மித்ரா குரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மித்ரா குரியன்
பிறப்புடால்மா குரியன்
15 மே 1989 (1989-05-15) (அகவை 34)
இந்திய ஒன்றியம், கேரளம் பெரும்பாவூர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2009–தற்போது வரை
அறியப்படுவதுபாடிகார்டு
பெற்றோர்குரியன், பேபி
வாழ்க்கைத்
துணை
வில்லியம் பிரான்ஸ் (இசையமைப்பாளர்) (தி. 2015)
உறவினர்கள்டானி குரியன் (சகோதரர்)

மித்ரா குரியன் (Mithra Kurian, பிறப்பு டால்மா குரியன் ) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக மலையாளம், தமிழ் படங்களில் நடித்துவருகிறார். [1] இரண்டு மலையாள படங்களில் துணை வேடங்களில் தோன்றிய பிறகு, இரண்டு தமிழ் படங்களில் நடித்தார். பாடிகார்டு (2010) இல் சேதுலட்சுமி பாத்திரத்தில் நடித்த இவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. மேலும் அதன் தமிழ் மறுஆக்கமான காவலன் படத்தில் அவர் மீண்டும் நடித்தார். [2] [3] [4] பாடிகார்ட்டு படம் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டது . [5] [6] இவரது மற்றொரு குறிப்பிடத்தக்க பாத்திரமாக சுரேஷ் கோபி நடித்த ராம ராவணன் படத்தில் நடித்தார். [7]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் முதன்முதலில் பாசில் இயக்கிய 2004 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான விஸ்மயதும்பத்து என்ற படத்தில் நயன்தாராவின் தோழியாக ஒரே காட்சியில் துணை வேடத்தில் தோன்றினார். பின்னர் டி. ஹரிஹரன் இயக்கிய மயூகாம் திரைப்படத்தில் 2005 இல் நடித்தார். அதைத் தொடர்ந்து இவர் நடிப்பிலிருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தினார். [8] கிருகலட்சுமி இதழின் அட்டைப்படத்தில் மித்ராவைப் பார்த்த, இயக்குனர் சித்திக் தனது தமிழ் திரைப்படமான சாது மிரண்டா படத்தில் துணைவேடத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தார். பின்னர், இவர் மற்றொரு தமிழ் படமான குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சூரியன் சட்டக் கல்லூரி (2009) பட்டத்தில் நடித்தார். [9]

மித்ரா பின்னர் குறிப்பிடத்தக்க மலையாள படங்களில் நடித்தார. மேலும் குலுமல்: தி எஸ்கேப் மற்றும் பாடிகார்டு போன்ற படங்களில் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கணிசமான கவனத்தைப் பெற்றார். சிறப்பான வெற்றியை ஈட்டிய திரைப்படமான நகைச்சுவை படமான குலுமலில் இவர் முன்னணி நடிகையாக நடித்தார். சித்திக்கின் இயக்கத்தில் திலீப் நடித்த பாடிகார்டில் இவருடைய நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டுதல்கள் பெற்றது. அதன் தமிழ் மறுஆக்கமான காவலன் படத்தில் நடிக்க, சித்திக் மூலம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். [8] இவர் இன்னும் சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தார். ஆனால் அவை அதிகப்படியான அங்கீகாரத்தைப் பெற்றுத்தரவில்லை.

பிற படைப்புகள்[தொகு]

கைரளி தொலைக்காட்சியில் பிரபலமான உண்மைநிலை நிகழ்ச்சியான டான்ஸ் பார்ட்டி மற்றும் மம்மி அண்ட் மீ இரண்டிலும் இவர் நடுவராக இருந்தார்.

திருமணத்திற்குப் பிறகு இவர் பிரியசகி மூலம் தமிழ் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மலையாள சிரிய கிறிஸ்தவ பெற்றோர்களான குரியன், பேபி இணையருக்கு 15, மே, 1989 அன்று கேரளத்தின் பெரம்பவூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் டால்மா ஆகும். இவருக்கு டானி குரியன் என்ற தம்பி உள்ளார். [10] இவர் வணிக நிர்வாகத்தில் (பிபிஏ) இளங்கலை முடித்துள்ளார். மேலும் இவர் நயன்தாராவின் தூரத்து உறவினராவார். [11] [12] 2015 சனவரியில் கொச்சியில் நடந்த ஒரு விழாவில் வில்லியம் பிரான்சிஸை மணந்தார். [13]

மித்ரா தனது ஊழியர்களில் ஒருவரை தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி) அதிகாரிகள் புகார் அளித்தனர். மித்ராவும் அவரது நண்பர்களும் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலைய வளாகத்திற்குள் நுழைந்தனர். அங்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து அல்லாத பிற வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. [14] [15] தனது மகிழுந்தை உரசியதற்காக ஓட்டுநர் இராமதாசை தாக்கியதாக புகார் கூறுகிறது.

