மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மின்னணு முறையில் வழக்கு தாக்கல் அல்லது மின்-தாக்கல் (E-Filing) [1]என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் மின் குழுவால் தொடங்கப்பட்ட புதிய மற்றும் எளிய முறையில் வழக்குகளை நிகழ்நிலை மூலமாக தாக்கல் செய்யும் முறையாகும். இந்திய உச்சநீதிமன்றத்தின் மின் குழு (ஈ-கமிட்டி)யானது, மின்-தாக்கல் முறையைப் பயன்படுத்தி வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான புதிய நடைமுறையினை வடிவமைத்துள்ளது. இதன் மூலமாக, வழக்குகளையும் சட்ட ஆவணங்களையும் மின்னணு முறையில் மின் - தாக்கல் செய்ய முடிகிறது. இந்த நடைமுறையைப் பின்பற்றி அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்கள் முன்பாக நேரில் செல்லாமல் தங்களது இடத்தில் இருந்தே, வழக்குகளைப் பதிவு செய்யலாம். இந்த மின்-தாக்கல் முறையானது, "காகிதமில்லா தாக்கல்" செய்யும் முறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. மேலும், இந்தியாவில் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்ய, தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவதன் மூலம் நேரத்தையும் செலவையும் சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்கம்[தொகு]

மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) முறையானது ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில்[2], இது குறித்து வழக்கறிஞர்கள் மற்றும் பயனாளிகள் அறியும் விதமாக விழிப்புணர்வு காணொளி வகுப்பு நடத்தப்பட்டது.[3]

பயனாளிகள்[தொகு]

மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) மூலமாக வழக்கறிஞர்களும், பொதுமக்களும், நீதிமன்றங்களும் மற்றும் காவல் துறையும் வெகுவாக பலன் அடைகிறார்கள்.

வழக்கறிஞர்கள்[4][தொகு]

லண்டனில் உள்ள பழைய பெய்லி விசாரணையைக் காட்டும் ஓவியம்- தாமஸ் ரவுலான்சன் மற்றும் அகஸ்டஸ் புகின் ஆகியோர் அகர்மென் மைக்ரொகாசம் லண்டனுக்காக தீட்டியது. (1808-11)

மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) மூலமாக வழக்குகளை வழக்கறிஞர்கள் அவர்களது வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்யலாம். இதனால் அவர்களது நேரம் சேமிக்கப்படுகிறது. மேலும், மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) மூலமாக வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை ஏற்படுகிறது. இது எளிய முறை என்பது புரிகிறது.

பொதுமக்கள்[தொகு]

மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) மூலமாக வழக்குகளை பொதுமக்கள் அவர்களது வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்யலாம். இதனால் அவர்களது நேரம் சேமிக்கப்படுகிறது. மேலும், மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) மூலமாக வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை ஏற்படுகிறது. இது எளிய முறை என்பது புரிகிறது.

நீதிமன்றங்கள்[5][தொகு]

இந்திய உச்ச நீதிமன்றம்

மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) மூலமாக வழக்குகளை வழக்கறிஞர்கள் அவர்களது வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்வதால், நீதிமன்றத்தின் நேரம் சேமிக்கப்படுகிறது. மேலும், மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) மூலமாக வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை ஏற்படுகிறது. இது எளிய முறை என்பது புரிகிறது.

காவல் துறை[6][தொகு]

மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) மூலமாக வழக்குகளை காவல் துறையினர் அவர்களது காவல் துறை அலுவலகத்தில் இருந்தபடியே மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்யலாம். இதனால் அவர்களது நேரம் சேமிக்கப்படுகிறது. மேலும், மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) மூலமாக வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கை ஏற்படுகிறது. இது எளிய முறை என்பது புரிகிறது.

பயனராக பதிவு செய்வது[7][தொகு]

வழக்கறிஞர்களும், பொதுமக்களும் தம்மைப் பயனராக பதிவு செய்தலில் இரண்டு நிலைகள் உள்ளன. அவை, 1. பயனராக பதிவு செய்வது மற்றும் 2. வழக்குகளை பதிவு செய்வது ஆகும்.

பயனராக பதிவு செய்வதன் அவசியம்[தொகு]

பயனராக தன்னை பதிவு செய்த பின்னர் தான் வழக்குகளை பதிவு செய்ய முடியும். எனவே, ஒவ்வொரு வழக்கறிஞரும் பொதுமக்களும் தம்மை ஒரு பயனராக பதிவு செய்துகொள்வது அவசியமாகும். இந்தியாவின் எந்தவொரு மாநிலத்தின் வழக்கறிஞர் குழுமத்திலும் (பார் கவுன்சிலிலும்) தன்னை பதிவுசெய்துள்ள எந்தவொரு வழக்கறிஞரும் ஒரு பயனராக தன்னை பதிவு செய்த பின்னர், இந்தியாவில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய மின் - தாக்கலைப் பயன்படுத்தலாம்.

அதேபோல், வழக்கு பதிவு செய்ய விரும்பும் பொது மக்களும் அல்லது காவல் துறையினரும் தம்மை ஒரு பயனராக பதிவு செய்த பின்னரே வழக்கு பதிவு செய்ய முடியும் என்பதால் அவர்களும் தங்களை ஒரு பயனராக பதிவு செய்துகொள்வது அவசியமாகும்.

இதற்காக, மின் குழு (இந்திய உச்ச நீதிமன்றம்) சார்பாக வழக்கறிஞர் டாக்டர். கர்னிகா சேத் -ன் பயனர் கையேடு[8] வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக, பயனர்கள் மின்-தாக்கல் செய்ய பயனராக பதிவு செய்வதற்கான படிப்படியான செயல்முறையைப் புரிந்துகொள்ள முடியும். மேலும், இந்த கையேட்டின் மூலமாக, எப்படி வழக்குகளை மின் - தாக்கல் முறையில் தக்கல் செய்வது? என்பதை எளிதில் அறியலாம்.

பயனர் கணக்கு தொடங்க உள்நுழைவு[தொகு]

மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) செய்வதற்கான வளைதளத்தை உலாவியில் தேடுவதற்கான முகவரி "https://www.efiling.ecourts.nic.in/efiling" ஆகும். அதன் உள்நுழைவுத் திரையில் கிடைக்கும் 'கணக்கை உருவாக்கு' இணைப்பைப் பயன்படுத்தி மின் -தாக்கலுக்கான பயனர் கணக்கை உருவாக்கலாம். அதற்காக முதலில், தேவையான ஆவணங்களை தயாராக வைத்துக்கொண்டு, பயனர் கணக்கு படிவத்தை நிரப்ப வேண்டும்.

