மிதுபென் பெட்டிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1930 ஏப்ரல் 5 அன்று தண்டியில் மகாத்மா காந்தி . அவருக்குப் பின்னால் அவரது இரண்டாவது மகன் மணிலால் காந்தியும் மிதுபென் பெட்டிட்டும் உள்ளனர்.
மகாத்மா காந்தி, மிதுபென் பெட்டிட், சரோஜினி நாயுடு ஆகியோர் .(1930)

மிதுபென் ஆர்முச்ஜி பெட்டிட் (Mithuben Hormusji Petit) (11 ஏப்ரல் 1892 – 16 சூலை 1973) மகாத்மா காந்தியின் தண்டி உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்ற இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னோடி ஆர்வலர்களில் ஒருவர் . [1]

வாழ்க்கை[தொகு]

1892 ஏப்ரல் 11 அன்று மும்பையில் ஒரு வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சர் தீன்சா மானெக்ஜி பெட்டிட் ஆவார். அவர் நன்கு அறியப்பட்ட தொழிலதிபர் மற்றும் பரோனெட் ஆவார். [2] [3]

இந்திய சுதந்திர இயக்கம்[தொகு]

இளம் பெட்டிட் காந்தியைப் பின்பற்றுபவராகவும், இராட்டிரிய மகளிர் சபையின் செயலாளராக இருந்த இவரது தாய்வழி அத்தை மூலம் ஈர்க்கப்பட்டார். உப்புச் சத்தியாகிரகத்தில் கஸ்தூரிபாய் காந்தி சரோஜினி நாயுடு ஆகியோருடன் இவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார், கஸ்தூரிபாய் காந்தி சபர்மதியில் அணிவகுப்பைத் தொடங்கினார். சரோஜினி நாயுடு 1930 ஏப்ரல் 6 ஆம் தேதி தண்டியில் முதல் முறையாக உப்பெடுத்தார். இவர் மகாத்மா காந்தியின் பின்னால் நின்றார். இவர் ஏப்ரல் 9, 1930 அன்று பீம்ராட்டில உப்பெடுத்தலை மீண்டும் செய்தபோது. இந்த அணிவகுப்பு இந்திய சுதந்திர இயக்கத்தின் மிக முக்கியமான நிகழ்வாக இருந்தது. பெண்கள் பின்னால் இருந்த காலத்தில் (இந்தியாவில் ஆணாதிக்க கலாச்சாரம் காரணமாக) அணிவகுப்பில் முக்கிய பங்கு வகித்த மூன்று பெண்களிலஇவரும் ஒருவர். மேலும், உப்பு மீதான வரிக்கு எதிரான ஒத்துழையாமையையும் மேற்கொண்டார். [4] இவர் சர்தார் படேலின் வழிகாட்டுதலின் கீழ் இவர் 1928 ஆம் ஆண்டு பர்தோலி சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றார். இது பிரித்தானிய இராச்சியத்திற்கு எதிரான வரி விலக்கு பிரச்சாரமாகும். இவர் இந்தியாவில் மது எதிர்ப்பு இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். மேலும், மகாத்மா காந்தியுடன் நேரத்தை செலவிட்டார். குசராத்தில் அட்டவணை பழங்குடியினரிடையே மதுபான பிரச்சினையை விளக்கினார். [5]

சமூகப் பணி[தொகு]

இவர் மரோலியில் கஸ்தூரிபாய் வனசாலை என்ற ஒரு ஆசிரமத்தை அமைத்தார். இது ஆதிவாசிகள், தலித்துகள் குடும்பங்களைச் சேர்ந்த வறிய குழந்தைகளுக்கு மீன்பிடிக்கும் வலை நூற்பு, அட்டை, நெசவு, பால் பண்ணை, தோல் வேலை, தையல் துறையில் சான்றிதழ் பாடநெறி ஆகியவற்றைக் கற்பித்தது. [6] மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக அதே பெயரில் ஒரு மருத்துவமனையையும் இவர் திறந்தார். [7]

இவர் 1973 சூலை 16 இல் இறந்தார். [3]

அங்கீகாரம்[தொகு]

இவர் தனது சமூகப் பணிகளுக்காக 1961 இல் பத்மசிறீ விருதினைப் பெற்றார். [8] [9]

உசாத்துணை[தொகு]

  1. "Mahatma Gandhi, Sarojini Naidu and Mithuben Petit". gandhiheritageportal.org. பார்க்கப்பட்ட நாள் 2017-07-02.
  2. Marzban J. Giara (2000). Parsi statues. Marzban J. Giara.
  3. 3.0 3.1 Gawalkar. "पद्मश्री ‘दीनभगिनी’". http://www.loksatta.com/chaturang-news/socialist-mithuben-petit-207451/. 
  4. "The Great Dandi March – eighty years after". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-02.
  5. "anti-liquor movement". mkgandhi.org. பார்க்கப்பட்ட நாள் 2017-07-03.
  6. "Trustees". Kasturbasevashram.org. Archived from the original on 3 January 2018. பார்க்கப்பட்ட நாள் 20 July 2017.
  7. "Kasturba Sevashram". kasturbasevashram.org. Archived from the original on 12 June 2018. பார்க்கப்பட்ட நாள் 2017-07-20.
  8. "Padma Shri in 1965 for social work". padmaawards.gov.in. Archived from the original on 28 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-02.
  9. "Mithuben Petit Padma Shri" (PDF). pib.nic.in/archive/docs. Archived from the original (PDF) on 28 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதுபென்_பெட்டிட்&oldid=3036253" இலிருந்து மீள்விக்கப்பட்டது