உள்ளடக்கத்துக்குச் செல்

மிசேல் தெவோரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசேல் தெவோரே
தெவோரே 2017-இல்
பிறப்புமிசேல் தெவோரே
1953
துறைசுருங்கிய பொருள் இயற்பியல்
பணியிடங்கள்பிரான்சு கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்ஓர்சே பல்கலைக்கழகம் (முனைவர்)
விருதுகள்மிசியசு குவையம் பரிசு
ஜான் பெல் பரிசு (2013)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2025)

மிசேல் தெவோரே (Michel Devoret, பிறப்பு: 1953)[1][2] பிரெஞ்சு இயற்பியலாளரும் யேல் பல்கலைக்கழகத்தில் எப். டபுள்யூ பெய்னெக் பயன்முறை இயற்பியல் பேராசிரியரும் ஆவார். இவர் யேலில் உள்ள பயன்பாட்டு இயற்பியல் மீச்சிறுபொருள் உருவாக்க ஆய்வகத்தின் இயக்குநராகவும் பதவி வகிக்கிறார்.[3] தற்போது, இவர் கூகிள் குவையம் செயற்கை நுண்ணறிவில் தலைமை அறிவியலாளராகவும் உள்ளார். பெரியல் புரை ஊடுருவு மின்னோட்டம், ஒற்றை-எலக்ட்ரான் எக்கி ஆகியவற்றில் மேற்கொண்ட முன்னோடிப் பணிகளுக்காகவும், சுற்று குவையம் மின்னியக்கவிசையியல், மின்னியக்க அணுவியல் துறைகளைத் தொடங்குவதற்கான புதிய பங்களிப்புகளுக்காகவும் இவர் அறியப்படுகிறார்.

மீக்கடத்துத்திறன் துறையில் இவரது பணிகளுக்காக 2025ஆம் ஆண்டு தெவோரேவிற்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.[4]

ஆராய்ச்சி

[தொகு]

ஏ. மார்பிள்சுடோனுடன் இணைந்து குவையம் தகவல் குறித்த இவரது பணி, குவாண்டம் பின்னல் விளைவாக சில தகவல் தொடர்பு அலைவரிசைகளில் ஓர் அதிவேக குவைய மேம்பாட்டைக் காட்டியுள்ளது (குவையம் போலி-தொலைவிலுணர்தலலையும் பார்க்கவும்).[5] [ முதன்மை அல்லாத மூல தேவை ]

கௌரவங்களும் விருதுகளும்

[தொகு]

2021ஆம் ஆண்டில், மிசியசு குவையம் பரிசு தெவோரெட், ஜான் கிளார்க், யசுனோபு நகமுரா ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டது.[6]

பல விருதுகளுக்கு மேலதிகமாக, "மீக்கடத்தும் குவிட்கள் மற்றும் நுண்ணலை ஒளியன்கள்களை பின்ன வைப்பதின் அடிப்படை, முன்னோடி சோதனை முன்னேற்றங்கள், குவையம் தகவல் செயலாக்கத்தில் இவற்றின் பயன்பாடு" ஆகியவற்றிற்காக 2013ஆம் ஆண்டில் ஜான் இசுடீவர்ட் பெல் பரிசு (இராபர்ட் ஜே. இசுகோல்காஃப் உடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது) இவருக்கு வழங்கப்பட்டது.[7]

2025ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு, மின்சார சுற்றுகளில் பேரியலான குவையம் புரை ஊடுருவு மின்னோட்டம், ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக தெவோரெட், கிளார்க் மற்றும் ஜான் எம். மார்டினிசு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.[4]

விருதுப் பட்டியல்

[தொகு]
  • ஆம்பியர் பரிசு, பிரெஞ்சு அறிவியல் அகாதமி, 1991
  • டெஸ்கார்ட்ஸ்-ஹூஜென்ஸ் பரிசு, ராயல் நெதர்லாந்து கலை மற்றும் அறிவியல் அகாடமி, 1995
  • தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமி, 2003
  • யூரோபிசிக்சு-அஜிலன்ட் பரிசு, ஐரோப்பிய இயற்பியல் சங்கம், 2004
  • பிரான்ஸ் கல்லூரியில் பேராசிரியர் பதவி, 2007 – 2012[8]
  • பிரெஞ்சு அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், 2007
  • ஜான் பெல் பரிசு, 2013[9]
  • பிரிட்சி இலண்டன் நினைவு பரிசு, 2014
  • ஒல்லி வில் லவுனசுமா நினைவு பரிசு, 2016
  • மிசியசு குவையம் பரிசு, 2021 [6]
  • இயற்பியலுக்கான காம்சுடாக் பரிசு, 2024
  • இயற்பியலுக்கான நோபல் பரிசு, 2025[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Michel Devoret" (in பிரெஞ்சு). Collège de France.
  2. "Nobel Prize in Physics 2025". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-07.
  3. "Michel Devoret - Department of Applied Physics".
  4. 4.0 4.1 4.2 Nobel Prize (2025-09-15). Announcement of the 2025 Nobel Prize in Physics. Retrieved 2025-10-07 – via YouTube.
  5. A. Marblestone and M. Devoret, "Exponential Quantum Enhancement for Distributed Addition with Local Nonlinearity", Quantum Information Processing, Vol. 9, No.1 (2010).
  6. 6.0 6.1 "John Clarke Is A Co-Recipient Of The Micius Quantum Prize | Physics". physics.berkeley.edu. Retrieved 2025-10-07.
  7. "2013: Devoret and Schoelkopf". Archived from the original on 2014-06-04. Retrieved 2016-08-07.
  8. "Michel Devoret" (in பிரெஞ்சு). Collège de France.
  9. "Michel Devoret and Robert Schoelkopf win the John Stewart Bell Prize | Department of Physics". physics.yale.edu. Retrieved 2025-10-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசேல்_தெவோரே&oldid=4392987" இலிருந்து மீள்விக்கப்பட்டது