உள்ளடக்கத்துக்குச் செல்

மிக்கைல் மிக்கைலோவிச் செராசிமோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு நாணயத்தில் மிக்கைல் செராசிமோ

மிக்கைல் மிக்கைலோவிச் செராசிமோ (உருசியம்: Михаи́л Миха́йлович Гера́симов) (2 செப்டம்பர் 1907 – 21 சூலை 1970) என்பவர் ஒரு சோவியத் தொல்லியல் ஆய்வாளர் மற்றும் மானுடவியலாளர் ஆவார். இவர் மானிடவியல், தொல்லியல், தொல்லுயிரியல் மற்றும் தடய அறிவியல் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு தடயவியல் சிற்பமுறைத் தொழில்நுட்பத்தை உருவாக்கினார். மண்டை ஓடுகளை ஆய்வு செய்து இறந்துபோன 200க்கும் மேற்பட்ட மனிதர்களின் முகங்களை மீள் உருவாக்கம் செய்துள்ளார். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தைமூர்[1], உருசியாவின் நான்காம் இவான் மற்றும் பிரெடரிக் சில்லர் ஆகியோராவர்.

உசாத்துணை

[தொகு]
  1. "Facial Reconstruction, Nazis, and Siberia: The story of Mikhail Gerasimov". 25 January 2011. பார்க்கப்பட்ட நாள் 9 November 2020.