மிகைவெப்ப விரும்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிகைவெப்ப விரும்பிகள் (Hyperthermophile) என்பன ஒருவகை உச்ச விரும்பிகள் ஆகும். இவை மிகச் சூடான சூழலிலும் (60 முதல் 100 டிகிரி செல்சியசு வரை) வாழக் கூடியவை. 80 டிகிரி செல்சியசில் இவை நன்கு வளரக் கூடியவை. மிகைவெப்ப விரும்பிகள் பெரும்பாலும் ஆர்க்கியா தொகுதி உயிரினங்களே. சில பாக்டீரியங்களும் மிகைவெப்ப விரும்பிகளாக உள்ளன. பல மிகைவெப்ப விரும்பிகள் அமில விரும்பிகளாகவும் உள்ளன. இவை அமிலவெப்ப விரும்பிகள் என்று அழைக்கப்படுகின்றன. முதன் முதலாக 1965 ஆண்டு ஆண்டு, தாமசு புரோக்கு என்பவர் யெல்லோசுட்டோன் தேசியப் பூங்காவில் உள்ள வெந்நீர் ஊற்றுகளில் மிகைவெப்ப விரும்பிகளைக் கண்டறிந்தார்[1][2]. அன்று முதல் இது வரை 70க்கும் மேற்பட்ட மிகைவெப்ப விரும்பிகள் இனங்காணப்பட்டுள்ளன[3].

சான்றுகள்[தொகு]

  1. Joseph Seckbach, et al.: Polyextremophiles - life under multiple forms of stress. Springer, Dordrecht 2013, ISBN 978-94-007-6487-3,preface; @google books
  2. The Value of Basic Research: Discovery of 117termus aquaticus and Other Extreme Thermophiles
  3. Hyperthermophilic Microorganisms
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகைவெப்ப_விரும்பி&oldid=1891477" இருந்து மீள்விக்கப்பட்டது