மிகை நோக்கல்
மிகை நோக்ககல் (Binge-watching also called binge-viewing) என்பது தொலைக்காட்சியில் அல்லது திறண்பேசியில் பொழுதுபோக்கு அல்லது தகவல் உள்ளடக்கத்தை இடைவிடாமல் நீண்ட நேரத்திற்கு பார்க்கும் ஒரு பழக்கமாகும்.
புள்ளியியல்
[தொகு]மிகை நோக்கல் குறித்து 2014 பெப்ரவரியில் நெடிபிலிக்ஸ் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், "தொலைக்காட்யின் ஒரே நிகழ்ச்சியின் 2-6 அத்தியாயங்களை தொடர்ந்து ஒரே அமர்வில் பார்ப்பது" மிகை நோக்கல் என்று 73% பேர் வரையறுத்தனர்.[1] சில ஆய்வாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சியின் சூழல் மற்றும் உள்ளடக்கத்தின் அடிப்படையில் மிகை நோக்கலை வரையறுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். பொதுவாக மிகை நோக்கல் என்று அழைக்கப்படுவது உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட தோலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் அனுபவத்தைக் குறிக்கிறது என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நீண்ட நேரம் உட்கார்ந்து (தொடர்ச்சியாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களை ஒரே அமர்வில் பார்ப்பது) மேலும் ஒரு நிகழ்ச்சியின் முழுப் பருவங்களையும் (அல்லது சீசன்களின்) விரைந்து பார்ப்பது ஆகிய இரண்டையும் உள்ளடக்கும் வகையில் மிகை நோக்கல் என்ற கருத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர்.[2]
2006-2007 காலக்கட்டத்தில் காணொளி ஓடை சேவைகளின் அதிகரிப்புக்குப் பிறகு, ஒரு குறிப்பிடத்தக்க பண்பாட்டு நிகழ்வாக மிகை நோக்கல் பிரபலமாகியுள்ளது, அதாவது நெடிபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, குலு போன்றவற்றின் மூலம் பார்வையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்கும் வசதிகள் வந்தன.[3] எடுத்துக்காட்டாக, நெட்ஃபிக்ஸ் கணக்கெடுப்பில் பங்கேற்பாளர்களில் 61% பேர் தாங்கள் தொடர்ந்து பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.[1] முக்கிய அமெரிக்க காணொளி ஓடை வழங்குநர்களின் கோரிய நேரத்து ஒளிதம் தரவை அடிப்படையாகக் கொண்ட அண்மைய ஆய்வில், 64% க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் ஆண்டிற்கு ஒருமுறை மிகை நோக்கியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 West, Kelly (2013-12-13). "Unsurprising: Netflix Survey Indicates People Like To Binge-Watch TV". Cinema Blend. Archived from the original on February 22, 2014. பார்க்கப்பட்ட நாள் February 12, 2014.
- ↑ Anghelcev, George; Sar, Sela; Martin, Justin; Moultrie, Jas L (2021). "Binge-Watching Serial Video Content: Exploring the Subjective Phenomenology of the Binge-Watching Experience". Mass Communication and Society 24 (1): 130–154. doi:10.1080/15205436.2020.1811346. https://www.researchgate.net/publication/343894973.
- ↑ Poniewozik, James (July 10, 2012). "Go Ahead, Binge-Watch That TV Show". Time. Archived from the original on October 31, 2013. பார்க்கப்பட்ட நாள் September 7, 2013.