மித்ராச்சி கோஷ்டா (நாடகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மித்ராச்சி கோஷ்டா
கதைவிஜய் தெண்டுல்கர்
வெளியீட்டு திகதி1981 (1981)
மொழிமராத்தி மொழி

மித்ராச்சி கோஷ்டா ( மராத்தி: मित्राची गोष्ट ) என்பது இந்திய நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கர் எழுதி இயக்கிய மராத்தி மொழி நாடகமாகும். முதன்முதலில் 1981 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இந்நாடகம், நண்பனின் கதை என்ற பெயரிலும் அறியப்படுகிறது. லெஸ்பியன் தற்பாலின ஈர்ப்பைக் கையாளுவதைக் கருப்பொருள்களாகக் கொண்ட நவீன இந்திய நாடகங்களில் முதலாவதாக இது கருதப்படுகிறது.[1]

கதைக்கரு[தொகு]

இந்நாடகம் மூன்று கல்லூரி நண்பர்களையும் அவர்களின் உறவுச்சிக்கல்களையும் பற்றியது. போதாமை உணர்வுடன், கூச்ச சுபாவமுமுள்ள இளைஞனான பபு, அவளது வீழ்ச்சிக்கு வழிவகுத்த, பெண்கள் மீது மையல் கொள்ளும் ரகசியத்தை தன்னகத்தே கொண்டுள்ள, சுதந்திரப் பெண்ணான, மித்ரா,மீது காதல் கொள்கிறான். ஆனால் எல்லாம் அழகான நமா, என்ற பெண் இவர்களின் வாழ்வில் வரும்வரையே. மித்ரா மீதான பபுவின் காதல், நமா மீதான மித்ராவின் காதல் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலானக் காதல் கதையே இந்நாடகத்தின் மையமாகும். எல்லா முரண்பாடுகளையும் எதிர்த்து, இரண்டு பெண்களும் தங்கள் உறவைத் தொடர முயற்சிக்கிறார்கள், ஆனால் அடிக்கடி, அவர்கள் தங்கள் காதலைச் சோதிக்கும் தடைகளை எதிர்கொள்கின்றனர். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் லெஸ்பியன் அடையாளங்கள் மீதான தடையை உடைத்த சிக்கலான கதாபாத்திரங்கள் மற்றும் சிக்கலான கதைக்களங்களில் ஆசிரியர் வடிவமைத்துள்ளார். நாடகம் நிகழ்த்தப்பட்ட காலத்தில் இது  தீவிரமான, முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.[1]

மிட்-டேயில் 2016 இல் வெளியான கட்டுரையின் படி, "புனே கல்லூரியில் மூன்று மாணவர்களுக்கு இடையேயான முக்கோணக் காதல் கதையை மித்ராச்சி கோஷ்டா நிகழ்த்தியுள்ளது. பபு, மித்ரா, நாமி என்பவர்களைப் பற்றிய காதல் கதை என்றாலும் இரு ஆண்கள் ஒரு பெண்ணிற்காக போராடும் வழக்கமான முக்கோண கதை அல்ல. மித்ராவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பாபுவின் விருப்பம் நிறைவேறியதும், அவளது பாலுணர்வுடன் அவளது உள்ளார்ந்த போராட்டங்களில் பங்கு பெறுகிறான், இறுதியில் அவளுக்கும் அவள் விரும்பும் பெண்ணான நமாவுக்கும் இடையே பாலியல் அரசியலை ஊசலாடும் விளையாட்டில் அவர் ஈர்க்கப்படுகிறார்." [2]

மின்ட் பத்திரிக்கையின் விமரிசனத்தின்படி, "இந்தக் காதல் சிக்கலில், பபு, சுய-உணர்வு கொண்ட மித்ரா (பாதக்) மூலம், தன் உணர்வுகளுக்குப் பிரதிபலன் செய்யும் நமாவிடம் பாலியல் ரீதியாக ஈர்க்கப்பட்டதால் காயப்படுகிறான். தற்பாலின ஆசை அந்தக் காலத்தில் அதிகம் புரிந்து கொள்ளப்படவில்லை, மேலும் முரண்பட்ட மித்ரா விரைவில் தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பாதையில் செல்கிறார். அவள் தன் உள்ளார்ந்த ஆசைகளை தியாகம் செய்ய விரும்பவில்லை என்றாலும், அவள் தவிர்க்க முடியாமல் ஒரு பழமையின் கலாச்சாரத்திற்கு பலியாகிறாள்." [3]

வெளியீடு[தொகு]

நாடகத்தின் அசலான மராத்தி மொழி பதிப்பு 1982 இல் நீல்கந்த் பிரகாஷனால் வெளியிடப்பட்டது.[4][5]

