உள்ளடக்கத்துக்குச் செல்

மித்தி

ஆள்கூறுகள்: 24°44′24″N 69°48′0″E / 24.74000°N 69.80000°E / 24.74000; 69.80000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மித்தி
Mithi
مٺي مِٹّھی
நகரம்
மித்தி Mithi is located in Sindh
மித்தி Mithi
மித்தி
Mithi
மித்தி Mithi is located in பாக்கித்தான்
மித்தி Mithi
மித்தி
Mithi
ஆள்கூறுகள்: 24°44′24″N 69°48′0″E / 24.74000°N 69.80000°E / 24.74000; 69.80000
நாடுபாக்கித்தான்
Provinceசிந்து
Districtதார்பார்க்கர்
ஏற்றம்
42 m (138 ft)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்1,50,000 (நகரில் மட்டும்)[1]
 • மதிப்பீடு 
()
1,50,000 இற்கும் மேல்
நேர வலயம்ஒசநே+5 (பாக்கித்தான் சீர் நேரம்)

மித்தி (Mithi) என்பது பாக்கித்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இடம்பெற்றுள்ள தார்பார்க்கர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். மிர்பூர் காசிலிருந்து 1990 ஆம் ஆண்டு தார்பார்க்கர் மாவட்டம் பிரிக்கப்பட்ட போது மித்தி மாவட்டத் தலைநகரமாக மாறியது [2]. இசுலாமியர்கள் பெரும்பான்மை அமையாத பாக்கித்தானிய நகரங்கள் சிலவற்றில் மித்தி நகரமும் ஒன்றாகும். இந்நகர மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்து சமூகத்திற்கு சொந்தமானவர்கள் ஆவர். இந்துக்கள், இசுலாமியர்கள் இருவருமே இந்நகரில் அமைதியான முறையில் வாழ்கை நடத்துகின்றனர். இந்நகரின் குற்ற விகிதமும் குறைவான அளவிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது [3].

இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பத்தின் இந்தோ-ஆரியக் கிளையிலுள்ள ராசத்தானி மொழிகளில் ஒன்றான தாட்கி மொழி தார்பார்க்கர் மாவட்டத்தில் பேசப்படும் உள்ளூர் மொழியாகும். மார்வாரி சிந்தி மொழிக்கு மிக நெருக்கமாக உள்ள தாட்கி மொழியை உருது மற்றும் பஞ்சாபி பேசும் குடிமக்களும் புரிந்து கொள்கிறார்கள்.

நிலவியல்[தொகு]

கராச்சி நகரத்திலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில், 24°74'0வடக்கு 69°80'0கிழக்கு என்ற ஆயத்திட்ட அமைவிடத்தில் கடல் மட்டத்திலிருந்து 28 மீட்டர் அல்லது 92 அடி உயரத்தில்[4] உள்ள பாலைவனப் பகுதியில் மித்தி நகரம் அமைந்துள்ளது.

பொருளாதாரம்[தொகு]

உயர் மட்ட அளவுகளில் பொருளாதார நடவடிக்கைகளும் சமூக மேம்பாட்டு செயல்முறைகளும் இப்பகுதியில் நடைபெறுவதால் தார்பார்க்கர் மாவட்டத்தின் இதயப் பகுதியாக மித்தி நகரம் வரையறுக்கப்படுகிறது[2]. தார்பார்க்கர் மாவட்டத்தில் 9,600 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள 12 சுரங்கத் தொகுதிகள் உள்ளடங்கிய நாட்டின் மிகப்பெரிய திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்தின் திறப்பு விழாவுக்கு அனைத்து வகையான முன்தயாரிப்புகளும் தயாரிக்கப்பட்டுள்ளன என்று தார் நிலக்கரி சுரங்க ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலத்தின் கீழ் புதையுண்டுள்ள நிலக்கரியின் அளவு சுமார் 175 பில்லியன் டன் நிலக்கரியாக இருக்கும் என நம்பப்படுகிறது. உலக நிலக்கரி சுரங்கங்களின் இருப்பு அளவில் ஒப்பிடுகையில் இந்நிலக்கரி சுரங்கம் 5 வது பெரிய இருப்பு என்ற தகுதியைப் பெறுகிறது. மிகப்பெரிய இத்திட்டம் மித்தி பிராந்தியத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தார்பார்க்கரின் 9,600 கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலக்கரி சுரங்கத் திட்டத்தின் பணிகள் சீனாவின் தொழில்நுட்ப நிபுணர்களின் வருகைக்குப் பிறகு அதிக வேகத்துடன் முடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஏறக்குறைய 3,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளூர் தொழிலாளர்கள் பெரும் இயந்திரங்களை இயக்குவதற்கும் திறந்தவெளி சுரங்கத்தை உருவாக்குவதற்கும் உதவ முன்வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல புதிய சாலைகளும், ஆரம்ப உள்கட்டமைப்பு வசதிகளும், உழைப்பாளர்களுக்கான குடியிருப்பு வளாகங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன [5].

கல்வி[தொகு]

மித்தி நகரில் ஓர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமும் இராணுவப்பயிற்சிக் கல்லூரியும் அமைக்கப்படும் என்று சிந்து மாகாண அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது [6].

மக்கள்தொகை[தொகு]

மித்தி நகரத்தின் மக்கள் தொகை 2,50,000 மக்களுக்கும் மேற்பட்டிருப்பதாக தேசிய புள்ளிவிவரத் தரவு தெரிவிக்கிறது

உடல்நலம[தொகு]

நகரத்தின் சுகாதாரத் தேவைக்காக இந்நகரில் சிவில் மருத்துவமனை ஒன்றும் பல்வேறு தனியார் மருத்துவ மையங்களும் உள்ளன. எனினும், மருந்துகள் மற்றும் தொடர்புடைய பிற பொருட்கள் போன்ற அடிப்படை சுகாதார வசதிகள் போதுமான அளவுக்குக் கிடைக்கவில்லை. மேலும் கூடுதலாக, நோயாளிகள் உரிமைகள் கவனத்திற் கொள்ளப்படும் நடைமுறைகள் செயற்படுத்தப்படவில்லை. மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்சு மற்றும் பிற இலவச சேவைகளுக்கு எதிராக கடுமையான தொகையை பொதுமக்களிடம் கோருகிறது போன்ற பல வசதிக்குறைவுகள் இங்கு காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "City (town) Mithi: map, population, location". Tiptopglobe.com. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2015-07-31.
  2. 2.0 2.1 "Eco Tourism Development in Pakistan - Tharparkar". Archived from the original on 2014-07-14. பார்க்கப்பட்ட நாள் 2018-11-06.
  3. "Mithi:". Dawn.Com. பார்க்கப்பட்ட நாள் 2015-07-31.
  4. "City (town) Mithi: map, population, location". www.tiptopglobe.com. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2018-11-06.
  5. Samoon, Hanif (16 January 2016). "Thar's coal fields: mining for power".
  6. "Thar to have cadet college, university". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2018-11-06.

புற இணைப்புகள்[தொகு]

  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mithi
"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்தி&oldid=3692230" இலிருந்து மீள்விக்கப்பட்டது