மிட்டியாலா வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மிட்டியாலா வனவிலங்கு சரணாலயம் (Mitiyala Wildlife Sanctuary) இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள மிட்டியாலா என்ற கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது. மிட்டியாலா புல்வெளிகள் என்றும் இச்சரணாலயம் அழைக்கப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இந்த காடு முந்தைய பவநகர் சுதேச அரசின் ஒரு பகுதியாக இருந்தது. மிட்டியாலா வனவிலங்கு சரணாலயம் 18.22 சதுர கிலோமீட்டர் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளது 2004 ஆம் ஆண்டில் இதன் நிலை உறுதி செய்யப்பட்டது. இங்கு கிட்டத்தட்ட 11 முதல் 12 சிங்கங்கள் மற்றும் சிறுத்தைகள் உள்ளன. மேலும் புள்ளி மான்கள், நீலான் மான்கள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன. இந்த சரணாலயம் வனப்பகுதிகளுடன் பொதுவான எல்லையைப் பகிர்ந்து கொள்வதால் சிங்கங்கள் பெரும்பாலும் சாசன் கிர் வனப்பகுதிக்குச் செல்கின்றன. கிர் மற்றும் மிட்டியாலா இடையேயான பகுதி வனவிலங்குகளின் இரண்டு வாழ்விடங்களை இணைக்கும் பாதையாகச் செயல்படுகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]