மிசுக்கால் பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 11°15′N 75°46′E / 11.25°N 75.77°E / 11.25; 75.77
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிஸ்கால் பள்ளிவாசல்
மிஸ்கால் பள்ளிவாசலின் நுழைவாயிலிருந்து தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்தற்கால இந்தியா, கோழிக்கோடு, குச்சிறா
புவியியல் ஆள்கூறுகள்11°15′N 75°46′E / 11.25°N 75.77°E / 11.25; 75.77
சமயம்இசுலாம்

மிஸ்கால் பள்ளிவாசல் ( மலையாளம் : മിശ്കാൽ പള്ളി, Mishkal Mosque இது Mithqal Mosque [1] என்றும் உச்சரிக்கப்படுகிறது) என்பது தென்னிந்தியாவின், கேரளத்தின், மலபார் கடற்கரையில் கோழிக்கோட்டில் அமைந்துள்ள ஒரு இடைக்கால பள்ளிவாசல் ஆகும். இது, கேரளத்தில் எஞ்சியிருக்கும் சில இடைக்கால பள்ளிவாசல்களில் ஒன்றாகவும், ஒரு முக்கிய, கலாச்சார வரலாற்று, கட்டடக்கலை நினைவுச்சின்னமாகவும் கருதப்படுகிறது. .

இந்த பள்ளிவாசல் 14 ஆம் நூற்றாண்டில் கப்பல் உரிமையாளரும், வணிகருமான மிஸ்கால் என்ற முஸ்லீமால் கட்டபட்டது. [2] [1] 1340 களில் கோழிக்கோட்டில் வணிகம் செய்துவந்த மிஸ்கால் - "இந்தியா, சீனா, யேமன், பாரசீகம் போன்றவற்றுடன் வர்த்தகம்" செய்து "பெரும் செல்வத்தையும்" கப்பலையும் கொண்டிருந்தார். [3] நகுடாக்கள் என்று அழைக்கப்படும் கப்பல் உரிமையாளர்கள் இடைக்கால இந்தியப் பெருங்கடலோடிகளாக உலகின் பணக்கார வணிகர்களாவர்.

கோழிக்கோட்டில் தெக்கேபுரம் கடற்கரையின் ஒரு பகுதியான குட்டிச்சிறா பகுதியில் மிஸ்கால் பள்ளிவாசல் அமைந்துள்ளது.

பள்ளிவசலின் மற்றொரு தோற்றம்

1510 ஆம் ஆண்டில், கோழிகோடு மீது போர்த்துகீசியர் தாக்குதல் நடத்தியபோது பள்ளிவாசலின் ஒரு பகுதி எரிக்கப்பட்டது. மசூதியின் மேல் தளங்கள் அந்த சேதங்களின் எச்சங்கள் இன்றும் உள்ளன. [2] [4] மிஸ்கால் பள்ளிவாசல் குறித்து நான்கைந்து செவிவழிக் கதைகள் உள்ளன. இது 1510 எரிக்கபட்ட பின்னர் 1578/79 [1] கேரளத்தில் இதைபோன்ற இடைக்கால பள்ளிவாசல்களில் பொதுவாக, இதுபோன்றே குவிமாடங்கள், மினார்கள் இல்லாமல் மரங்களை அதிக அளவில் பயன்படுத்தி கட்டபட்டுள்ளன.

இந்த பள்ளிவாசலை ஒட்டி குட்டிச்சிறா குளம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய குளம் உள்ளது. நான்கு அடுக்குகள் கொண்ட இந்த பள்ளிவாசல் கட்டடத்தில் 47 கதவுகள், 24 செதுக்க வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள். 400 பேர் தங்கக்கூடிய ஒரு பெரிய தொழுகை மண்டபம் போன்றவை உள்ளன. பிரார்த்தனை மண்டபம் நன்கு காற்றோட்டமாகவும், அழகிய மர வேலைப்பாடுகளுடன் உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Prange, Sebastian. ''Monsoon Islam: Trade and Faith on the Medieval Malabar Coast". Cambridge University Press, 2018. 78-81. 135-36.
  2. 2.0 2.1 "Mishkal Mosque at Kuttichira". Archived from the original on 2009-04-26. பார்க்கப்பட்ட நாள் 2009-11-03.
  3. Prange, Sebastian. ''Monsoon Islam: Trade and Faith on the Medieval Malabar Coast". Cambridge University Press, 2018. 78- 81.
  4. "Mishkal Mosque". Archived from the original on 2008-09-29. பார்க்கப்பட்ட நாள் 2009-11-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசுக்கால்_பள்ளிவாசல்&oldid=3567574" இலிருந்து மீள்விக்கப்பட்டது