வழக்கறிஞர்கள் பயனராக பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்[தொகு]

 • கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டு பதிவை தொடங்க வேண்டும்.
 • தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (புகைப்படக் கோப்பு வடிவம் ஜே.பி.ஜி அல்லது ஜே.பி.ஈ.ஜி வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் அதன் அளவு 50 கே.பி க்கும் குறைவாக இருக்க வேண்டும்).
 • வழக்கறிஞர் பதிவு சான்றிதழ் (பட கோப்பு ஜே.பி.ஜி. வடிவம் அல்லது ஜே.பி.ஈ.ஜி. வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் அளவு 50 கே.பி க்கும் குறைவாக இருக்க வேண்டும்).
 • பதிவு செய்ய தொடங்கும் முன்பே, இந்த ஆவணங்களை பதிவு செய்ய பயன்படுத்தும் கணினி அல்லது கைபேசியில் தயாராக சேமித்து வைத்துக் கொள்ள வேன்டும். அதன் பிறகே, பதிவைத் தொடங்க வேண்டும். ஏனெனில், பதிவு செய்வதற்கு கால அளவு வரையறுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயனராக பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்[தொகு]

 • கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொண்டு பதிவை தொடங்க வேண்டும்.
 • தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (புகைப்படக் கோப்பு வடிவம் ஜே.பி.ஜி அல்லது ஜே.பி.ஈ.ஜி வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் அதன் அளவு 50 கே.பி க்கும் குறைவாக இருக்க வேண்டும்).
 • ஆதார் அட்டை (பட கோப்பு ஜே.பி.ஜி. வடிவம் அல்லது ஜே.பி.ஈ.ஜி. வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் அளவு 50 கே.பி க்கும் குறைவாக இருக்க வேண்டும்).
 • பதிவு செய்ய தொடங்கும் முன்பே, இந்த ஆவணங்களை பதிவு செய்ய பயன்படுத்தும் கணினி அல்லது கைபேசியில் தயாராக சேமித்து வைத்துக் கொள்ள வேன்டும். அதன் பிறகே, பதிவைத் தொடங்க வேண்டும். ஏனெனில், பதிவு செய்வதற்கு கால அளவு வரையறுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பயனராக பதிவு செய்ய தேவையான ஆவணங்கள்[தொகு]

 • மேலே குறிப்பிட்ட, நேரடி கட்சிக்காரர் பயனராக பதிவு செய்ய தேவையான ஆவணங்களே காவல் துறை அதிகாரிகளுக்கும் தேவைப்படும். எனவே அதே வழிமுறையைப் பயன் படுத்த வேண்டும்.

வழக்கறிஞர் பயனர் கணக்கு தொடங்குதல்[தொகு]

முதலில், நீங்கள் வழக்கறிஞரா? அல்லது நேரடியான கட்சிக்காரரா? என்ற இடத்தில் வழக்கறிஞர் என தேர்வு செய்ய வேண்டும். பின்னர், வழக்கறிஞர் தனது 10 இலக்க கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பார் கவுன்சில் பதிவு எண், ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர், வழக்கறிஞர் அவருக்கு விருப்பமான பெயரை, தனது பயனர் அடையாள பெயராக(user id) உள்ளிட வேண்டும். ஒரு வழக்கறிஞர், அவர் எந்த நீதிமன்றத்தில் அவரது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்துள்ளாரோ, அந்த நீதிமன்றத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பின்னர், "கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ஓ.டி.பி. ஐப் பெறுக" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உடனே, சரிபார்ப்பதற்காக வழக்கறிஞரின் கைபேசிக்கும் மின்னஞ்சல் முகவரிக்கும் என இரண்டு தனித்தனி "ஓ.டி.பி" கள் அனுப்பப்படும். அந்த ஓ.டி.பி களை உள்ளிட்டு "சரிபார்ப்பு" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

வழக்கறிஞரின் தனிப்பட்ட விபரங்கள்[தொகு]

வழக்கறிஞர் தனது தனிப்பட்ட விபரங்களை உள்ளிட வேண்டும். அவை:

 • முதலில், உள்நுழைவு கடவுச்சொல்லைத் தேர்வுசெய்ய வேண்டும். (இந்த கடவுச்சொல்லானது குறைந்தது 8 எழுத்துகள் நீளமாகவும், பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களின் கலவையாகவும் இருக்க வேண்டும், மேலும் குறைந்தது ஒரு எண்ணையும் ஒரு சிறப்பு எழுத்தையும் கொண்டிருக்க வேண்டும்). பின்னர், உறுதிப்படுத்த கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிட வேண்டும்.
 • பின்னர், பயனரது முதல் பெயர், கடைசி பெயர், தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள மற்றொரு தொலைபேசி எண், பாலினம், பிறந்த தேதி, முகவரி, அஞசல் குறியீட்டு எண், ஆகியவ்ற்றை உள்ளிட வேண்டும்.
 • பின்னர், பயனர் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். (புகைப்படக் கோப்பு வடிவம் ஜே.பி.ஜி அல்லது ஜே.பி.ஈ.ஜி வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் அதன் அளவு 50 கே.பி க்கும் குறைவாக இருக்க வேண்டும்).
 • பின்னர், பயனர் தனது அடையாள ஆதாரமான வழக்கறிஞர் பதிவு சான்றிதழை பதிவேற்ற வேண்டும். (பட கோப்பு ஜே.பி.ஜி. வடிவம் அல்லது ஜே.பி.ஈ.ஜி. வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் அளவு 50 கே.பி க்கும் குறைவாக இருக்க வேண்டும்).
 • பின்னர் பயனர் தனது அடையாள சான்று வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • பின்னர், கேப்ட்சாவை உள்ளிட்டு பதிவுசெய்தல் பணியை முடிக்க 'பதிவு' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
 • தற்போது, பயனர் உள்நுழைவுத் திரையில் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் மின் - தாக்கல் மூலம் வழக்கு பதிவு செய்யலாம்.

நேரடி கட்சிக்காரர் பயனர் கணக்கு தொடங்குதல்[தொகு]

முதலில், நீங்கள் வழக்கறிஞரா? அல்லது நேரடியான கட்சிக்காரரா? என்ற இடத்தில் "நேரடி கட்சிக்காரர்" என தேர்வு செய்ய வேண்டும். பொதுமக்கள் நேரடியான கட்சிக்காரராக இருந்தால், அவர் எங்கு வழக்கு தாக்கல் செய்ய விரும்புகிறார் என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும். பின்னர், அவர் அவருக்கு விருப்பமான பெயரை, தனது பயனர் அடையாள பெயராக(user id) உள்ளிட வேண்டும். பின்னர், அவர் எந்த நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய விரும்புகிறாரோ, அந்த நீதிமன்றத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பின்னர், "கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ஓ.டி.பி. ஐப் பெறுக" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உடனே, சரிபார்ப்பதற்காக அவரது கைபேசிக்கும் மின்னஞ்சல் முகவரிக்கும் என இரண்டு தனித்தனி "ஓ.டி.பி" கள் அனுப்பப்படும். அந்த ஓ.டி.பி களை உள்ளிட்டு "சரிபார்ப்பு" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

நேரடி கட்சிக்காரரின் தனிப்பட்ட விபரங்கள்[தொகு]

நேரடியான கட்சிக்காரர் தனது தனிப்பட்ட விபரங்களை உள்ளிட வேண்டும். அவை:

