மிசேல் டி கிரெட்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிசேல் டி கிரெட்சர்
Michelle de Kretser
இனம் இலங்கையர்
நாட்டுரிமை ஆத்திரேலியா
கல்வி நிலையம் மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
மைல்சு பிராங்கிளின் விருது (2013)
துணைவர்(கள்) கிறிஸ் ஆண்ட்ரூஸ்

மிசேல் டி கிரெட்சர் (Michelle de Kretser, பிறப்பு: 11 நவம்பர் 1957) ஆத்திரேலியப் புதின எழுத்தாளரும், இலங்கையில் பிறந்தவரும் ஆவார். 1972 ஆம் ஆண்டில் தனது 14வது அகவையில் ஆத்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தவர்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

கொழும்பு நகரில் பிறந்த மிசேல் கொழும்பு மெதடித்தக் கல்லூரியிலும்[2] பின்னர் மெல்பேர்ண், மற்றும் பாரிசிலும் கல்வி கற்றார்.

லோன்லி பிளானெட் என்ற சுற்றுலா நிறுவனம் ஒன்றில் 1999 ஆம் ஆண்டில் பணியாற்றும் போது "த ரோஸ் குரோவர்" (The Rose Grower) என்ற தனது முதலாவது புதினத்தை எழுதி வெளியிட்டார். 2003 ஆண்டில் இவர் வெளியிட்ட "த ஹாமில்ட்டன் கேஸ்" (The Hamilton Case) என்ற இரண்டாவது நூலுக்கு தாஸ்மேனியா பசிபிக் விருது, ஐக்கிய இராச்சியத்தின் என்கோர் விருது, பொதுநலவாய எழுத்தாளர்கள் விருது ஆகியன கிடைத்தன. 2007 ஆம் ஆண்டில் "த லொஸ்ட் டாக்" (The Lost Dog) என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் 2008 ஆம் ஆண்டுக்கான மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 13 நூல்களில் ஒன்றாகும். 1989 முதல் 1992 வரை Australian Women's Book Review இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். Questions of Travel என்ற இவரது நான்காவது நூலுக்கு 2013 ஆம் ஆண்டுக்கான மைல்ஸ் பிராங்கிளின் விருது (ஆ$60,000) கிடைத்தது.

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "De Kretser, Michelle". AustLit (2006-11-01). பார்த்த நாள் 2013-06-19.
  2. Where she comes from

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசேல்_டி_கிரெட்சர்&oldid=1442785" இருந்து மீள்விக்கப்பட்டது