மிதுனம் (விண்மீன் குழாம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிதுனம் (Gemini) அல்லது இரட்டை என்பது ஓரை வட்டத்தில் காணப்படும் விண்மீன் குழாம்களில் ஒன்றாகும். இது ஓரை வட்டத்தில் (இராசிச் சக்கரத்தில்) மூன்றாவதாக அமைந்துள்ளது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வானியலாளரான தொலமியினால் குறிப்பிடப்பட்ட 48 விண்மீன் குழாம்களில் இதுவும் ஒன்றாகும். தற்காலத்தில் காணப்படும் 88 நவீன விண்மீன் குழாம்களில் கூட இது உள்ளடங்கியுள்ளது. இலத்தீனில் இது இரட்டையர்கள் என அழைக்கப்படுகின்றது. கிரேக்கத் தொன்மவியலில் காணப்படும் கஸ்டர் மற்றும் பொலக்ஸ்(Castor and Pollux) எனும் இரட்டையர்களுடனும் இரட்டை (மிதுனம்) விண்மீன் குழாம் தொடர்பு

படுத்தப்படுகின்றது.   கஸ்டர் மற்றும் பொலக்ஸ் ஆகியவையே இவ்விண்மீன் குழாமில் காணப்படும் மிகப் பொலிவான உடுக்கள் (விண்மீன்கள்)ஆகும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]