திரைப்படவியல்[தொகு]

படங்கள்[தொகு]

ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்புகள்
2004 விஸ்மயதும்பத்து மலையாளம் சரளா மேனன்
2005 மயூக்காம் மலையாளம் உன்னியின் சகோதரி
2008 சாது மிரண்டா தமிழ் லட்சுமி
2009 சூரியன் சட்டக் கல்லூரி தமிழ் மகாலட்சுமி
2009 குலுமல்: எஸ்கேப் மலையாளம் சாய்ரா
2010 பாடிகார்டு மலையாளம் சேதுலட்சுமி Winner Vanitha Film Awards for Best Supporting Actress
2010 ராம ராவணன் மலையாளம் மனோமி
2011 நோட் அவுட் மலையாளம் மாயா
2011 காவலன் தமிழ் மாது பரிந்துரை - சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
2011 உலகம் சுற்றும் வாலிபன் மலையாளம் கல்யாணி
2012 மாஸ்டர்ஸ் மலையாளம் ஷீட்டல்
2012 மகா குரு மலையாளம் பிந்தியா
2013 கந்தா தமிழ்
2013 சந்தித்ததும் சிந்தித்ததும் தமிழ் சிறப்புத் தோற்றம்
2013 லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் மலையாளம் சின்னு
2014 ஓரு கொரிய படம் மலையாளம் ஈவா
2015 புத்தனின் சிரிப்பு தமிழ் நேத்ரா
2019 நந்தனம் தமிழ் திவ்யா

தொலைக்காட்சி[தொகு]

ஆண்டு படம் மொழி அலைவரிசை பங்கு குறிப்புகள்
2010 சா ரீ கா மா மலையாளம் ஏசியநெட் பங்கேற்பாளர் விளையாட்டு நிகழ்ச்சி
2014 மம்மி அண்ட் மி மலையாளம் கைரளி தொலைக்காட்சி நடுவர் உண்மைநிலை நிகழ்ச்சி
ருச்சிபேதம் மலையாளம் ஏ.சி.வி. தொகுப்பாளர் சமையல் நிகழ்ச்சி
2014 டான்ஸ் பார்ட்டி மலையாளம் கைரளி தொலைக்காட்சி நடுவர் உண்மைநிலை நிகழ்ச்சி
2015-2016 பிரியசகி [16] [17] [18] தமிழ் ஜீ தமிழ் திவ்யா தொலைக்காட்சித் தொடர்
2017-2018 அழகு தமிழ் சன் தொலைக்காட்சி ஐஸ்வர்யா தொலைக்காட்சித் தொடர்

விருதுகள்[தொகு]

வென்றது
 • 2011 வனிதா திரைப்பட விருதுகள்
 • சிறந்த துணை நடிகை - பாடிகார்டு

குறிப்புகள்[தொகு]

 

 1. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 19 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131219055446/http://www.mathrubhumi.com/movies/interview/57804/#storycontent. 
 2. "Kaavalkaaran - Tamil Movie News - Vijay picks M G R's once again - Vijay | Kaavalkaaran | Vettaikaran - Behindwoods.com". http://www.behindwoods.com/tamil-movie-news-1/apr-10-01/kaavalkaaran-vijay-vettaikaran-05-04-10.html. 
 3. ""Bodyguard is Kaavalkaran in Tamil?" – Yahoo Movies India" இம் மூலத்தில் இருந்து 2010-08-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100829190532/http://in.movies.yahoo.com/news-detail/84595/Bodyguard-Kaavalan-in-Tamil.html. 
 4. ""Vijay'S 'Kaavalkaran' Is Fast And Glorious " – Top 10 Cinema" இம் மூலத்தில் இருந்து 23 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100423153647/http://www.top10cinema.com/news/4071/vijays-bodyguard-is-fast-and-glorious. 
 5. 'Kavalan' invited to Shanghai – Tamil Movie News – IndiaGlitz.com
 6. "Kaavalan completes 100 days". supergoodmovies இம் மூலத்தில் இருந்து 24 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110424035946/http://www.supergoodmovies.com/16410/kollywood/Kavalan-completes-100-days-News-Details. 
 7. "Mithra Kurian". popcorn.oneindia.in இம் மூலத்தில் இருந்து 11 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120311033038/http://popcorn.oneindia.in/artist-filmography/8230/2/mithra-kurian.html. 
 8. 8.0 8.1 Sathyendran, Nita (2 February 2011). "Director's actor". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/arts/cinema/article1149040.ece. Sathyendran, Nita (2 February 2011). "Director's actor". The Hindu. Chennai, India. Archived from the original on 6 February 2011. Retrieved 5 February 2011.
 9. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2 August 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110802172834/http://movies.rediff.com/report/2009/sep/28/south-review-suriyan-satta-kalloori.htm. 
 10. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 11 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141211125530/http://malayalam.filmibeat.com/news/mithra-kurian-enter-wedlock-021367.html#slide14336. 
 11. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 21 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140221024615/http://www.thehindu.com/features/cinema/article1149040.ece. 
 12. "Mithra is Nayanthara's relative!". www.behindwoods.com இம் மூலத்தில் இருந்து 11 February 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110211022455/http://behindwoods.com/tamil-movie-news-1/feb-11-02/mithra-kurian-kaavalan-08-02-11.html. 
 13. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 30 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150130020950/http://www.newindianexpress.com/entertainment/malayalam/Pretty-Mithra-Kurian-Says-I-Do/2015/01/27/article2638160.ece. 
 14. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 19 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160919231449/http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/actress-mithra-kurian-accused-of-assaulting-ksrtc-staff.html. 
 15. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 23 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160923194530/http://english.mathrubhumi.com/news/kerala/ksrtc-officials-file-assault-complaint-against-mithra-kurian-english-news-1.1351939. 
 16. Mithra Kurian makes her small screen debut - Times of India
 17. "Mithra Kurian in TV serial". http://cinema.dinamalar.com/tamil-tv-serials/33416/Chinna-thirai-Television-News/Mithra-Kurian-in-T.V.-serial.htm. 
 18. "Mithra Kurian Zee Tamil Serial Priyasakhi". http://tamil.filmibeat.com/television/mithra-kurian-zee-tamil-tv-serial-priyasakhi-035267.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்ரா_குரியன்&oldid=3779595" இருந்து மீள்விக்கப்பட்டது