 • முதலில், உள்நுழைவு கடவுச்சொல்லைத் தேர்வுசெய்ய வேண்டும். (இந்த கடவுச்சொல்லானது குறைந்தது 8 எழுத்துகள் நீளமாகவும், பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களின் கலவையாகவும் இருக்க வேண்டும், மேலும் குறைந்தது ஒரு எண்ணையும் ஒரு சிறப்பு எழுத்தையும் கொண்டிருக்க வேண்டும்). பின்னர், உறுதிப்படுத்த கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிட வேண்டும்.
 • பின்னர், பயனரது முதல் பெயர், கடைசி பெயர், தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள மற்றொரு தொலைபேசி எண், பாலினம், பிறந்த தேதி, முகவரி, அஞசல் எண், ஆகியவ்ற்றை உள்ளிட வேண்டும்.
 • பின்னர், பயனர் தனது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். (புகைப்படக் கோப்பு வடிவம் ஜே.பி.ஜி அல்லது ஜே.பி.ஈ.ஜி வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் அதன் அளவு 50 கே.பி க்கும் குறைவாக இருக்க வேண்டும்).
 • பின்னர், பயனர் தனது அடையாள ஆதாரத்தை பதிவேற்ற வேண்டும். (பட கோப்பு ஜே.பி.ஜி. வடிவம் அல்லது ஜே.பி.ஈ.ஜி. வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் அளவு 50 கே.பி க்கும் குறைவாக இருக்க வேண்டும்).
 • பின்னர் பயனர் தனது அடையாள சான்று வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 • பின்னர், கேப்ட்சாவை உள்ளிட்டு பதிவுசெய்தல் பணியை முடிக்க 'பதிவு' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
 • தற்போது, பயனர் உள்நுழைவுத் திரையில் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லுடன் மின் - தாக்கல் மூலம் வழக்கு பதிவு செய்யலாம்.

காவல் துறை பயனர் கணக்கு தொடங்குதல்[தொகு]

மேலே குறிப்பிட்ட, நேரடி கட்சிக்காரர் பயனராக பதிவு செய்யம் நடைமுறையே காவல் துறை அதிகாரிகளுக்கும் பொருந்தும். எனவே அதே வழிமுறையைப் பின்பற்ற வேண்டும்.

காவல் துறையின் தனிப்பட்ட விபரங்கள்[தொகு]

மேலே குறிப்பிட்ட, நேரடி கட்சிக்காரர் பயனருக்கான விபரங்களே, காவல் துறை அதிகாரிகளுக்கும் தேவைப்படும். எனவே அவற்றைப் பயன் படுத்த வேண்டும்.

கடவுச்சொல்லை மறந்துவிட்டால்?[தொகு]

பயனர் கடவுச்சொல்லை றந்துவிட்டால், உள்நுழைவுத் திரையில் ‘உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?’ இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அதை மீட்டெடுக்கலாம். கடவுச்சொல்லை மீட்டெடுக்க ஒரு திரை காண்பிக்கப்படும். அதில், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும். "கேப்ட்சா குறியீட்டை உள்ளிடு" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். புதிய கடவுச்சொல்லைப் புதுப்பிக்க திரையில் சரிபார்க்க வேண்டும். இப்போது பயனர் ஐடி மற்றும் புதிய புதுப்பிக்கப்பட்ட கடவுச்சொல் மூலம் உள்நுழையலாம்.

பயனர் ஐடியை மறந்துவிட்டால்?[தொகு]

பயனர் த்னது ஐடியை மறந்துவிட்டால், உள்நுழைவுத் திரையில் "உங்கள் பயனர் ஐடியை மறந்துவிட்டீர்களா?" இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் அதை மீட்டெடுக்கலாம். பயனர் ஐடியை மீட்டெடுக்க ஒரு திரை காண்பிக்கப்படும். அதில், உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும். "கேப்ட்சா குறியீட்டை உள்ளிடு" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் பயனர் ஐ.டி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும், பின்னர், அவ்வாறு பெறப்பட்ட உங்கள் பயனர் ஐடியுடன் இப்போது நீங்கள் உள்நுழையலாம்.

வழக்குகளை பதிவு செய்வது[தொகு]

தங்களை ஒரு பயனராக பதிவு செய்து கொண்ட வழக்கறிஞர்கள், ஒரு பயனராக பதிவு செய்து கொண்ட நேரடி கட்சிக்காரர்கள், ஒரு பயனராக பதிவு செய்து கொண்ட காவல் துறையினர் மட்டுமே வழக்குகளை பதிவு செய்யலாம். மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) செய்வதற்கான வளைதளத்தை உலாவியில் தேடுவதற்கான முகவரி "https://www.efiling.ecourts.nic.in/efiling" ஆகும். அதன் உள்நுழைவுத் திரையில் கிடைக்கும் 'பயனர் பெயர்' மற்றும் 'கடவுச் சொல்' ஆகியவற்றை உள்ளிட்டு மின் - தாக்கல் செய்வதற்கான பக்கத்தில் நுழைய வேண்டும்.

பின்னர் டேஷ்போர்டு திரையில் தோன்றும் இடது பகுதில் உள்ள "புதிய வழக்கு" என்கிற பகுதியைதேர்வு செய்ய வேண்டும். அதற்க்கு அடுத்து வரும் பகுதிகளில் மற்ற விபரங்களை உள்ளிட வேண்டும். முதலில் வருவது மனுதாரர் என்கிற பகுதியாகும்.

மனுதாரர் பற்றிய விபரங்கள்[தொகு]

படிவத்தில் சிவப்பு நட்சத்திரத்துடன் குறிக்கப்பட்டுள்ள பகுதியானது (*) கட்டாயமாக நிரப்பப்பட வேண்டும். மனுதாரர் நிறுவனம் என்றால் 'அமைப்பு விவரங்கள்' தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து, படிவத்தில் நிறுவன விவரங்களை உள்ளிட வேண்டும். பின்னர், மனுதாரர் பெயர், வயது, தந்தை அல்லது உறவினர் பெயர், வயது விபரங்களை உள்ளிட வேண்டும். பின்னர் 'சேமி' பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.இவ்வாறு உள்ளிடப்பட்ட எல்லா தரவுகளும் அவ்வப்போது சேமிக்கப்படவில்லை என்றால் தொலைந்து போகக்கூடும். தரவு இழப்பைத் தடுக்க, சரியான இடைவெளியில் தரவைச் சேமிப்பதே நல்ல நடைமுறையாகும். 'சேமி' என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் ஒரு ஈ- பதிவு எண் உருவாக்கப்பட்டு திரையில் காண்பிக்கப்படும்.

