மின்சுற்றுப் பலகை
Appearance
மின்சுற்றுப் பலகை என்பது மின்கூறுகளை தாங்கிக் கொள்ளவும், அவற்றிற்கிடையை தகுந்த மின்தொடர்பை ஏற்படுத்தி ஒரு முழுமையான மின்சுற்றை அமைக்கவும், உதவும் பொருளாகும். ஒரு மின்காப்புப் பொருளின் அடித்தளத்தின் மீது தாமிரத்தாலான மெல்லிய மின்கடத்தும் அடுக்கு இருக்கும். தேவையற்ற இடங்களில் உள்ள மின்கடத்தும் அடுக்கு வேதிமுறையில் அழிக்கப்படும். பின்னர்கள் மின்கூறுகள் அதன் மீது பொருத்தப்பட்டு முழுமையான மின்சுற்று உருவாக்கப்படும். இன்றைய மின்சாதனங்கள் அனைத்திலும், மின்சுற்றுப் பலகை நீக்கமற நிறைந்திருக்கும்.