மின்னெடோசா எத்தனால் ஆலை
மின்னெடோசா எத்தனால் ஆலை (Minnedosa Ethanol Plant) என்பது கனடா நாட்டின் மனிட்டோபா மாகாணம் மினெடோசா நகரத்தில் அமைந்துள்ள ஒரு எத்தனால் ஆலையாகும். செனோவசு ஆற்றல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆலை, அதன் 2021 ஆம் ஆண்டு அசுக்கி ஆற்றல் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் 130 மில்லியன் லிட்டர் (34 மில்லியன் அமெரிக்க கேலன்கள்) எத்தனால்[1][2] மற்றும் 126,000 டன் உலர்ந்த வடிகட்டிய தானியங்களை உற்பத்தி செய்கிறது.
கனடாவில், எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்படுகிறது. இந்த ஆலைக்கான மூலப்பொருள், உள்ளூர் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும், உணவுப் பயன்பாட்டிற்கு உட்படாத தீவனத் தர கோதுமையாகும். இருப்பினும், இந்த ஆலை மக்காச்சோளத்தையும் மூலப்பொருளாகப் பயன்படுத்தும் திறன் கொண்டது. மூலப்பொருள் அரைக்கப்பட்டு, சமைக்கப்பட்டு, நொதிக்கப்பட்டு, வடிகட்டப்பட்டு, நீரிழப்பு செய்யப்படுகிறது. இதன் விளைவாக எத்தனால் எரிபொருள் கிடைக்கிறது. மேலும் மீதமுள்ள கழிவுப் பொருள் அதிக புரதச்சத்து கொண்ட தீவனச் சேர்க்கையாகப் பதப்படுத்தப்படுகிறது.[3]
மின்னெடோசா எத்தனால் ஆலை 10 மற்றும் 16 ஆம் நெடுஞ்சாலைகளின் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது.[4] 2008 ஆம் ஆண்டில், அந்த இடத்தில் இருந்த பழைய ஆலைக்கு பதிலாக ஒரு புதிய ஆலை செயல்பாட்டிற்கு வந்தது. அந்தப் பழைய ஆலை 1981 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 10 மில்லியன் லிட்டர் (2.6 மில்லியன் அமெரிக்க கேலன்கள்) எத்தனாலை உற்பத்தி செய்து வந்தது. இந்த ஆலை பிசிஎல் தொழிற்சாலைகள் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்டதாகும்.</ref> The plant was constructed by PCL Industrial Constructors.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bedard, Dave (2020-10-27). "Cenovus to get Prairies' biggest ethanol maker in Husky sale". AGCanada (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-10-16.
- ↑ "Innovation brings first corn oil at our Minnedosa Ethanol Plant". www.cenovus.com (in ஆங்கிலம்). Retrieved 2023-10-16.
- ↑ Plant Overview
- ↑ "Minnedosa Ethanol Plant - Husky Grain". huskygrain.com. Retrieved 2023-10-16.
- ↑ PCL Overview of Projectவார்ப்புரு:Moved resource