மிகச் சிறிய மரம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
வகைப்பாடு
[தொகு]தாவரவியல் பெயர் : சாலிஸ் கெர்பேசியா Salix herbacea
குடும்பம் : சாலிக்கேசியீ (Salicaceae)
இதரப் பெயர் : வில்லோ (Willow)
மரத்தின் அமைவு முறை
[தொகு]இது உலகின் மிகச் சிறிய மரமாகும். இது 2.5 செ.மீ. (ஒரு இஞ்ச்) உயரமே வளரக்கூடியது. அடர்த்தியாகவும், விளிம்பு பற்கள் போன்றும் உள்ளது. இதனுடைய பூக்கள் பூனைவால் மஞ்சரி போன்றது. இது வெள்ளை நிறப் பூக்களாகும்.
இச்செடியின் தண்டு மிகச்சிறியது. இது மிகமிக மெதுவாக வளர்கிறது. இதனுடைய தண்டு பென்சில் அளவு தடிமன் ஆவதற்கு 100 வருடங்கள் ஆகிறது. இந்த மரம் துருவப்பகுதியில் பனி நிறைந்த பகுதியில் வளர்கிறது.
இச்சாதியில் 300 இனம் உள்ளது. இவற்றில் மரங்கள், சிறுசெடிகள் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் ஈரம் நிறைந்த ஈரமான பகுதியில் வளர்கின்றன. இவைகள் அழகிற்காக வளர்க்கிறார்கள்.
சிறப்பு வகை
[தொகு]பீட்டுலா நானா (Betula nana) என்கிற பீர்ச்மரம் தன்னுடைய வாழ்நாளில் 2.5 அடி உயரம் மட்டுமே வளர்கிறது.
மேற்கோள்
[தொகு]| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001
- ↑ சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.