவின் கருப்பொருள் மனிதர்களுக்கும் பூமிக்கும் இடையிலான ஒற்றுமை, உறவு, மற்றும் இந்தியாவின் பன்மைத்துவத்தின் கொண்டாட்டமாகும். முதல்நாள் மாலை ஆரம்பித்து மறுநாள் விடியற்காலை வரை என இந்த இசைதிருவிழா இரவு முழுவதும் நடக்கும். பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிரபலமான இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாது அறியப்படாத கலைஞர்களும் சங்கமித்து இசைவெள்ளத்தில் ஆழ்த்த வழவகுத்துள்ளது. இந்துஸ்தானி, கர்நாடக குரலிசை,மேற்கத்திய ஜாஸ் இசை , நாட்டுப்புற இசை மற்றும் மாற்று இசை என பல்வேறு இசை வகைகளும் இங்கே இசைக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா ஒரு குறிப்பிட்ட தலைப்பில் நடைபெற்றுள்ளது. 2003ம் ஆண்டு [1] ஆரம்பிக்கப்பட்ட போது '"ஈராக்கில் அமைதி"' என்பதை தலைப்பாக கொண்டது. அடுத்த ஆண்டில் தண்ணீரை [2] சேமிப்பதன் அவசியத்தை மையமாகக் கொண்டது; அதற்கடுத்த ஆண்டு "'அதிக மரங்களைப் பாதுகாத்து வளர்க்கவும்"' [3] என்ற முழக்கம் இருந்தது; நான்காவது ஆண்டு "'மனதின் உள்ளார்ந்த மற்றும் வெளியான பயணம்"' [4] என்பவற்றின் மீது கவனம் செலுத்தியது. அதற்கடுத்த ஆண்டில் தொழில், சமூகம் மற்றும் சூழலியலலுக்கான பொறுப்பு [5] என்ற தலைப்பிலும் அடுத்த ஆண்டில் சகவாச உணர்வு' [6] என்றும் நடைபெற்றது. 2013ம் ஆண்டு வரை பத்தாண்டுகளாக நடைபெற்று வந்த இந்த இசைத்திருவிழா ஏணோ அதன்பின்னர் நடைபெறவி்ல்லை.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Christopher, Kavya (26 April 2004). "City celebrates music and art, Jathre style". The Times Of India (Bennett Coleman & Co. Ltd). http://timesofindia.indiatimes.com/articleshow/638839.cms. பார்த்த நாள்: 2009-05-04. 
  2. "Earth fair in the concrete jungle". தி இந்து. 29 April 2004 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041225021416/http://www.hindu.com/mp/2004/04/29/stories/2004042900380300.htm. பார்த்த நாள்: 2009-05-04. 
  3. "Back to basics". தி இந்து. 20 April 2005 இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104062617/http://www.hindu.com/mp/2005/04/20/stories/2005042001000100.htm. பார்த்த நாள்: 2009-05-04. 
  4. "Fireflies Festival of Sacred Music on April 8". தி இந்து. 31 March 2006 இம் மூலத்தில் இருந்து 28 அக்டோபர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061028180823/http://www.hindu.com/2006/03/31/stories/2006033100510200.htm. பார்த்த நாள்: 2009-05-04. 
  5. '"Fireflies music fest tomorrow". தி இந்து. 13 April 2007 இம் மூலத்தில் இருந்து 30 ஏப்ரல் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070430150746/http://www.hindu.com/2007/04/13/stories/2007041320770200.htm. பார்த்த நாள்: 2009-05-04. 
  6. "Dusk-to-dawn fest is back". தி இந்து. 18 February 2008 இம் மூலத்தில் இருந்து 4 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121104062609/http://www.hindu.com/2008/02/18/stories/2008021860820200.htm. பார்த்த நாள்: 2009-05-04. 
  7. . https://lbb.in/bangalore/fireflies-ashram/. 

பகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்மினி_இசைத்திருவிழா&oldid=3741858" இலிருந்து மீள்விக்கப்பட்டது