மிகப்பெரிய ஆலமரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகப்பெரிய ஆலமரம் கொல்கத்தா

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : ஃபைகஸ் பெங்கலன்சிஸ் Ficus benghalensis


குடும்பம் : மோரோசியீ (Moraceae)

மரத்தின் அமைவு[தொகு]

உலகின் மிகப் பெரிய ஆலமரம் கல்கத்தாவில் உள்ளது. இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இது 1792-ம் ஆண்டு முளைத்தது. அத்தி வகையைச் சேர்ந்ததால் ஃபைகாஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெங்கலன்சிஸ் என்பது வங்கத்தைக் குறிக்கிறது. தாவர நூலாசிரியர்கள் வங்க பகுதியில் நிறைய ஆலமரங்களை கண்டதால் அப்பகுதியே இதன் தாயகம் எனக்கொண்டு இந்த இணைப்பு பெயரை சேர்த்துள்னர்.

ஆலமரம் 100 அடி உயரம் வளரக்கூடியவை. கிளைகளிலிருந்து விழுது என்னும் ஓட்டுவேர்கள் மிகுதியாக உண்டாகி, கீழ்நோக்கி வளர்ந்து நிலத்தில் புகுந்து, வேர்களைப் போல் உணவை உறிஞ்சுகிறது. கிளைகள் வலுவில்லாதது. அதனால் விழுதுகள் கிளைகளை தாங்கி நிற்கின்றன. விழுதுகளின் நுனியில் அசோடபாக்டர் என்ற நுண்ணியிர்கள் வாழ்வால் திறம்பட நைட்ரஜனை எந்நிலையிலும் பெற்று தழைத்து வளர்கிறது. கல்கத்தாவில் உள்ள ஆலமரத்தில் 1835 விழுதுகள் உள்ளன. இம்மரம் மூன்று ஏக்கர் நிலப்பரப்பதில் படர்ந்து உள்ளது. இதன் அடிமரம் இற்றுப்போய் 1925-ம் ஆண்டு அப்புறப்படுத்திவிட்டார்கள். ஆலமரத்தின் பூக்கள் மிகச் சிறியவை. மஞ்சரியாக இருக்கும். ஓர் இலைக்கணுச் சந்துக்கு இரண்டு மஞ்சரிகள் இருக்கும். ஆண் பூ, பெண் பூ, மலட்டுபூ மூன்றும் அதிகமாக இருக்கும். இம்மரத்தை பானியன் ட்ரீ என்றும் அழைப்பார்கள். வியாபாரிகளை பனியா என்று அழைப்பார்கள். இவர்கள் இம்மரத்தடியில் தங்கி கடை விரித்தும், வழிபாடு செய்வதை வைத்தும் பனியாக்களின் மரம் என்ற பெயரை பெற்றது. ஆங்கிலேயர்கள் பானியன் ட்ரீ என அழைத்தார்கள்.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகப்பெரிய_ஆலமரம்&oldid=3610832" இருந்து மீள்விக்கப்பட்டது