மினர்வராயா முத்துராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினர்வராயா முத்துராஜா
சத்தமிடும் ஆண் தவளை
Invalid status (IUCN 3.1)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
வாலற்றன
குடும்பம்:
டைகுரோகுளோசிடே
பேரினம்:
மினர்வராயா
இனம்:
மி. முத்துராஜா
இருசொற் பெயரீடு
மினர்வராயா முத்துராஜா
குரோமோடா மற்றும் பலர், 2008
வேறு பெயர்கள் [1]

சிற்றினப் பட்டியல்

  • பெஜர்வராயா முத்துராஜா

மினர்வராயா முத்துராஜா (Minervarya mudduraja) என்பது முத்து ராஜா பெஜர்வர்யா, முத்துராஜா மட்டைப்பந்து தவளை என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தவளைச் சிற்றினமாகும்.[1][2] மடிக்கேரியை நிறுவிய 17ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர் முத்துராஜாவின் நினைவாக இது பெயரிடப்பட்டது.[2]

விளக்கம்[தொகு]

மினர்வராயா முத்துராஜா என்பது மேற்குத் தொடர்ச்சி மலையின் மையப்பகுதிகளில் காணப்படும் மினர்வராயா பேரினத் தவளைகளில் பெரியது ஆகும். பெண் தவளையின் ஒற்றை மாதிரி மற்றும் கூடுதாலக கிடைத்த மூன்று பெண் தவளைகளின் அடிப்படையில் இந்த சிற்றினம் விவரிக்கப்பட்டுள்ளது.[2] பெண்களின் இனப்புழை துவாரத்தின் சராசரி நீளம் 45 mm (1.8 அங்) ஆகும். நீளமான தோல் முகடுகள் முதுகில் காணப்படுகின்றன. மேலும் இவை பெரும்பாலும் நான்கு வரிசைகளில் ஒரு தலைகீழ் ஆங்கில எழுத்தான ’வி’ வடிவில் மையத்தில் காணப்படுகிறது. தலை நீளத்தை விட அகலமாகக் காணப்படுகிறது. செவிப்பறை பெரியது மற்றும் தனித்துவமானது.[2]

வாழ்விடம் மற்றும் பரவல்[தொகு]

இது சாலையோரங்களிலும், ஈரநிலங்களைச் சுற்றியும் காணப்படுகிறது.[2] இது தற்போது கர்நாடகாவில் உள்ள முடிகெரே மற்றும் மடிக்கேரியில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Frost, Darrel R. (2018). "Minervarya mudduraja (Kuramoto, Joshy, Kurabayashi, and Sumida, 2008)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 19 July 2018.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Kuramoto, M.; Joshy, S. H.; Kurabayashi, A.; Sumida, M. (2007). "The genus Fejervarya (Anura: Ranidae) in central Western Ghats, India, with descriptions of four new cryptic species". Current Herpetology 26 (2): 81–105. doi:10.3105/1881-1019(2007)26[81:TGFARI]2.0.CO;2. http://oceanrep.geomar.de/30097/1/Kuramoto.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மினர்வராயா_முத்துராஜா&oldid=3413036" இலிருந்து மீள்விக்கப்பட்டது