மிகிர் சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகிர் சென்
பிறப்பு(1930-11-16)16 நவம்பர் 1930
புருலியா, மன்பம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு11 சூன் 1997(1997-06-11) (அகவை 66)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிநீச்சல் வீரர், தொழிலதிபர்
வாழ்க்கைத்
துணை
பெல்லா வீங்கார்டன் சென்
பிள்ளைகள்சுப்ரியா சென்
விருதுகள்1959இல் பத்மசிறீ
1967இல் பத்ம பூசண்
1967இல் பிளிட்சு நேரு கோப்பை

பிளிட்சு நேரு கோப்பை

மிகிர் சென் (Mihir Sen) (16 நவம்பர் 1930 - 11 சூன் 1997) இவர் ஓர் இந்திய நீண்ட தூர நீச்சல் வீரரும், தொழிலதிபருமாவார். 1958 ஆம் ஆண்டில் டோவர் முதல் கலே வரை ஆங்கிலக் கால்வாயை நீந்திய முதல் இந்தியர் இவராவார். நான்காவது வேகமான நேரத்தில் (14 மணி & 45 நிமிடங்கள்) இதனை செய்தார். ஒரு நாட்காட்டி ஆண்டில் (1966) ஐந்து கண்டங்களின் பெருங்கடல்களை நீந்திய ஒரே மனிதர் இவராவார். பாக்கு நீரிணை, தார்தனெல்சு நீரிணை, பொசுபோரசு, ஜிப்ரால்ட்டர், பனாமா கால்வாயின் முழு நீளம் ஆகியவையும் இதில் அடங்கும்.[1] இந்த தனித்துவமான சாதனை இவருக்கு கின்னஸ் புத்தகத்தில் "உலகின் மிகப் பெரிய நீண்ட தூர நீச்சல் வீரர்" என்ற இடத்தைப் பெற்றுத் தந்தது.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் 1930 நவம்பர் 16 ஆம் தேதி மேற்கு வங்காளத்தின் புருலியாவில் மருத்துவர் ரமேஷ் சென்குப்தாவிற்கும், அவரது மனைவி லீலாவதிக்கும் பிறந்தார். கட்டக்கில் சிறந்த பள்ளிகள் இருந்ததால் இவரது தாயாரின் முயற்சியால், இவரது எட்டு வயதில் கட்டக்கிற்கு அனுப்பப்பட்டார்.[1]

ஒடிசாவின் புவனேசுவரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். இவர் பட்டிக்குத் தயாராவதற்காக இங்கிலாந்து செல்ல விரும்பினார். ஆனால் நிதி பற்றாக்குறையாலும், ஒடிசாவின் அப்போதைய முதல்வரின் ஆதரவின்மையாலும் இது கைகூடவில்லை. ஆயினும்கூட, 1950 ஆம் ஆண்டில், முதலமைச்சர் பிஜு பட்நாயக்கின் உதவியுடன் இங்கிலாந்து செல்லும் கப்பலில் செல்ல முடிந்தது. அவருக்கு ஒரு பெட்டியும், £ 10ம் ஒரு வழி மூன்றாம் வகுப்பு பயணச் சீட்டும் வழங்கப்பட்டது.[1]

இங்கிலாந்து வாழ்க்கை[தொகு]

இங்கிலாந்தில், இவர் ஆரம்பத்தில் ஒரு இரயில் நிலையத்தில் இரவு நேர சுமை தூக்குபவராக பணிபுரிந்தார். பின்னர், இவர் இந்திய தூதராலயத்தில் இந்தியா மாளிகையில் பணியமர்த்தப்பட்டார். இவர் நவம்பர் 21, 1951 இல் சட்டம் படிக்க லிங்கனின் விடுதியில் சேர்ந்தார். இவர் இந்தியா மாளிகையில் பகல் முழுவதும் வேலை செய்தார். இரவில் வீட்டில் படித்தார். லிங்கனின் விடுதியில் விரிவுரைகளில் கலந்துகொள்ள இவரால் முடியவில்லை. மேலும் இவர் நூலகத்திலிருந்து கடன் வாங்கிய புத்தகங்களிலிருந்து சுய ஆய்வு செய்தார். 9 பிப்ரவரி 1954 இல் லிங்கனின் விடுதியில் உள்ள பட்டியில் அழைக்கப்பட்டார். இந்த நேரத்தில், இவர் தனது வருங்கால பிரித்தானிய மனைவி பெல்லா வீங்கார்டனை லண்டனில் உள்ள சர்வதேச இளைஞர் விடுதியில் ஒரு நடனத்தில் சந்தித்தார்.[1]

நீச்சல் தொழில்[தொகு]

லண்டன் இந்தியா மாளிகையில் நடைபெற்ற விழாவில் நீச்சல் கழகம் சார்பாக பிரீபெர்க் பிரபு இவருக்கு ஒரு சான்றிதழை வழங்கினார்

1950 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கால்வாயை நீந்திய முதல் அமெரிக்க பெண்மணி புளோரன்சு சாத்விக் பற்றி ஒரு உள்ளூர் செய்தித்தாளில் இவர் ஒரு கட்டுரையைப் படித்தார். மேலும் இந்த சாதனையை தனது நாட்டிற்காக மீண்டும் செய்ய ஊக்கம் பெற்றார். இந்த நேரத்தில், இவருக்கு நீச்சலில் எந்த அனுபவமும் இல்லை. எனவே இவர் பிரீஸ்டைல் நுட்பத்தில் தேர்ச்சி பெறும் வரை உள்ளூரில் பயிற்சிகளை மேற்கொண்டார்.[1]

சில தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, 1958 செப்டம்பர் 27 அன்று டோவர் முதல் கலே வரை ஆங்கிலக் கால்வாயைக் (நான்காவது வேகமான நேரத்தில் 14 மணி 45 நிமிடங்கள்) நீந்திய முதல் இந்தியர் ஆனார் [3] . 1959 இல் இந்தியா திரும்பியதும், இவருக்கு பத்மசிறீ விருது அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் வழங்கப்பட்டது.

