மினியொன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினிஒன்ஸ்
இயக்கம்
தயாரிப்பு
கதைபிரையன் லிஞ்ச்
கதைசொல்லிஜெஃப்ரி ரஷ்
இசைHeitor Pereira[1]
நடிப்பு
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுசூன் 11, 2015 (2015-06-11)(லண்டன் வெளியீட்டில்)
சூலை 10, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்91 நிமிடங்கள்[2]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$74 மில்லியன்
மொத்த வருவாய்$416.4 மில்லியன்
மினியோன்ஸ் திரைப்பட வெளியிட்டு பதாகை


மினியான்ஸ் (ஆங்கில மொழி: Minions) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு 3டி கணினி அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்திற்கு பிரையன் லிஞ்ச் என்பவர் கதை எழுதியுள்ளார்கள். இந்தத் திரைப்படத்தை பியேர் காஃபின் மற்றும் கிலே பலடா என்பவர்கள் இயக்க, கிறிஸ் மேலேடன்றி மற்றும் ஜேனட் ஹீலியும் தயாரித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு சாண்ட்ரா புல்லக், ஜான் ஹாம், மைக்கேல் கீட்டன், அல்லிசன் ஜென்னி, பியேர் காஃபின், ஸ்டீவ் கூகன் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் வெளியாகியது. இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது.

கதைக்களம் :[தொகு]

மினியன்ஸ் இந்த உலகம் தோன்றிய காலம் முதலாகவே சிறப்பான வில்லன்களிடம் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட கதாப்பாத்திரங்களாக இருந்துள்ளது. டினோசரஸ், ஆதிகால மனிதன் , பனி மனிதர்கள் என அனைத்து வில்லன்களிம் பணிபுரிந்தாலும் தற்காலத்தில் வில்லன்களின் தலைமையில்லாமல் சலிப்புடன் மனச்சோர்வாக உள்ளன.

கெவின் , ஸ்டுவர்ட் மற்றும் பாப் என்ற மினியான்கள் ஒரு புதிய வில்லன் தலைவரை கண்டறிய 1968 ன் நியூ யார்க் நகரத்துக்கு பயணம் மேற்கொள்கின்றனர். நிறைய கலகலப்பான சாகச சம்பவங்களை கடந்து ஸ்கார்லட் என்ற கொள்ளையடிப்பதில் மிகச்சிறந்த பெண்மணியிடம் பணியாளர்களாக சேருகின்றனர். ஸ்கார்லெட் அரச கிரிடத்தை அணிவதன் மூலமாக அரசியாக மாற முயற்சிக்கிறார். இதனால் அரச கிரிடந்தை எடுத்து வர செல்லும் இந்த மினியன்களில் பாப் அரசராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இப்போது ஸ்கார்லெட் மினியன்ஸிடம் கேட்டு மினியன்ஸின் கிரிடத்தை எடுத்துக்கொள்கிறார் . மேலும் நிறைய வில்லன்களுடன் மினியன்ஸை துரத்துகிறார். இறுதியில் மினியனஸ் இணைந்து ஸ்கார்லெட்டை தோற்கடித்து நிலையை சரிசெய்கின்றனர்.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் நாள் வெளியாகியது. இந்தத் திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது.[3][4][4][5]. 2015. இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் ரைஸ் ஆஃப் க்ரூ 2021 ல் வெளிவரவுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Heitor Pereira to Score ‘Minions’ Movie". Film Music Reporter. September 13, 2013. http://filmmusicreporter.com/2013/09/13/heitor-pereira-to-score-minions-movie/. பார்த்த நாள்: November 19, 2013. 
  2. "MINIONS (U)". British Board of Film Classification. June 16, 2015 இம் மூலத்தில் இருந்து ஜூன் 17, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150617020452/http://www.bbfc.co.uk/releases/minions-film-0. பார்த்த நாள்: June 16, 2015. 
  3. Saad, Nardine (June 12, 2015). "Sandra Bullock returns to the limelight at 'Minions' world premiere". Los Angeles Times. http://www.latimes.com/entertainment/gossip/la-et-mg-sandra-bullock-minions-premiere-red-carpet-20150612-story.html. பார்த்த நாள்: June 13, 2015. 
  4. 4.0 4.1 Lang, Brent (June 18, 2015). "Box Office: ‘Minions’ Kicks Off Run in Australia and Indonesia". Variety. http://variety.com/2015/film/box-office/minions-box-office-australia-indonesia-1201523324/. பார்த்த நாள்: June 19, 2015. 
  5. "Meet Your Favourite Minions!". Annecy. http://www.annecy.org/news:a1179. பார்த்த நாள்: May 31, 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினியொன்ஸ்&oldid=3712683" இருந்து மீள்விக்கப்பட்டது