உள்ளடக்கத்துக்குச் செல்

மிதிலையின் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிதிலை கலாச்சாரம் அல்லது மைதிலி கலாச்சாரம் ( Mithila culture or Maithil culture ) என்பது இந்திய துணைக்கண்டத்தின் மிதிலைப் பகுதியில் தோன்றிய கலாச்சாரத்தை குறிக்கிறது. மிதிலை இந்தியாவின் திரிகூடகம், தர்பங்கா, கோசி, பூர்னியா,முங்கேர், பாகல்பூர் மற்றும் சந்தால் பர்கானா பிரிவுகள்[1] அதை ஒட்டிய நேபாளத்தின் தெராய் சமவெளியில் அமைந்த கோசி மாநிலம், பாக்மதி மாநிலம் மற்றும் மாதேசி மாநிலங்களின் சமவெளிப் பகுதிகளை உள்ளடக்கியது.

மிதிலையில் உள்ள ஆண்களும் பெண்களும் மிகவும் மத நம்பிக்கை உடையவர்களாகவும், பண்டிகைகளுக்கு பாரம்பரிய உடையணிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். மிதிலையின் உடைகள் அதன் வளமான பாரம்பரிய கலாச்சாரத்திலிருந்து உருவாகின்றன. இடது புறம் டோரி என்ற கயிற்றால் கட்டப்பட்ட குர்த்தாவும், மிதிலா ஓவியத்துடன் கூடிய வேட்டியும், இளஞ்சிவப்பு நிறத் துண்டும் ஆண்களுக்கான பொதுவான ஆடைகளாகும். இது ஆர்வம், அன்பு, வீரம் மற்றும் தைரியத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும் அவர்களின் மணிக்கட்டில் பல்லா என்ற அணிகலனையும் தலையில் தலைப்பாகையையும் அணிவார்கள். பண்டைய காலங்களில் வண்ணங்களில் விருப்பம் இல்லை. எனவே பெண்கள் சிவப்பு ஓரங்களுடன் கூடிய வெள்ளை அல்லது மஞ்சள் நிற புடவையை அணிந்தனர். ஆனால் இப்போது அவர்கள் பல்வேறு மற்றும் வண்ணத்தேர்வுகளைக் கொண்டுள்ளனர்.[2] [3] மிதிலையின் கலாச்சாரத்தில், இது புதிய தொடக்கங்கள், ஆர்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. சிவப்பு என்பது துர்க்கையையும் குறிக்கிறது. இது புதிய தொடக்கங்கள் மற்றும் பெண்பால் சக்தியின் சின்னமாகும். சத் பூசையின் போது, மிதிலையின் பெண்கள் தையல் இல்லாமல் இருக்கும் சுத்தமான பருத்தியில் நெய்த புடவையை அணிவார்கள். இது மிதிலையின் தூய்மையான பாரம்பரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. மிதிலை பெண்களுக்கான பாரம்பரிய உடைகளில் ஜம்தானி, பனாரிசி மற்றும் பாகல்புரி போன்ற பலவும் அடங்கும். மிதிலையில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சத் பூசை, துர்கா பூஜை மற்றும் காளி பூஜை ஆகியவை மிதிலையின் அனைத்து கொண்டாட்டங்களிலும் மிக முக்கியமானதாகக் கொண்டாடப்படுகிறது.

கன்னியாதன் என்ற மைதிலி மொழித் திரைப்படத்தில் மைதில் புடவை அணிந்திருக்கும் பெண்கள்
சியா கே ராம் என்ற தொலைக்காட்சித் தொடரில் மைதில் புடவையை சீதை அணிந்துள்ளார்.

தலைப்பாகை

[தொகு]
பல்வேறு வண்ணங்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பாக் எனும் தலைக்கவசம்

பாக் என்பது மைதிலி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மைதிலி மக்களால் அணியும் ஒரு தலைப்பாகையாகும். இது மரியாதை மற்றும் கௌரவத்தைக் குறிக்கிறது.[4]

தர்பங்கா மக்களவை உறுப்பினர் கோபால் ஜி தாக்கூர், தலைப் பாகையை அணிந்து கொண்டு கலாச்சாரத்தை பிரபலப்படுத்தினார்.[5]

நடனங்கள்

[தொகு]