எதிர்மனுதாரர் விபரங்கள்[தொகு]

பயனர் அடுத்த திரையில் 'எதிர் மனுதாரர்' விபரங்களை உள்ளிட வேண்டும். எதிர் மனுதாரர் நிறுவனம் என்றால் 'அமைப்பு விவரங்கள்' தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து, படிவத்தில் நிறுவன விவரங்களை உள்ளிட வேண்டும். பின்னர், எதிர் மனுதாரர் பெயர், வயது, தந்தை அல்லது உறவினர் பெயர், வயது விபரங்களை உள்ளிட வேண்டும். பின்னர் 'சேமி' பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு உள்ளிடப்பட்ட எல்லா தரவுகளும் அவ்வப்போது சேமிக்கப்படவில்லை என்றால் தொலைந்து போகக்கூடும். தரவு இழப்பைத் தடுக்க, சரியான இடைவெளியில் தரவைச் சேமிப்பதே நல்ல நடைமுறையாகும்.

கூடுதல் விபரங்கள்[தொகு]

ஒரு புதிய வழக்கில் ஒரு மனுதாரர் மற்றும் / அல்லது எதிர் மனுதாரர் பற்றிய கூடுதல் தகவல்களை அதாவது பாஸ்போர்ட் எண், தேசியம், தொழில், பான் கார்டு எண், தொடர்பு விவரங்கள் சேர்க்கப்பட்ட பிறகு, பயனர் தகவலைச் சமர்ப்பிக்க ‘சேமி’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

கீழமை நீதிமன்றங்களின் விபரங்கள்[தொகு]

கீழமை நீதிமன்றங்கள் என்ற பக்கத்தில் கீழமை நீதிமன்றங்களின் விபரம், வழக்கு பதிவு எண் (சி.என்.ஆர்), வழக்கு வகை, வழக்கு எண் / பதிவு எண், ஆண்டு, நீதிபதியின் பெயர், தீர்ப்பு தேதி, முடிவு, சிசி விண்ணப்பித்த தேதி மற்றும் சிசி தயார் தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். உங்களுக்கு முன் தோன்றும் பட்டியலில் இருந்து பொருத்தமான நீதிமன்றத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.

சட்டம் மற்றும் பிரிவு விபரங்கள்[தொகு]

சட்டம் மற்றும் பிரிவு விபரங்கள் பக்கத்தில், பயனர் ஒன்றுக்கு மேற்பட்ட சட்டங்களைச் சேர்க்க விரும்புகிறார், அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டம் மற்றும் பிரிவை நீக்க விரும்புகிறார் என்றால் இந்த பக்கத்தில் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யலாம்.

கூடுதல் தரப்பினர் விபரங்கள்[தொகு]

பயனர் ‘மனுதாரர்’ என்பதைத் தேர்ந்தெடுத்தால், மனுதாரர் படிவம் திறக்கும். அதில் தேவையான விபரங்களை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம் அல்லது திருத்தம் செய்யலாம். ‘மனுதாரர்’ என்பதைத் தேர்ந்தெடுத்தால், மனுதாரர் படிவம் திறக்கும். அதில் தேவையான விபரங்களை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம் அல்லது திருத்தம் செய்யலாம். அதே போல், 'எதிர் மனுதாரர்’ என்பதைத் தேர்ந்தெடுத்தால், எதி மனுதாரர் படிவம் திறக்கும். அதில் தேவையான விபரங்களை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம் அல்லது திருத்தம் செய்யலாம்.

ஆவணங்களை பதிவேற்றவும்[தொகு]

புதிய வழக்கை தாக்கல் செய்வதற்கான அனைத்து படிவங்களையும் பட்டியலிட்ட பிறகு, வழக்கு தொடர்புடைய ஆவணங்களை பதிவேற்றலாம்.

ஆவணங்கள் பி.டி.எஃப் வடிவத்தில் இருக்க வேண்டும். பி.டி.எஃப் ஆவணத்தில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிட டோக்கன் இருந்தால், நீங்கள்

ஆவணத்தில் கையொப்பமிட இதைப் பயன்படுத்தலாம். இல்லையெனில், ஆதார் அடிப்படையிலான மின் கையொப்பமிடல் செயல்முறையைப் பயன்படுத்துதலாம்.

‘பதிவேற்றவும்’ பொத்தானை அழுத்தியவுடன் வெற்றிகரமாக பதிவேற்றியதும், ஆவணத்தின் பெயர், அதன் ஹாஷ் மதிப்புடன் காண்பிக்கப்படும்.

ஒரு பயனர் பதிவேற்றிய ஆவணத்தை ‘நீக்கு’ என்ற விருப்பத்தில் அழுத்துவதன் மூலம் நீக்க முடியும்.

நீதிமன்ற கட்டணத்தை செலுத்துதல்[தொகு]

நீதிமன்ற கட்டண தாவலைக் கிளிக் செய்வதன் மூலம் பொருந்தக்கூடிய நீதிமன்ற கட்டணங்களை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தும் நுழைவாயிலைப் பயன்படுத்தி நீதிமன்றக் கட்டணங்களை செலுத்தலாம். அல்லது ஸ்கேன் செய்யப்பட்ட கட்டண ரசீதைப் பதிவேற்றுதல் மூலமாக நீதிமன்ற கட்டணத்தை பயனர் செலுத்தலாம். நிகர் நிலை வங்கி / வங்கி பற்று அட்டை மூலம் வலைத்தளத்துடன் ஒருங்கிணைந்த கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தலாம்.

உறுதிப்படுத்தல்[தொகு]

பி.டி.எஃப் மற்றும் ஆவணங்களில் கையொப்பமிட உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும். பி.டி.எஃப் இல் மின் கையொப்பமிட்ட உறுதிமொழியை பதிவேற்றலாம். அல்லது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி மின் கையொப்பங்களை உருவாக்கலாம். அல்லது, டிஜிட்டல் டோக்கன் மூலமாக உறுதிப்படுத்தலாம்.

ஓ.டி.பி. சரிபார்தல்[தொகு]

உறுதிமொழியில் மின் கையொப்பமிடுவதற்காக ஆதார் சமர்ப்பிக்கப்பட்டால், ஒரு OTP பெறப்படும். இது வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டவுடன்,

உறுதிப்படுத்தல் ஆதாரைப் பயன்படுத்தி மின் கையொப்பம் உறுதி செய்யப்படும். அல்லது, டிஜிட்டல் டோக்கன் மூலம் ஒரு பயனர் டிஜிட்டலைத் தேர்ந்தெடுத்திருந்தால், டிஜிட்டல் முறையில் உறுதிமொழியில் கையொப்பமிட வேண்டும்.

முன்னோட்டம்[தொகு]

மேல் வலது மூலையில் உள்ள ‘முன்னோட்டம்’ பொத்தானை அழுத்தும்போது, எல்லா பக்கங்களிலும் சேமிக்கப்பட்ட தரவுகளுடன் ‘முன்னோட்டம்’ திரை தோன்றும். இதை சரிபர்க்க வேண்டும்.

