மிகை பணவீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ஜைன்டைனா நாட்டின் மிகை பணவீக்கத்தை காட்டும் வரைபடம்

பொருளாதாரத்தில், மிகை பணவீக்கம் என்பது பணவீக்கம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை குறிக்கிறது. நாட்டில் பொருட்களுக்கான விலைகள் மிக வேகமாக அதிகரிக்கும் போது பணம் அதன் மதிப்பை வேகமாக இழக்கிறது. ஒரு நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி அளவுக்கு அதிகமாக உள்ளது போது இந்நிலை ஏற்பட காரணமாகிறது.

மிகை பணவீக்கத்தின் ஒரு உதாரணம் 1920களில் ஜெர்மனி ஆகும். ஜெர்மணி 1922ல், மிகப்பெரிய வங்கிப் பணத்தாள் மதிப்பு 50,000 ரீச்மார்க்[1]ஆகும். 1923 இல் மிகப்பெரிய வங்கித்தாள் 100,000,000,000,000 ரீச்மார்க் ஆகும். 1923 டிசம்பரில் மாற்று விகிதம் 4,200,000,000,000 ரீச்மார்க்கிற்கு 1 அமெரிக்க டாலராக இருந்தது.[2] இந்த ரூபாய் தாட்கள் மிகவும் பயனற்றவை. மக்கள் அவற்றை உடல் சூட்டிற்காக நெருப்பில் எரித்தார்கள். பணத்தாள்கள், வாங்கக்கூடிய மரத்தை விட நீண்ட நேரம் எரியும். சில சமயங்களில் பணவீக்க விகிதம் மிக அதிகமாக இருந்ததால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பொருட்களின் விலைகள் இரட்டிப்பாகும். இந்த சிக்கலை தடுக்க 15 அக்டோபர் 1923 அன்று ஜெர்மனி ரென்டென்மார்க் [3] எனும் புதிய பணத்தாட்கள் அச்சிட்டது. இதன் மாற்று விகிதம் 1 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டது.

ஜிம்பாப்வே நாட்டில், சூலை 2008ல் மிகை பணவீக்க விகிதம் 23,11,50,888% ஆக இருந்தது. [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகை_பணவீக்கம்&oldid=3662354" இருந்து மீள்விக்கப்பட்டது