பின்னர் இவர் ஒரு நாட்காடி ஆண்டில் (1966) ஐந்து கண்டங்களின் பெருங்கடல்களை நீந்திய முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். ஆரம்பத்தில், பால்கு நீரிணை நீச்சலைப் பதிவுசெய்து செல்லவும் இவர் இந்திய கடற்படைக்கு செலுத்த ரூ .45,000 திரட்ட வேண்டியிருந்தது. இவர் நிதியுதவி செய்பவர்கள் மூலம்( குறிப்பாக கொல்கத்தா தினசரி, ஸ்டேட்ஸ்மேன் ) பாதி பணத்தை திரட்ட முடிந்து. மேலும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மீதமுள்ள தொகையை வழங்கினார்.

ஏப்ரல் 5–6 அன்று இலங்கை, தனுஷ்கோடி (இந்தியா) இடையே 25 மணி 36 நிமிடங்களில் பால்க் நீரிணைக்கு குறுக்கே நீந்திய முதல் இந்தியரானா. அட்மிரல் ஆதார் குமார் சாட்டர்ஜி ஐ.என்.எஸ் சுகன்யா, ஐ.என்.எஸ் சாரதா என்ற கப்பல்களை இவருடன் அனுப்பி இவருக்கு ஆதரவளித்தார். ஆகத்து 24 ஆம் தேதி, ஜிப்ரால்ட்டர் நீரிணையை (ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்கா வரை) 8 மணி 1 நிமிடத்தில் கடந்து வந்த முதல் ஆசியர் ஆனார். செப்டம்பர் 12 ஆம் தேதி 40 மைல் நீளமுள்ள டார்டனெல்லெஸ் ( ஐரோப்பாவின் கல்லிபோலிலிருந்து செதுல்பாஹிர், அனத்தோலியா) நீந்திய உலகின் முதல் மனிதர் (13 மணி 55 நிமிடங்களில்). அதே ஆண்டில், போசுபரசை (துருக்கி) 4 மணிநேரத்தில் நீந்திய முதல் இந்தியரும், 34 மணி 15 நிமிடங்களில் பனாமா கால்வாயின் முழு (50 மைல் நீளமும்) முழுவதும் நீந்திய முதல் அமெரிக்கரல்லாதவர் (மற்றும் மூன்றாவது மனிதர்) ஆவார். மற்றும்

இந்த சாதனை நீண்ட தூர நீச்சலுக்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இவருக்கு ஒரு இடத்தைப் பிடித்துத் தந்தது. இவருக்கு 1967 ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்தி பத்ம பூசண் விருது வழங்கினார். அதே ஆண்டில், உலகின் ஏழு கடல்களிலும் இவர் செய்த சாதனைகளுக்காக பிளிட்சு நேரு கோப்பையையும் வென்றார்.

இந்தியாவில் வாழ்க்கை[தொகு]

1958 இல் இந்தியா திரும்பிய பின்னர் (இவரது ஆங்கிலக் கால்வாய் வெற்றியின் பின்னர்), சங்கங்களில் "வெள்ளையர் மட்டும்" என்ற கொள்கை காரணமாக இவருக்கு நுழைவு மறுக்கப்பட்டது. இந்த விதியை ஒழிக்க ஒரு உயர் ஊடக பிரச்சாரத்தை வழிநடத்த இது இவரை கட்டாயப்படுத்தியது. இதன் விளைவாக, இந்தியா முழுவதும் உள்ள சங்கங்கள் அனைத்து இந்தியர்களுக்கும் தங்கள் கதவுகளைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இவர் ஆரம்பத்தில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டத்தை பயின்றார். ஆனால் பின்னர் இவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆனார். இவரது நிறுவனம் நாட்டின் இரண்டாவது பெரிய பட்டு ஏற்றுமதியாளராக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.[1]

1977 ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் தேர்தலில் போட்டியிட்ட இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) ஜோதி பாசுக்காக, பிரச்சாரம் செய்ய இவரை அணுகியபோது இந்த திருப்பம் ஏற்பட்டது. பதிலுக்கு, இவருக்கு மாநில அரசாங்கத்தில் ஒரு உயர் பதவி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. பொதுவுடைமை எதிர்ப்பு என்பதால், இவர் மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக பாசுவுக்கு எதிராக ஒரு சுயேட்சை வேட்பாளராக தனது ஆவணங்களை தாக்கல் செய்தார். இந்திய பொதுவுடைமைக் கட்சி வென்றவுடன், பாசு பழிவாங்கும் விதமாக இவரைப் பின் தொடர்ந்தார். முறையாக இவரது தொழிலை நசுக்கினார்.[4]

இறப்பு[தொகு]

இவர், ஆல்சைமர் நோயாலும், நடுக்குவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சூன் 1997 இல் தனது 66 வயதில் இறந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Begging recall". Statesman News Service. The Statesman, 6 January 2013. Archived from the original on 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 26 January 2013.
  2. "Mihir Sen Hailed Greatest". The Indian Express. 1 January 1970. p. 16. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.
  3. Bose, Anjali, Samsad Bangali Chariutabhidhan, Vol II, (in வங்காள மொழி)p. 268, Sishu Sahitya Samsad Pvt. Ltd., ISBN 81-86806-99-7
  4. "Remembering Mihir Sen". Indiatimes.com.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mihir Sen
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகிர்_சென்&oldid=3905129" இலிருந்து மீள்விக்கப்பட்டது