இறுதி சமர்ப்பி பொத்தான்[தொகு]

முன்னோட்டம் பக்கம் சரியாக இருந்தால், மேல் வலது மூலையில் உள்ள 'இறுதி சமர்ப்பி' பொத்தானை அழுத்தவும். எந்தவொரு தகவலும் முழுமையடையாவிட்டால், மேல் வலது மூலையில் ஒரு எச்சரிக்கை பொத்தான், கட்டாயமாக சேர்க்க வேண்டிய தகவலைக் காண்பிக்கும். அதை சரி செய்தபின்னர் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆவணங்களைத் தாக்கல் செய்தல்[தொகு]

இதர ஆவணங்களைத் தாக்கல் செய்வது[தொகு]

ஏற்கனவே மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) செய்துள்ள வழக்குகளில் மட்டுமே, மின்-தாக்கல் மூலமாக ஆவணங்களை தாக்கல் செய்ய முடியும். மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) மூலமாக இல்லாமல் நீதிமன்றங்களில் நேரடியாக ஏற்கனவே தாக்கல் செய்து நிலுவையில் உள்ள வழக்குகளில் மின் -தாக்கல் மூலமாக ஆவணங்களை தாக்கல் செய்ய இயலாது.

எனவே, ஏற்கனவே மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) செய்துள்ள வழக்குகளில், மின்-தாக்கல் மூலமாக ஆவணங்களை தாக்கல் செய்ய விரும்பினால் டாஷ்போர்டு திரையின் இடது பகுதியில் இருந்து ‘ஆவணங்கள்’ எனும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். ‘ஆவணங்கள்’ எனும் இணைப்பு, ஒரு புதிய திரையைத் திறக்கும். இதில் தான் ஆவணங்களை தாக்கல் செய்ய இயலும்.

இதர ஆவணத்தைப் பதிவேற்றுதல்[தொகு]

மின் -தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் முதலில் கணினியில் பி. டி. எப். வடிவில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆவணத்தைத் தான் கணினில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்ய, முதலில் ‘பதிவேற்ற’ எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அப்போது, கணினியில் உள்ள ஆவணங்கள் வரிசையாக திரையில் தோன்றும். அந்த வரிசையில் இருந்து பதிவேற்றப்பட வேண்டிய பி. டி. எப். ஆவணத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது அந்த ஆவணம் தானாகவே ஹாஷ் மதிப்புடன் உருவாக்கப்படும். 'தேர்வு செய்' எனும் பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். இப்போது, ஆவணம் சரியாகபதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. அந்த பதிவேற்றப்பட்ட ஆவணம் பட்டியலில் திரையில் காட்டப்படும். பயனர் அதை நீக்க வேண்டும் என விரும்பினால் அந்த ஆவணத்தையும் 'நீக்கு' பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் நீக்கலாம்.

நீதிமன்ற கட்டணம்[தொகு]

இதர ஆவணங்களைத் தாக்கல் செய்ய நீதி மன்றகட்டணத்தை செலுத்த வேண்டும். 'நீதிமன்ற கட்டணம் செலுத்தவும்' பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் நீதிமன்ற கட்டணத்தை சமர்ப்பிக்கலாம்.

மின் ஆவணம் தாக்கல்[தொகு]

மின் -தாக்கல் மூலம் ஆவணங்களை தாக்கல் செய்யும் போது ஆவணத்தின் மதிப்புக்கு ஏற்ப்ப நீதிமன்ற கட்டணம் செலுத்தவேண்டும். அவற்றை செலுத்த, பயனர் தயாராக இருக்க வேண்டும். பதிவேற்றிய ஆவணத்தை அதன் ஹாஷுடன் திரையில் காண்பிக்கும். பயனர் பின்னர் மின் -தாக்கல் மூலமாக கட்டணம் செலுத்த கேட்கப்படுவார்.

ஆவணத்தில் மின் கையொப்பமிடுதல்[தொகு]

நீதிமன்ற கட்டணம் செலுத்திய பின்னர், பதிவேற்றிய ஆவணங்களில் கையொப்பமிட கேட்கப்படும். அதற்கென மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். முதல் வழி, ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கையொப்பமிடலாம். இரண்டாவதாக, டிஜிட்டல் டோக்கன் மூலமாக கையொப்பமிடலாம். மூன்றாவதாக, ஓ. டி. பி மூலமாக மின் கையொப்பமிடலாம். இதில் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றிய பிறகு, கையொப்பமிட்ட சான்றிதழ் உருவாக்கப்படும். மேலும், ஆவணம் பதிவேற்றப்பட்டது என்றும்மற்றும் அதன் ஹாஷ் மதிப்பு பற்றியும் தெரிவிக்கப்படும்.

ஓ. டி. பி. சமர்ப்பித்தல்[தொகு]

இதர ஆவணத்தை தாக்கல் செய்வதற்கான OTP சரிபார்ப்பு முடிந்தவுடன் தான் ஆவணம் ஏற்க்கப்படும். ஆதார் எண்ணை பயன் படுத்தி ஆவணம் கையொப்பமிடப் பட்டவுடன், கைபேசி எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தவேண்டும், இப்போது, கைபேசியில் வந்தடைந்த ஓ. டி. பி. ஐ உள்ளிட வேண்டும். இதனால், ஒரு ஆவணம் மின் -தாக்கல் மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

மேலும் அதிக ஆவணங்கள் பதிவேற்ற வேண்டுமெனில், ஒவ்வொரு ஆவணத்திற்கும், தனித்தனியே இதே நடைமுறையினைக் கையாள வேண்டும்.

முன்னோட்ட திரை[தொகு]

'முன்னோட்டம்' பொத்தானை தேர்வு செய்தால், ஆவணத்தின் பதிவேற்றத்தை சரிபார்ப்பதற்கென, ஒரு மாதிரிக்காட்சி திரை திறக்கும். சரியாக இருந்தால், ‘இறுதி சமர்ப்பி’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

நீதி மன்ற கட்டணம் பற்றாக்குறை[தொகு]

ஒரு மின் -தாக்கல் ஆவணம் அல்லது மின் -தாக்கல் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற கட்டணம் குறைவாக இருந்தால், அதனை மின் - தாக்கல் வழியாக செலுத்தலாம். அந்த வழக்கு ஏற்கனவே மின் - தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்தாலும் கூட, குறைவான நீதி மன்ற கட்டனத்தை மின் - தாக்கல் மூலமாக செலுத்தலாம். அதற்கு, டாஷ்போர்டின் இடது பக்கம் உள்ள ‘குறைவான நீதிமன்ற கட்டணம்' என்பதை கிளிக் செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் இந்த வலைத்தளத்துடன் ஒருங்கிணைந்த கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தி செலுத்தப்படுகிறது. கணினி மூலமாக இல்லாமல் நீதிமன்ற கட்டணம் செலுத்தியிருந்தால், பணம் செலுத்திய கட்டண ரசீதை பி. டி. எஃப் வடிவத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். மேலும், சி. ஆர். என். முறையிலும் நீதிமன்ற கட்டணம் செலுத்தலாம்.

