மிக்கி ஜேம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிக்கி ஜேம்ஸ்

மிக்கி லாரி ஜேம்ஸ்-ஆல்டிஸ் (பிறப்பு ஆகஸ்ட் 31, 1979) [1][2] ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர் மற்றும் நாட்டுப் பாடகர் ஆவார். ஒரு மல்யுத்த வீரராக, இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் பிராண்ட் முக்கிய நிகழ்வுகளுக்கு வர்ணனையாளராக உள்ளார் மற்றும் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் ஸ்மாக்டவுன் நிகழ்ச்சியில் மல்யுத்தப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.[3] ஜேம்ஸ் 1999 இல் தனது தொழில்முறை மல்யுத்த வாழ்க்கையினைத் தொடங்கினார். அப்போது இவர் அலெக்சிஸ் லரீ எனும் பெயரில் மல்யுத்தம் செய்தார்.[4]

அக்டோபர் 2005 இல் ஜேம்ஸ் தனது உலக மல்யுத்த பொழுதுபோக்கு (டபிள்யுடபிள்யுஇ) முக்கிய பட்டியலில் இடம்பெற்றார் மற்றும் டிரிஷ் ஸ்ட்ராடஸுடன் ஏற்பட்ட சில சிக்கள்களினால் இவர் பரவலாக அறியப்படார்.[4][5][6] ரெஸ்டில்மேனியா 22 இல் நடைபெற்ற போட்டியில் இவர் தனது முதல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன மகளிர் வாகையாளர் பட்டத்தினைப் பெற்றார். இந்த பட்டத்தை இவர் மொத்தம் ஐந்து முறை வென்றுள்ளார். ஜேம்ஸ் தனது முதல் பெண்கள் வாகையாளர் பட்டத்தினை 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற நைட் ஆஃப் சாம்பியன்ஸில் வென்றார், இதன்மூலம் இந்தப் பட்டங்களை ஐது முறை வென்ற இரண்டாவது பெண் எனும் சாதனை படைத்தார்.[7] இவர் ஏப்ரல் 22, 2010 அன்று உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு டி என் ஏவில் சேர்ந்தார்.

ஜேம்ஸ் மூன்று முறை டி.என்.ஏ நாக் அவுட்ஸ் வாகையாளர் பட்டத்தினையும், 2013 டி.என்.ஏ உலகக் கோப்பையையும் வென்றார் . இவர் செப்டம்பர் 2013 இல் டி.என்.ஏவை விட்டு வெளியேறினார்.[8][9] உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் மற்றும் டி என் ஏ மல்யுத்தப் போட்டிகளில் ஜேம்ஸ் ஒன்பது முறை வாகையாளர் ஆனார். இது ஒரு தேசிய சாதனையாகும்.[10][11] மற்றும் மல்யுத்த வரலாற்றில் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன டிவாச் பட்டம் உலக மற்போர் மகிழ்கலை நிறுவன பெண்கள் வாகையாளர் மற்றும் டி என் ஏ நாக்அவுட் வாகையாளர் பட்டம் ஆகிய மூன்று பட்டங்களையும் பெற்ற ஒரே பெண் வீரர் எனும் சாதனை ப்டைத்துள்ளார்.[12] புரோ மல்யுத்த இல்லஸ்ட்ரேட்டட் (பிடபிள்யூஐ) 2009 ஆம் ஆண்டில் ஜேம்ஸை முதலிடத்தில் பெண் மல்யுத்த வீரராக மதிப்பிட்டது, மேலும் இவர் இரண்டு முறை ஆண்டின் சிறந்த பெண்மணியாகவும் தேர்வானார். 2009 ஆம் ஆண்டில் முதல் முறையாகவும், 2011 ஆம் ஆண்டில் மீண்டும் பிடபிள்யூஐ வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜேம்ஸ் , வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உள்ள ரிச்மண்ட் மெமோரியல் மருத்துவமனையில் பிறந்தார். இவர் ஓய்வுபெற்ற கழிவு நீர் சுத்திகரிப்பு தொழிலாளியான லேண்ட்ஸ்கேப்பர், மற்றும் வெயில் லீக் பிரிவு 3 பயிற்சியாளர் மற்றும் ஆசிரியரும் முகவருமான சாண்ட்ரா நக்கல்ஸ் ஆகியோரின் மகள் ஆவார்.[2] இவர் சிறு வயதாக இருக்கும் போதே இவருடைய பெற்றோர் விவாகரத்து செய்தனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி, இளைய சகோதரி, இளைய சகோதரர், மற்றும் மூன்று மாற்றாந்தாய் சகோதரர்கள் உள்ளனர்.[2] இவர் வர்ஜீனியாவின் மான்ட்பெலியரில் வளர்ந்தார் மற்றும் 1997 இல் பேட்ரிக் ஹென்றி உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[2][13] வளர்ந்து வரும் போது, இவர் தனது பாட்டியின் குதிரை பண்ணையில் அதிக நேரம் செலவிட்டார், மேலும் குதிரைச்சவாரி விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வத்தை வளர்த்தார்.[13] இவர் ஐந்து ஆண்டுகள் வயலின் வாசித்தார் .[14]

சான்றுகள்[தொகு]

 1. Leggett, Steve. "Mickie James". Rovi. மூல முகவரியிலிருந்து January 6, 2017 அன்று பரணிடப்பட்டது. Additional January 6, 2017.
 2. 2.0 2.1 2.2 2.3 "The Ballad of Mickie James" (December 23, 2010). மூல முகவரியிலிருந்து April 5, 2012 அன்று பரணிடப்பட்டது. "Born at Richmond Memorial Hospital in 1979...."
 3. Mike, Johnson (December 8, 2016). "EXCLUSIVE MICKIE JAMES-WWE UPDATE (SPOILER)".
 4. 4.0 4.1 Oliver, Greg (May 26, 2006). "Mickie James quick to dish out credit". Canadian Online Explorer.
 5. Ian Hamilton. Wrestling's Sinking Ship: What Happens to an Industry Without Competition (p.222)
 6. "Mickie see, Mickie do". World Wrestling Entertainment.
 7. "Mickie James' Title History". World Wrestling Entertainment. மூல முகவரியிலிருந்து April 9, 2007 அன்று பரணிடப்பட்டது.
 8. James leaves TNA after declining contract extension yardbreaker.com. September 15, 2013. Retrieved December 26, 2013.
 9. Mr Anderson and Mickie James officially finished with TNA rajah.com. September 23, 2013. Retrieved December 26, 2013.
 10. Mickie James Sets New Record wrestlinginc.com. February 9, 2011. Retrieved December 26, 2013.
 11. New Knockouts champion crowned பரணிடப்பட்டது திசம்பர் 26, 2013 at the வந்தவழி இயந்திரம் diva-dirt.com. May 26, 2013. Retrieved December 26, 2013.
 12. Mickie James wins TNA Knockouts Title – Details tnawrestlingnews.com. May 24, 2013. Retrieved December 26, 2013.
 13. 13.0 13.1 Strauss, Gerry. "Hardcore Country".
 14. Corrigan, John (October 22, 2013). "Corrigan: Leaving the ring for a honky-tonk". மூல முகவரியிலிருந்து October 29, 2013 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்கி_ஜேம்ஸ்&oldid=2989445" இருந்து மீள்விக்கப்பட்டது