இந்நாடகத்தின் கதையின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு 2001ம் ஆண்டு கௌரி ராம்நாராயணனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்டது.[6]

பிரீமியர்[தொகு]

மராத்தியின் அசல் நாடகம் ஆகஸ்ட் 15, 1981 அன்று மஹாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள கட்கரி ரங்காயதனில் வினய் ஆப்தே, ரோகினி ஹட்டங்கடி மற்றும் உஜ்வாலா ஜோக் உட்பட அக்காலத்தின் முன்னணி மராத்தி பிரமுகர்களால் நிகழ்த்தப்பட்டது.[3][7]

தாக்கம்[தொகு]

ஃப்ரண்ட்லைன் மித்ராச்சி கோஷ்டாவை "தற்பாலின உறவுகள் பற்றிய முதல் இந்திய நாடகம், மிகவும் பிரபலமான ரோகினி ஹட்டங்கடி இந்நாடகத்தில் நடித்த போதும், திரண்ட எதிர்ப்பினால் அரங்குகள் வெறுமையாக காணப்பட்டது.[8]

இந்துஸ்தான் டைம்ஸ் படி, "டெண்டுல்கர் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் லெஸ்பியன் அடையாளங்கள் மீதான தடையை உடைத்த சிக்கலான கதாபாத்திரங்கள் மற்றும் சிக்கலான கதைக்களங்களில் வடிவமைத்துள்ளார். நாடகம் நிகழ்த்தப்பட்ட காலத்தில் இது  தீவிரமான, முற்போக்கான மற்றும் சர்ச்சைக்குரியதாக இருந்தது [1]

மிட்-டே நாடகத்தை "சர்ச்சைக்குரிய உன்னதபடைப்பு" என்றும்"பல புருவங்களை உயர்த்தியது." என்றும் விவரித்தது [2] 2001 ம் ஆண்டு மறுதயாரிக்கப்பட்ட பதிப்பை மதிப்பாய்வு செய்த மின்ட் பத்திரிகை " 1981 களில் சொல்லப்படாத லெஸ்பியனின் கதை, நிச்சயமாக பாதையை உடைத்தது." என்று கூறியுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Joshi, Poorva (2015-09-03). "Vijay Tendulkar's 34-year-old LGBT play gets English version" (in en). Hindustan Times. http://www.hindustantimes.com/art-and-culture/vijay-tendulkar-s-34-year-old-lgbt-play-gets-english-version/story-SYNbrXu48WsbWPL68XCdnO.html. Joshi, Poorva (2015-09-03). "Vijay Tendulkar's 34-year-old LGBT play gets English version". Hindustan Times. Retrieved 2017-11-28.
  2. 2.0 2.1 Mitter, Suprita (2016-07-02). "Play it like Vijay Tendulkar". மிட் டே. http://www.mid-day.com/articles/play-it-like-vijay-tendulkar/17393179. Mitter, Suprita (2016-07-02). "Play it like Vijay Tendulkar". Mid-Day. Retrieved 2017-11-28.
  3. 3.0 3.1 3.2 Phukan, Vikram (2015-09-19). "Women in love". Mint. http://www.livemint.com/Leisure/Z9Ht6HdZxPL6N9tm5XMZiI/Women-in-love.html. Phukan, Vikram (2015-09-19). "Women in love". Mint. Retrieved 2017-11-28.
  4. Natarajan, Nalini; Nelson, Emmanuel Sampath (1996) (in en). Handbook of Twentieth-century Literatures of India. Greenwood Publishing Group. பக். 247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780313287787. https://books.google.com/books?id=1lTnv6o-d_oC&pg=PA247. 
  5. (in en) Vijay Tendulkar. Katha. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788187649175. 
  6. Tendulkar, Vijay; Ramnarayan, Gowri. (2001). Mitrachi goshta, a friend's story: a play in three acts. New Delhi ; New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0195653173. https://catalog.hathitrust.org/Record/003619783. Tendulkar, Vijay; Ramnarayan, Gowri. (2001). Mitrachi goshta, a friend's story: a play in three acts. New Delhi ; New York: Oxford University Press. ISBN 0195653173.
  7. Sawant, Purvaja (2015-09-11). "Play Review: A Friend's Story". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/theatre/Play-Review-A-Friends-Story/articleshow/48901247.cms. 
  8. Ramnarayan, Gowri (2008-06-07). "Writing for life". Frontline. http://www.frontline.in/static/html/fl2512/stories/20080620251208600.htm. Ramnarayan, Gowri (2008-06-07). "Writing for life". Frontline. Retrieved 2017-11-27.