மிச்சியாகி தகாகாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிச்சியாகி தகாகாசி
பிறப்பு(1928-02-17)பெப்ரவரி 17, 1928
யுசாட்டோ, ஒசாகா, யப்பான்
இறப்புதிசம்பர் 16, 2013(2013-12-16) (அகவை 85)
ச்யிட்டா, ஒசாகா மாநிலம், யப்பான்
கல்வி
பணிநச்சுயிரியல் வல்லுநர்
மருத்துவப் பணிவாழ்வு
களம்மருத்துவம்
நிறுவனங்கள்நுண்ணுயிர் நோய்களுக்கான ஆராய்ச்சி நிறுவனம், ஒசாகா பல்கலைக்கழகம்
சிறப்புத்துறைநச்சுயிரியல் வல்லுநர்
ஆய்வுசின்னம்மை

மிச்சியாகி தகாகாசி (Michiaki Takahashi) (பிப்ரவரி 17, 1928 - திசம்பர் 16, 2013) ஒரு யப்பானிய நச்சுயிரியல் வல்லுநர் ஆவார். இவர் சின்னம்மைகாக முதல் தடுப்பூசியைக் கண்டுபிடித்ததற்காகவும், ஓகா தடுப்பூசியைத் தயாரிக்க வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸைக் குறைக்கவும் பாடுபட்ட மிகவும் பிரபலமானவர்.

வாழ்க்கை[தொகு]

பிப்ரவரி 17, 1928 இல் யப்பானின் ஒசாகாவில் உள்ள ஹிகாஷிசுமியோஷி-குவில் பிறந்தார். [1] 1954-இல் ஒசாக்கா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் மருத்துவத்தில் தனது முது நிலைப் படிப்பைப் பெற்றார். மேலும் 1959-இல் அம்மை நச்சுரியியலில் முதன்மையாக மருத்துவ அறிவியல் பட்டப் படிப்பை முடித்தார். [2]

1963 -1965-க்கும் இடையில் இவர் டெக்சஸில் உள்ள பேய்லர் மருத்துவக் கல்லூரியிலும், பென்சில்வேனியாவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகத்தின் பெல்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் படித்தார்.[3]

அமெரிக்காவில் படிக்கும் போது இவரது மூத்த மகன் தெருயுகி சின்னம்மை நோயால் அவதிப்படுவதைப் பார்த்த அனுபவம் இவரை 1971-இல் சின்னம்மை தடுப்பூசியை உருவாக்கத் தூண்டியது. ஆராய்ச்சி மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் 1973 இல் முடிக்கப்பட்டது. 1984-ஆம் ஆண்டில், தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் மிகவும் பொருத்தமான சின்னம்மை தடுப்பூசி என சான்றளிக்கப்பட்டது. மேலும் 1986-ஆம் ஆண்டில், யப்பானிய சுகாதார மற்றும் நல அமைச்சகம் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் நடைமுறை பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.[1]

ஒசாகா பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவருக்கு ஓய்வு பெற்ற பேராசிரியர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.[4]

இவர் திசம்பர் 16, 2013 அன்று இதய செயலிழப்பால் இறந்தார்.[5][1]

விருதுகள்[தொகு]

  • சபுரோ கோஜிமா நினைவு கலாச்சார விருது (1975)[3]
  • நீர்க்கோளவான் சின்னம்மை குழல் அமைப்பின் மூன்றாவது அறிவியல் சாதனை விருது (1997).[6]
  • இள்வரசர் மஹிதோல் விருது (2008).[6]

கௌரவங்கள்[தொகு]

தடுப்பூசிக்கான யப்பானிய சங்கம் தகாகாசியின் நினைவாக வருடாந்திர பரிசை வழங்குகிறது [7] தடுப்பூசிக்கான யப்பானிய சங்கம் தகாகாசி பரிசு, அக்டோபர் 2005 இல் நிறுவப்பட்டது.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Yardley, William (22 December 2013). "Michiaki Takahashi, 85, Who Tamed Chickenpox, Dies". The New York Times. https://www.nytimes.com/2013/12/22/health/michiaki-takahashi-85-who-tamed-chickenpox-dies.html. 
  2. Artenstein, Andrew W. (11 December 2009). Vaccine development. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781441911087. https://books.google.com/books?id=ewdL8ilILZAC&q=takahashi+michiaki%E3%80%801928&pg=PA266. 
  3. 3.0 3.1 Artenstein, Andrew W. (11 December 2009) (in en). Vaccines: A Biography. Springer Science & Business Media. பக். 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4419-1108-7. https://books.google.co.in/books?id=ewdL8ilILZAC&pg=PA267&lpg=PA267&dq=Saburo+Kojima+Memorial+Culture+Award+(1975)&source=bl&ots=bquaPvwBKL&sig=ACfU3U2QThgYAov2jNLMTJbDvVn1_bwZzg&hl=en&sa=X&ved=2ahUKEwiigKf4-IX2AhUjQ_UHHQtCCBQQ6AF6BAggEAI#v=onepage&q=Saburo%20Kojima%20Memorial%20Culture%20Award%20(1975)&f=false. 
  4. Takahashi, Dr. Michiaki (November 1998). "Dedication". The Journal of Infectious Diseases 178 (s1): Siii–iii. doi:10.1086/514252. https://academic.oup.com/jid/article/178/Supplement_1/Siii/922904. 
  5. "訃報:高橋理明さん85歳=大阪大名誉教授、ウイルス学" (in Japanese). Mainichi Shimbun. Archived from the original on December 19, 2013. பார்க்கப்பட்ட நாள் December 19, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. 6.0 6.1 日本人名大辞典+Plus, ブリタニカ国際大百科事典 小項目事典,デジタル版. "高橋理明とは". コトバンク (in ஜப்பானியம்).{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  7. "高橋賞" (in Japanese). The Japanese Society for Vaccinology website. பார்க்கப்பட்ட நாள் December 19, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிச்சியாகி_தகாகாசி&oldid=3390842" இலிருந்து மீள்விக்கப்பட்டது