மிட்டிலீனி சமர் (கிமு 406)
மிட்டிலீனி சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
பெலோபொன்னேசியன் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஏதென்ஸ் | எசுபார்த்தா | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
கானான் | கால்லிக்ராட்டிடஸ் | ||||||
பலம் | |||||||
70 கப்பல்கள்[1] | 170 கப்பல்கள்[2] | ||||||
இழப்புகள் | |||||||
30 கப்பல்கள்[2] |
மிட்டிலீனி சமர் (Battle of Mytilene என்பது கிமு 406 இல் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவிற்கும் இடையே நடந்த ஒரு போர் ஆகும். இதில் எசுபார்த்தன்கள் வெற்றி பெற்றனர்.
நோட்டியம் போருக்குப் பிறகு, எசுபார்த்தன் கூட்டணியின் கடற்படைக்கு படைத்தலைவராக லைசாந்தருக்கு பதில் கால்லிக்ராட்டிடஸ் என்பவர் நியமிக்கபட்டார். லெஸ்போசில் மிதிம்னாவில் திடீர் தாக்குதல் நடத்திய அவர், ஏதெனியன் கடற்படைத் தளபதி கோனனுக்கு ஒரு செய்தியை அனுப்பினார், கடலில் கோனனின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்தார். அதன்பிறகு விரைவில், கால்லிக்ராட்டிடஸ் கோனனின் எழுபது கப்பல்களைக் கடலில் கண்டு, லெஸ்போசில் உள்ள மிட்டிலீனி துறைமுகத்தை நோக்கி அவரைப் பின்தொடர்ந்தார். அங்கு நடந்த போரில், கோனான் முப்பது கப்பல்களை இழந்தார். மேலும் கோனானின் கப்பற்படையை கடலில் முற்றுகையிட்டபோது, அவர் தன்னிடம் எஞ்சியுள்ள நாற்பது கப்பல்களை கரையேற்றினார். இருந்தாலும் கால்லிக்ராட்டிடஸ் அவரை தரையில் சுற்றி வளைத்தார்.
பெலோபொன்னேசியர்களின் முற்றுகை குறித்த தகவலை தெரிவிக்க கோனான் இரண்டு கப்பல்களை அனுப்பினார். அதில் ஒன்று ஹெலஸ்பாண்டிற்கும் மற்றொன்று திறந்த வெளி கடலிலும் அனுப்பப்பட்டது. பெலோபொன்னேசியர்கள் பிந்தையக் கப்பலைக் கைப்பற்றினர். ஆனால் முந்தைய கப்பல் தப்பிச் சென்று ஏதென்சில் கோனனின் அவல நிலையை அறிவித்தது. இதற்கிடையில், கேனானுக்கு உதவுவதற்காக மிட்டிலீன் நீரிணைக்கு கூடுதலாக வந்த பத்து ஏதெனியன் கப்பல்களையும் காலிக்ராட்டிடாஸ் கைப்பற்றினார்.
கோனனின் அவல நிலையை அறிந்ததும், ஏதென்சு நூற்றுப் பத்து கப்பல்களைக் கொண்ட ஒரு கடற்படையை சாமோசுக்கு அனுப்பியது. அங்கு வந்த கடற்படையினர் சாமியன்கள் மற்றும் பிற கூட்டாளிகளிடமிருந்து கூடுதல் கப்பல்களைத் திரட்டி, கடற்படையின் அளவை நூற்று ஐம்பதாக ஊயர்த்திக் கொண்டு வந்தனர். ஏதெனியர்களை இடைமறிக்க காலிக்ராட்டிடாஸ் தனது கட்டுப்பாட்டில் இருந்த கப்பல்களில் நூற்று இருபதுடன் பயணம் மேற்கொண்டார்; இது பெரிய அர்ஜினூசி போராக உருவெடுத்தது.