கட்டணம் செலுத்துதல்[தொகு]

நீதிமன்ற கட்டணம் அல்லது குறைவான நீதிமன்ற கட்டணம் செலுத்தவேண்டுமெனில், 'பணம் செலுத்து' பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அப்போது, நீதிமன்ற கட்டணத்தின் விபரம் குறிப்பிடுமாறு பயனரைக் கேட்கப்படும். அதற்கென உள்ள ஒரு பக்கத்தில் பயனர் செலுத்த வேண்டிய கட்டணம் விபரத்தை உள்ளிடும் போது, பயனர் கட்டணத்தை செலுத்த முடியும். ஒரு பயனர் கட்டணம் செலுத்தவில்லை எனில், ‘ரத்துசெய்’ பொத்தானை பயன்படுத்தி பரிவர்த்தனையை ரத்து செய்யலாம்.

முன்னோட்டம் பக்கம்[தொகு]

நீதிமன்ற நீதிமன்ற கட்டணங்களை செலுத்திய பிறகு, பயனர் ‘முன்னோட்டம்’ பக்கத்தைப் பார்க்கவேண்டும். விபரங்கள் சரியாக இருந்தால் சமர்ப்பிக்கலாம்.

‘இறுதி சமர்ப்பிப்பு’ பொத்தானை அழுத்தினால், கட்டணம் செலுத்தி முடிக்கப்படும்., 'திருத்து' பொத்தானை அழுத்தி தேவைப்பட்டால் அதை திருத்திக் கொள்ளலாம். மின் -தாக்கல் மூலமாக செலுத்தும் போது, அடையாளத்திற்கு ஆதார் எண் கேட்கப்படும். அந்த இடத்தில், ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர், அதற்கு உரிய ஓ. டி. பி. எண்ணை உள்ளிட்ட பின்னர் ஆவணம் மற்றும் நீதி மன்ற கட்டணம் பதிவேற்றம் முடிகிறது.

அறிக்கைகள்[தொகு]

ஒரு பயனர்மின் -தாக்கல் முறையில் தனது செயல்பாட்டின் அறிக்கைகளை சரிபார்க்க விரும்பினால், அவர் 'அறிக்கை' பக்கத்தை அழுத்தலாம். இது முகப்பு பக்கம் (டாஷ்போர்டின்) இடது பக்கதில் உள்ளது. இதில், அறிக்கைகள், விருப்பம் மற்றும் அவர் விரும்பும் அறிக்கையின் வகையைத் தேர்ந்தெடுக்கலாம். நீதிமன்ற கட்டணம் போன்ற விபரங்களை பார்வையிடலாம். பயனரின் செயல்பாடு குறித்த மற்றும் அவர் தொடர்புடைய அறிக்கை இதில் இருக்கும்.

நீதிமன்ற கட்டண அறிக்கையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ‘தேதி முதல்’ மற்றும் ‘தேதி வரை' தொடர்புடைய காலத்தைப் பயன்படுத்தி விவரங்கள், ரசீதுடன் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணம் மற்றும் பரிவர்த்தனை ஐடி ஆகியவற்றை காணலாம்.

முகப்பு பக்கம்[தொகு]

நுளைவு[தொகு]

மின்னணு முறையில் வழக்கு தாக்கல் (மின்-தாக்கல்) செய்வதற்கான வளைதளத்தை உலாவியில் தேடுவதற்கான முகவரி "https://www.efiling.ecourts.nic.in/efiling" ஆகும். அதன் உள்நுழைவுத் திரையில் கிடைக்கும் 'பயனர் பெயர்' மற்றும் 'கடவுச் சொல்' ஆகியவற்றை உள்ளிட்டு மின் - தாக்கல் செய்வதற்கான பக்கத்தில் நுழைய வேண்டும். ஒரு பயனர் உலாவியில் வளைதள முகவரியை அணுகும்போது, ​​அவர் முகப்பு பக்கத்தை அடைகிறார். இங்கு அவர், தனது பயனர் தனது பயனர் அடையாள பெயர் மற்றும் கடவுச்சொல்லை சமர்ப்பிக்க வேண்டும். சரியாக தனது பயனர் அடையாள பெயர் மற்றும் கடவுச்சொல்லை சமர்ப்பித்து, அவர் முகப்புபக்கம் (டாஷ்போர்டு) திரைக்கு அனுப்பப்படுகிறார்.

எனது மின்-தாக்கல் நிலை[தொகு]

ஒரு பயனர் அவரின் வழக்குகளின் நிலையை சரிபார்க்க முடியும். முகப்பு பக்கம் (டாஷ்போர்டில்) உள்ள ‘எனது மின் நிலை’ எனும் பகுதியில் அவர் தனது வழக்குகளின் நிலையை சரிபார்க்க முடியும்.

வரைவுகள்[தொகு]

‘எனது மின் நிலை’ என்ற பகுதியின் கீழ் உள்ள ‘வரைவு’ எனும் பகுதியைக் கிளிக் செய்வதன் மூலம், ஒரு பயனர், அவர் சேமித்த அனைத்தையும் பார்க்கலாம். மின் - தாக்கல் வழக்குகளின் வரைவுகள் சேமிக்கப்படுகின்றன. அவை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, அவைகளை பயனர் மீண்டும் சமர்ப்பிக்க அணுகலாம். அவற்றை சமர்ப்பிப்பதற்காக வரைவுகளை அவர் திருத்தலாம். அல்லது அவற்றை திருத்தி முடிக்கலாம். இந்த திரை மின் -தாகால் எண், மற்றும் வழக்கு வகையைக் காட்டுகிறது. பயனர் ‘இறுதி’ பொத்தானை அழுத்தி சமர்ப்பிக்கலாம்.

நிலுவையில் உள்ளது[தொகு]

ஒரு பயனர் ஒரு வழக்கை மின் -தாக்கல் செய்த பிறகு அந்த வழக்கு விபரத்தை மின் -வழக்கு தாக்கல் நிர்வாகி சரிபார்க்கிறார். அவர் சரி பார்த்தபிறகே, ஏற்க்கப்படும். அதுவரை அந்த வழக்கு 'நிலுவையில் உள்ளது' என அழைக்கப்படும். சரி பார்த்து ஏற்க்கப்பட உடன் 'ஏற்பு' என குறிப்பிடப்படும்.

