மிட்சுபிசி தானுந்துகள்
வகை | பொது |
---|---|
நிறுவுகை | ஏப்ரல் 22, 1970 |
தலைமையகம் | 33-8, ஷிபா 5-சோம், மினாடோடோக்கியோ 108-8410 யப்பான் |
முதன்மை நபர்கள் | டாகஷி நிஷியோகா (மேலாண்குழுத் தலைவர்) ஒசாமு மாசுகோ (தலைவர்) ஹெகி காசுகை (செயல் உதவித்தலைவர்) |
தொழில்துறை | தானுந்து தயாரிப்பாளர் |
உற்பத்திகள் | தானுந்துகள் மற்றும் இலகு சுமையுந்துகள் |
வருமானம் | ¥1,445,616 மில்லியன் (2009)[1] |
நிகர வருமானம் | ¥4,758 மில்லியன் (2009)[1] |
பணியாளர் | 33,202 (2007) |
இணையத்தளம் | மிட்சுபிசி தானுந்துகள் வலைத்தளம் |
மிட்சுபிசி மோட்டார்சு கார்ப்பொரேசன் (Mitsubishi Motors Corporation Mitsubishi Jidōsha Kōgyō, Kabushiki gaisha?, [2]) யப்பானின் ஐந்தாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராகவும் உலகளாவிய தானுந்து உற்பத்தியில் உலகில் ஆறாவதாகவும் விளங்குகிற பன்னாட்டு தானுந்து உற்பத்தி நிறுவனம்.[3]. முந்நாளைய யப்பானின் மிகப்பெரும் தொழிற் குழுமமாகிய மிட்சுபிசி (keiretsu)வின் அங்கமாக அதன் மிட்சுபிசி கனரக தொழிலகத்தின் பிரிவாக 1970ஆம் ஆண்டு நிறுவப்பட்டது[4]. இதன் தலைமையகம் டோக்கியோவின் புறநகர்ப்பகுதி மினாடோவில் அமைந்துள்ளது.[5]. உலகில் 17 வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக உள்ளது.
இந்தியாவில் இயக்கம்
[தொகு]தனது உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தின்படி 1998ஆம் ஆண்டு மிட்சுபிசி இந்தியாவில் தனது செயலாக்கத்தைத் துவக்கியது. இந்துசுதான் மோட்டார்சின் தொழில்நுட்ப இணைவாக்கத்துடன் சென்னையில் ஓர் தொழிற்சாலையை ஏற்படுத்தி உள்ளது. இங்கு தற்போது ஆண்டுக்கு 6,000 சீருந்துகள் தயாரிக்கும் திறன் உள்ளது; இதனை அடுத்த சில ஆண்டுகளில் ஆண்டுக்கு 24,000 சீருந்துகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இங்கு உருவாக்கப்படும் சீருந்து வகைகள்:
- லான்சர் - 6வது தலைமுறை மிட்சுபிசி லான்சர்
- லான்சர் சீடியா - 7வது தலைமுறை மிட்சுபிசி லான்சர்
- பெஜேரோ* - 2வது தலைமுறை மிட்சுபிசி பெஜேரோ
- மோன்டெரோ* - 3வது தலைமுறை மிட்சுபிசி பெஜேரோ
- அவுட்லாண்டர்*
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Consolidated Financial Results for FY 2009 Full Year (April 1, 2009 through March 31, 2010)" பரணிடப்பட்டது 2012-03-09 at the வந்தவழி இயந்திரம், Mitsubishi Motors website, May 1, 2010
- ↑ ஆங்கில உச்சரிப்பு: /mɪtsʉˈbiːʃi/
- ↑ Organisation Internationale des Constructeurs d'Automobiles, World Motor Vehicle Production by manufacturer (2009), OICA.net
- ↑ History of Mitsubishi, Funding Universe (subscription required)
- ↑ Corporate Profile பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம், Mitsubishi Motors website, June 19, 2008
- Corporate history at Mitsubishi Motors' global website பரணிடப்பட்டது 2011-05-28 at the வந்தவழி இயந்திரம்
- Corporate history at Mitsubishi Motors' UK website பரணிடப்பட்டது 2011-05-21 at the வந்தவழி இயந்திரம்
- Corporate history at Mitsubishi Motors' South African website பரணிடப்பட்டது 2011-06-25 at the வந்தவழி இயந்திரம்
- Corporate history at Mitsubishi Motors' Canadian website
- Mitsubishi Motors Corporation Vehicle Manufacturer Strategic Insight, Automotive World (subscription required)
- History of Mitsubishi, Funding Universe (subscription required)
வெளியிணைப்புகள்
[தொகு]- Mitsubishi Motors global site
- Mitsubishi Motors Web Museum பரணிடப்பட்டது 2006-05-19 at the வந்தவழி இயந்திரம்
- Mitsubishi Motors Canada
- Mitsubishi Motors Peru பரணிடப்பட்டது 2010-03-28 at the வந்தவழி இயந்திரம்