மினாசு ராக்ரா
| அமைவிடம் | |
|---|---|
| உற்பத்தி | |
| உற்பத்திகள் | வனேடியம் |
மினாசு ராக்ரா (Minas Ragra) என்பது பெரு நாட்டின் பாசுக்கோ பிராந்தியத்தில் அமைந்திருந்த ஒரு பெரிய வனேடியம் சுரங்கமாகும். இந்த வனேடியம் படிவு 1905-ஆம் ஆண்டு நவம்பர் 20-அன்று அமெரிக்க புவியியல் ஆய்வு குழுவொன்றால் கண்டறியப்பட்டது.[1] டொன்னெல் பாசுட்டர் எவெட்டு மற்றும் இயோசு சே. பிராவோ ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவின் உறுப்பினரான ஆன்டெனர் ரிசோ-பாட்ரான் என்பவரால், இப்பகுதியில் 'பாட்ரோணைட்டு' என்ற கனிமம் முதன்முதலில் கண்டறியப்பட்டது.[2] அமெரிக்க வனேடியம் நிறுவனத்தால் மிகக் குறுகிய காலத்திலேயே இங்கு ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டது. 1914-ஆம் ஆண்டிற்குள், உலகின் மொத்த வனேடியம் தாது உற்பத்தியில் 75% பெருவில் உள்ள மினாசு ராக்ரா சுரங்கத்திலிருந்தே பெறப்பட்டது. இதன் மூலம் உலகின் முன்னணி வனேடியம் உற்பத்தி மையமாக இச்சுரங்கம் திகழ்ந்தது.[3] கார்ணோடைட்டு தாதுவிலிருந்து யுரேனியம் எடுக்கும்போது வனேடியம் ஒரு துணைப் பொருளாகக் கிடைத்ததால், இச்சுரங்கம் 1955-ஆம் ஆண்டில் மூடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hewett, Donnel Foster (1906). "A new occurrence of vanadium in Peru". Engineering and Mining Journal 82 (9): 385. https://babel.hathitrust.org/cgi/pt?id=mdp.39015011434712;view=1up;seq=421.
- ↑ Hillebrand, W. F. (1907). "The Vanadium Sulphide, Patronite, and ITS Mineral Associates from Minasragra, Peru". Journal of the American Chemical Society 29 (7): 1019–1029. doi:10.1021/ja01961a006. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://zenodo.org/record/1450154.
- ↑ Fischer, Siegfried (1914). "Uranium and Vanadium". Early Publications of the Lehigh Faculty (Paper 293). http://preserve.lehigh.edu/early-faculty-publications/293.
உசாத்துணை
[தொகு]- Lluis Fontbote; G. Christian Amstutz; Miguel Cardozo; Esteban Cedillo; Jose Frutos (27 November 2013). Stratabound Ore Deposits in the Andes. Springer Science & Business Media. p. 595. ISBN 978-3-642-88282-1.
- Trefzger, Erwin F. (1951). "Vanadium lagerstätte Mina Ragra in Peru" (in de). Berichte der Naturforschenden Gesellschaft zu Freiburg I. Br (DWI). https://books.google.com/books?id=OVJLAAAAYAAJ.
- Phillip Maxwell Busch (1961). Vanadium: A Materials Survey. U.S. Department of the Interior, Bureau of Mines.
- "The Story of Mina Ragra". Engineering and Mining Journal (McGraw Hill Publishing Company): 59. January 1947. https://books.google.com/books?id=1VAQAAAAIAAJ.