ஏற்றுக்கொள்ளப்படவில்லை[தொகு]

ஒரு பயனர் ஒரு வழக்கை மின் -தாக்கல் செய்த பிறகு அந்த வழக்கு விபரத்தை மின் -வழக்கு தாக்கல் நிர்வாகி சரிபார்க்கிறார். அவர் சரி பார்த்தபிறகே, ஏற்க்கப்படும். அதுவரை அந்த வழக்கு 'நிலுவையில் உள்ளது' என அழைக்கப்படும். சரி பார்த்து ஏற்க்கப்பட உடன் 'ஏற்பு' என குறிப்பிடப்படும். நிர்வாகியால் ஏற்றுக்கொள்ளப்படாத மின் -தாக்கல் வழக்குகள் தனியாக காண்பிக்கப்படுகின்றன. ஒரு பயனர் குறைபாடுகளை சரி செய்து / சரிபார்த்து அதை மீண்டும் சமர்ப்பிக்கலாம். ‘மீண்டும் சமர்ப்பி’ பொத்தானை கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

பற்றாக்குறை கட்டணம்[தொகு]

ஒரு மின் -தாக்கல் ஆவணம் அல்லது மின் -தாக்கல் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற கட்டணம் குறைவாக இருந்தால், அதனை மின் - தாக்கல் வழியாக செலுத்தலாம். அந்த வழக்கு ஏற்கனவே மின் - தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்தாலும் கூட, குறைவான நீதி மன்ற கட்டனத்தை மின் - தாக்கல் மூலமாக செலுத்தலாம். அதற்கு, டாஷ்போர்டின் இடது பக்கம் உள்ள ‘குறைவான நீதிமன்ற கட்டணம்' என்பதை கிளிக் செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் இந்த வலைத்தளத்துடன் ஒருங்கிணைந்த கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தி செலுத்தப்படுகிறது. கணினி மூலமாக இல்லாமல் நீதிமன்ற கட்டணம் செலுத்தியிருந்தால், பணம் செலுத்திய கட்டண ரசீதை பி. டி. எஃப் வடிவத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். மேலும், சி. ஆர். என். முறையிலும் நீதிமன்ற கட்டணம் செலுத்தலாம்.

ஆய்வு நிலுவையில் உள்ளது[தொகு]

மின் -தாக்கல் வழக்குகளை ஆய்வு நிலுவையில் இருக்கும் போது ஒரு பயனர் சரிபார்க்க முடியும். மின் -தாக்கல் நிர்வாகி ஆய்வின் படியான குறைபடுகள் சரி செய்யப்படும் போது, வழக்கு மற்றும் தேதியின் விபரங்கள் அவ்வாறே ஏற்கப்படுகின்றன.

குறைபாடுள்ள வழக்குகள்[தொகு]

‘குறைபாடுள்ள’ எனும் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் ஒரு பயனர் மின் -தாக்கல் வழக்கில் குறைபாடுகள் இருப்பதைக் காணலாம். குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்ட உடன் சரி செய்யப்படுகின்றன. அவ்வாறு எழுப்பிய குறைபாடுகளை சரி செய்வதற்கு ‘குறைபாடுகளை சரிசெய்' என்ற பொத்தானை தேர்வு செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நீதிமன்ற பதிவு, இந்த பட்டியலில் காட்டப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட வழக்கைக் கிளிக் செய்தால் திறக்கும். அதில் உள்ள குறைபாடுகளை பட்டியலிடும். பயனை குறைபாடுகளை சரிசெய்த பிறகு அதை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

எனது வழக்குகள்[தொகு]

நீதிமன்ற பதிவேட்டில் எழுப்பப்பட்ட குறைபாடுகளை ஒரு பயனர் சரி செய்தவுடன், மின் -தாக்கல் வழக்கின் விவரங்களை முகப்பு பக்கத்தின் (டாஷ்போர்டின்) ‘எனது வழக்குகள்’ பிரிவின் கீழ் காணலாம்.

மின்-தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் பகுதி[தொகு]

மின் தி-தாக்கல் வழக்குகள் பகுதியை கிளிக் செய்வதன் மூலம், பயனர்கள் வழக்குகளின் பட்டியலைக் காணக்கூடிய ஒரு பக்கம் திறக்கிறது. இதில் மின் -தாக்கல் எண், சி.என்.ஆர் எண், காரண தலைப்பு மற்றும் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தேதி ஆகியவை உள்ளன.

மின் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம்[தொகு]

ஒரு பயனர் அவர் தாக்கல் செய்த எந்த ஆவணத்தையும் வெற்றிகரமாக அணுக முடியும். இதற்காகவே, சி.என்.ஆர் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதி கிடைக்கிறது. ‘எனது வழக்குகள்’ என்ற தலைப்பின் கீழ் மின் -தாக்கல், ஆவண பகுதியில் வழக்கு விவரங்கள் மற்றும் ஆவணம் தாக்கல் செய்தது மற்றும் கடைசியாக புதுப்பிப்பு தேதி ஆகியவை கிடைக்கும்.

மின்-தாக்கல் பற்றாக்குறை நீதிமன்ற கட்டணம்[தொகு]

ஒரு மின் -தாக்கல் ஆவணம் அல்லது மின் -தாக்கல் மூலமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற கட்டணம் குறைவாக இருந்தால், அதனை மின் - தாக்கல் வழியாக செலுத்தலாம். அந்த வழக்கு ஏற்கனவே மின் - தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்தாலும் கூட, குறைவான நீதி மன்ற கட்டனத்தை மின் - தாக்கல் மூலமாக செலுத்தலாம். அதற்கு, டாஷ்போர்டின் இடது பக்கம் உள்ள ‘குறைவான நீதிமன்ற கட்டணம்' என்பதை கிளிக் செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டணம் இந்த வலைத்தளத்துடன் ஒருங்கிணைந்த கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தி செலுத்தப்படுகிறது. கணினி மூலமாக இல்லாமல் நீதிமன்ற கட்டணம் செலுத்தியிருந்தால், பணம் செலுத்திய கட்டண ரசீதை பி. டி. எஃப் வடிவத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். மேலும், சி. ஆர். என். முறையிலும் நீதிமன்ற கட்டணம் செலுத்தலாம்.

நிராகரிக்கப்பட்ட விஷயங்கள்[தொகு]

நிராகரிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் 'நிராகரிக்கப்பட்டது' என குறிப்பிடப்படுகிறது. நீதிமன்றத்தின் ஆய்வின் போது இதில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட கூடியவை இல்லை எனில் 'நிராகரிக்கப்பட்ட' பக்கத்தின் கீழ் காட்டப்படுகிறது.

செயலற்ற / பதப்படுத்தப்படாத மின்-தாக்கல் எண்.[தொகு]

ஒரு மின் -தாக்கல் வழக்கு குறிப்பிட்ட காரணங்களுக்காக திருப்பபடும் போது அதனை பயனர் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், இந்தப் பகுதியில் காட்டப்படும். ஒரு வழக்கு மின் -தாக்கலில் குணப்படுத்த முடியாத குறைபாடுகள் இருந்தால், அது இந்த பிரிவில் காட்டப்படும்.

ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற கட்டணங்களைப் பார்ப்பது[தொகு]

மின் -தாக்கல் வசதியின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவெனில், பயனர்களுக்கு மின் -தாக்கல் வழக்குகள் பற்றிய விவரங்களை அணுக உதவுகிறது. அதே போல், சம்பந்தப்பட்ட தாகல் மற்றும் சரிபார்க்கும் செயல்முறைக்கு உட்பட்ட பயனரை அனுமதிக்கிறது.மின் -தாக்கல் எண்ணைக் கிளிக் செய்வதன் மூலம் பயனரின் மின் -தாக்கல் நீதிமன்றம், இதர ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற கட்டணம் ஆகியவற்றையும் அணுக முடிகிறது.