ஜிஜியா, துனோ-நாச் மற்றும் தோம்காச்சு ஆகியவை மிதிலை பிரதேசத்தின் கலாச்சார நடனங்கள் ஆகும்.[6] ஜிஜியா பெரும்பாலும் விஜயதசமி காலத்தில், பைரவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட வகையில் நிகழ்த்தப்படுகிறது.[7] ஜிஜியா நிகழ்த்தும்போது, பெண்கள் தங்கள் தலையில் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை வைத்து அதை சமநிலைப்படுத்தி நடனமாடுவார்கள்.[8] தர்பங்கா, முசாபர்பூர், மதுபானி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் ஜிஜியா நிகழ்த்தப்படுகிறது. மறுபுறம் துனோ-நாச், பேகூசராய், ககாரியா, கதிஹார், நௌகாச்சியா ஆகிய இடங்களில் துர்கா பூஜை நிகழ்த்தப்படுகிறது.[9]

ஓவியங்கள்

[தொகு]

மதுபானி ஓவியப் பாணி அல்லது மிதிலை ஓவியம் என்பது இந்தியா மற்றும் நேபாளத்தின் மிதிலை பிரதேசத்தில் நடைமுறையில் உள்ளது. இது பாரம்பரியமாக பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த பெண்களால் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் மிதிலையின் பெயரால் அழைக்கப்படுகிறது. அங்குதான் இது தோன்றியது.[10] மதுபானி ஓவியங்கள், மிதிலாவில் உள்ள மதுபானி என்னும் தற்கால நகரை அண்டி அமைந்துள்ள ஊர்களில் பெண்களாலேயே வரையப்பட்டு வந்தது. மரபு முறையில், இவ்வோவியங்கள் புதிதாக மெழுகப்பட்ட மண் சுவர்களிலேயே வரையப்பட்டன. தற்காலத்தில், துணி, [கடதாசி], கன்வாஸ் போன்றவற்றிலும் வரையப்படுகின்றன. இந்த ஓவியப்பாணி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்குள் அடங்கி இருப்பதனாலும், இதன் நுணுக்கங்கள், தலைமுறைகள் ஊடாகக் குடும்பங்களுக்கு உள்ளேயே இருந்து வருவதனாலும், இப்பாணி அதிகம் மாற்றம் அடையாமலேயே உள்ளது. மதுபானி ஓவியங்களில் தாவரங்களில் இருந்து பெறப்படும் நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள்.[11][12]

முக்கியத் திருவிழாக்கள்

[தொகு]
  • சத் பூசை : சத் பூஜையின் போது செய்யப்படும் பிரார்த்தனைகள்சூரியனுக்கு நன்றி காட்டுவதற்காக அர்ப்பணிக்கப்படுகின்றன.
  • சாமா_சாகேவா: என்பது ஒரு திருவிழாவாகும். இது ஒற்றுமையின் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் பறவைகள் இமயமலையில் இருந்து இந்தியாவின் சமவெளியை நோக்கி இடம்பெயரத் தொடங்கும் நவம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புற நாடகம் மற்றும் பாடல்களை உள்ளடக்கிய இத்திருவிழா, சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பைக் கொண்டாடுகிறது மேலும் புராணங்களில் விவரிக்கப்பட்ட சாமா என்றழைக்கப்படும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • ஜிவித்புத்ரிகா: முக்கியமாக இந்திய மாநிலங்களான பீகார், சார்க்கண்டு மற்றும் உத்தரப் பிரதேசம் [13] மற்றும் நேபாளத்தில் கொண்டாடப்படுகிறது; தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக (தண்ணீர் கூட அருந்தாமல்) விரதம் இருப்பார்கள்.[14]
  • விவாக பஞ்சமி : இராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் இந்துப் பண்டிகை.
  • கங்கா தசரா : கங்காவதரன் என்றும் அழைக்கப்படும் இது இது மைதிலி மக்களால் கொண்டாடப்படும் ஒரு இந்துப் பண்டிகையாகும். இந்த நாளில் புனித கங்கை வானத்திலிருந்து பூமிக்கு வந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள்.[15]
  • சரத் பூர்ணிமா (லட்சுமி பூஜை): பருவமழையின் முடிவை குறிக்கும் அறுவடைத் திருவிழா
  • துர்கா பூஜை இது தொடர்ச்சியாக பத்து நாள் நடக்கும் திருவிழா, [16] [17] இதில் கடைசி ஐந்து நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. [18] இந்து மதத்தின் சாக்த மரபில் ஒரு முக்கியமான பண்டிகை.[19] [20] [21] வடிவத்தை மாற்றும் அசுரன், மகிசுசுரனுக்கு எதிரான போரில் துர்கா தேவியின் வெற்றியை இது குறிக்கிறது. [22] [23] [upper-alpha 1] எனவே, திருவிழா தீமையின் மீது நன்மையின் வெற்றியை எடுத்துக்காட்டுகிறது, இருப்பினும் இது ஒரு பகுதி அறுவடைத் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இது அனைத்து உயிர்கள் மற்றும் படைப்புகளுக்குப் பின்னால் உள்ள தாய் சக்தியாக தேவியைக் கொண்டாடுகிறது.[25] [26]
  • காளி பூஜை : இந்து தெய்வமான காளிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்து மாதமான கார்த்திகைக் அமாவாசை தினத்தில் கொண்டாடப்படுகிறது.
  • வசந்த பஞ்சமி அல்லது சரசுவதி பூஜை இளவேனிற்காலத்தின் வருகைக்கான ஆயத்தத்தைக் குறிக்கிறது. தெற்கு ஆசிய நாடுகளில் நடைமுறையிலுள்ள இந்திய சமயங்களைச் சேர்ந்தவர்களால் பிராந்தியத்தைப் பொறுத்து வெவ்வேறு வழிகளில் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாற்பது நாட்களுக்குப் பிறகு நடைபெறும் ஹோலிகா தகனம் மற்றும் ஹோலிக்கான தயாரிப்பின் தொடக்கத்தையும் வசந்த பஞ்சமி குறிக்கிறது.[27]
  • இராம நவமி : விஷ்ணுவின் அவதாரத்தை இராம அவதாரமாகக் கொண்டாடுகிறது.[28]

இதனையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. In the Shakta tradition of Hinduism, many of the stories about obstacles and battles have been considered as metaphors for the divine and demonic within each human being, with liberation being the state of self-understanding whereby a virtuous nature & society emerging victorious over the vicious.[24]
  1. Jha, Pankaj Kumar (2010). Sushasan Ke Aaine Mein Naya Bihar. Bihar (India): Prabhat Prakashan. ISBN 9789380186283.
  2. Maithil women wore Red Boarded Yellow or White Saree during Jhijhiya Naach. Retrieved 27 March 2017.
  3. "Mithila as well as Bengal wearing शाखा पोला" www.jhajistore.com". Retrieved 12 August 2019.
  4. "Mithila: Donning Mithila's 'paag' in Houses | Patna News - Times of India". The Times of India.
  5. "Darbhanga MP meets PM Modi; demands renaming of airport". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-08-12. Retrieved 2023-03-01.
  6. Nishi Sinha (1999). Tourism Perspective in Bihar. APH. p. 39. ISBN 9788170249757.
  7. Punam Kumari (1999). Social and cultural life of the Nepalese. Mohit Publications. ISBN 978-81-7445-092-0.
  8. Nishi Sinha (1999). Tourism Perspective in Bihar. APH. p. 40. ISBN 9788170249757.
  9. "Domkach". Archived from the original on 21 February 2019.
  10. Madhubani Painting. Abhinav Publications. 2003. p. 96. ISBN 9788170171560. Archived from the original on 28 அக்டோபர் 2017. Retrieved 20 பெப்ரவரி 2017.
  11. "தீபாவளிக்கும் ஒரு சுற்றுலா உண்டு". தமிழ் தினசரி. 9 November 2015. Retrieved 9 April 2016.
  12. Carolyn Brown Heinz, 2006, "Documenting the Image in Mithila Art," Visual Anthropology Review, Vol. 22, Issue 2, pp. 5-33
  13. "Jivitputrika Vrat 2020: जीवित्पुत्रिका व्रती महिलाएं आज खोलेंगी व्रत, जानें पारण करने के लिए हर एक शुभ समय और विधि".
  14. "Jivitputrika Vrat 2016 (Jitiya 2016) Date & Hindu Panchang - Indian Astrology". 18 July 2016. Archived from the original on 1 November 2016. Retrieved 4 September 2016.
  15. "All you need to know about Ganga Dussehra". http://indiatoday.intoday.in/story/ganga-dussehra-june-significance-history/1/691870.html. 
  16. Doniger 1999.
  17. Lochtefeld 2002.
  18. "Durga Puja - a Celebration of Female Supremacy". http://www.efi-news.com/2011/10/durga-puja-celebration-of-female.html. 
  19. McDermott 2001.
  20. Foulston & Abbott 2009.
  21. Rodrigues 2003.
  22. Daniélou 1991.
  23. McDaniel 2004.
  24. McDaniel 2004, ப. 20–21, 217–219.
  25. Kinsley 1988.
  26. Donner 2016.
  27. Christian Roy (2005). Traditional Festivals: A Multicultural Encyclopedia. ABC-CLIO. pp. 192–193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57607-089-5.
  28. Hindus around the world celebrate Ram Navami today, DNA, 8 April 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதிலையின்_பண்பாடு&oldid=4373439" இலிருந்து மீள்விக்கப்பட்டது