மின் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்[தொகு]

'மின் -தாக்கல் செய்த வழக்குகளை' கிளிக் செய்வதன் மூலம் அந்த விபரங்களை அணுகலாம்.

தாக்கல் செய்யப்பட்ட எம்.டி. பார்க்க[தொகு]

இதேபோல், ஒரு பயனர் அதன் மின் -தாகல் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் மின் -தாக்கல் செய்த மற்றும் தாக்கல் செய்த ஆவணங்களையும் காணலாம்.

பற்றாக்குறை நீதிமன்றக் கட்டணங்களைக் காண்க[தொகு]

மின் -தாகல் எண்ணைக் கிளிக் செய்வதன் மூலம் ஒரு பயனர் குறைபடுள்ள நீதிமன்ற கட்டணங்களின் விவரங்களைக் காணலாம்.

வழக்கு நிலையைக் காண்க[தொகு]

ஒருமுறை முகப்பு பக்கத்தின் (டாஷ்போர்டின்) இடது பேனலில் 'வழக்கு நிலை' யின் விருப்பத்தைக் கிளிக் செய்தால் மின் தாக்கல் வழக்கு விபரங்கள் வழங்கப்படுகிறது. அதில், ஒரு வழக்கில், கட்சிகள் மற்றும் அவர்களின் வக்கீல்களின் பெயர்கள் மற்றும் இடைக்கால உத்தரவுகள் ஆகிய எல்லா விவரங்களையும் காட்டுகிறது.

பயனரின் சுயவிவரப் பக்கம்[தொகு]

பயனர் சுயவிவரத்தைக் காண மற்றும் திருத்த[தொகு]

பயனரின் சுய விபரங்களை காண அல்லது திருத்த, ஒரு பயனர் முன்தோற்றம் (பிரிவியூ) பக்கத்தினை கிளிக் செய்ய வேண்டும். இது, முகப்பு பக்கத்தின் (டாஷ்போர்டின்) இடது பக்கம் மேல் பகுதில் உள்ளது. இதை கிளிக் செய்தால், ஒரு பக்கம் திறக்கும். அதில் சமர்ப்பித்த வழக்கறிஞரின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களைக் காண்பிக்கும். மின் -தாக்கல் வசதியைப் பயன்படுத்துவதற்கான பதிவு பயனர் அடையாள பெயர், தனது தொடர்பு விவரங்களைக் காண்பிக்கும். மேலும், அவர் திருத்திய பதிவு நேரம் மற்றும் அவர் சமர்ப்பித்த பிற தகவல்கள் கணப்படும்.

பயனரின் புகைப்படத்தைப் பதிவேற்ற[தொகு]

ஒரு பயனர் தனது புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டுமெனில் 'பதிவேற்றவும்' எனும் பொத்தானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தனது (பாஸ்போர்ட் அளவு) புகைப்படத்தை பதிவேற்றலாம் ‘பதிவேற்றம்’ தேர்வுப்பெட்டியைக் கிளிக் செய்து புகைப்படத்தினைப் பதிவேற்றலாம். மேலும், தொடர்பு விவரங்களை திருத்த வேண்டுமெனில், ‘திருத்து’ பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் திருத்தலாம்.

மின்னஞ்சல் முகவரியை மாற்றவும்[தொகு]

மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்துள்ள 'திருத்த' பொத்தானைக் கிளிக் செய்தால் ஒரு பயனர் புதிய மின்னஞ்சல் முகவரியை திருத்தல்லம். மேலும், புது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு ‘புதுப்பிப்பு’ பொத்தானை அழுத்தலாம். அப்போது, ஒரு ஓ. டி. பி. செய்தி பயனருக்கு அவரது மின்னஞ்சலில் அனுப்பப்படும், அவர் ஓ. டி. பி ஐ உள்ளீடு செய்ய வேண்டும். இப்போது, பயனரின் புதிய மின்னஞ்சல் முகவரி உள்ளீடு செய்யப்படுகிறது.

பயனர் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க[தொகு]

இதேபோல், மொபைல் எண்ணைத் திருத்த, ஒரு பயனர் தனது மொபைலுக்கு அடுத்துள்ள 'திருத்த' பொத்தானை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு புதிய பக்கம் திரையில் தோன்றும், அங்கு புதிய மொபைல் எண் உள்ளிட வேண்டும். பின்னர், ‘புதுப்பிப்பு’ பொத்தானைக் கிளிக் செய்தால், ஓ. டி. பி ஒரு பயனருக்கு தனது புதியதாக அனுப்பப்படும். அதனை உள்ளிட்ட பின் புதிய மொபைல் எண் பயன்பாட்டிற்கு வருகிறது.

முகவரி சுயவிவரத்தைப் புதுப்பிக்க[தொகு]

இதேபோன்ற செயல்முறையின் மூலம் ஒரு பயனரின் முகவரியை அவரின் திருத்தலாம் முகவரிக்கு அடுத்துள்ள 'திருத்து' பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் அவருக்கு ஒரு புதிய திரை காட்டப்படும். அதில், ‘புதுப்பி’ பொத்தானைக் கிளிக் செய்தால், மாற்றப்பட்ட முகவரி பயனரின் கணக்கில் புதுப்பிக்கப்படும்.

கடவுச்சொல்லைப் புதுப்பிக்க[தொகு]

‘கடவுச்சொல்லை மாற்று’ விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் ஒரு பயனர் தனது கடவுச்சொல்லை புதுப்பிக்க முடியும். இதில், ஒரு பயனர் தனது பழைய கடவுச்சொல்லை உள்ளிட்டு புதிய கடவுச்சொல்லை உள்ளிடலாம். அதற்கு, 'புதுப்பிப்பு' பொத்தானை அழுத்தவும். புதிய கடவுச் சொல் குறைந்தபட்சம் 8 இலக்க நீளத்துடன் ஒரு சிறப்பு எழுத்து, ஒரு இலக்கம், ஒரு கீழ் எழுத்து, ஒரு மேல் எழுத்து என இருக்கவேண்டும்.

மின் - தாக்கல் முறையானது, 2020 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பரவிய, உலகலாவிய பெருந்தொற்றின் போது, நீதிமன்ற நடவடிக்கைகளில், குறிப்பாக வழக்குகள் தாக்கல் செய்வதில் பெருந்துணை புரிந்துள்ளது. எதிர் கால நீதி மன்ற செயல்பாடுகளும், மின் -தாக்கல் முறையை சார்ந்தே அமையும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "e-Filing Login".
 2. "Policy of E-Committee".
 3. Service, Tribune News. "e-filing to start at district court level" (en).
 4. "பார் கவுன்சில்".
 5. "நீதி மன்றங்கள்".
 6. "தமிழ்நாடு காவல்துறை", தமிழ் விக்கிப்பீடியா, 2020-12-09, 2020-12-11 அன்று பார்க்கப்பட்டது
 7. "Dr. Karnika Seth அவர்களின் மின்னணு முறையில் வழக்கு தாக்கல் வழிமுறை".
 8. "Dr. Karnika Seth Manual on E-Filing".