உள்ளடக்கத்துக்குச் செல்

தெலுங்குத் தாய் வாழ்த்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மா தெலுகு தல்லிக்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

என் தெலுங்குத் தாய்க்கு (தெலுங்கு: మా తెలుగు తల్లికి) என்பது “மா தெலுகு தல்லிக்கி” என்று தெலுங்கு மொழியில் தொடங்கும் ஒரு தெலுங்கு மொழிப் பாடலாகும். இந்தப் பாடல் ஆந்திரப் பிரதேச அரசின் ஏற்பு பெற்ற பாடலாகும். தெலுங்குத் தாய் குறித்த இப்பாடலுக்கு சித்தூர் சங்கரம்பாடி சுந்தராச்சாரி என்ற கவிஞர், தீன பந்து என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக எழுத, தங்குதுரி சுர்யகுமாரி என்ற பாடகி இசையமைத்துப் பாடினார். பின்னர் இப்பாடல் ஆந்திரப் பிரதேச அரசால் அதாகாரப்பூர்வமாக ஏற்க்கபட்டது.

பாடல் வரிகள்[தொகு]

தெலுங்குப் பாடலின்
தமிழ் எழுத்துப் பெயர்ப்பு
பாடலின் இணையான தமிழ்ப் பொருள்
மா தெலுகு தல்லிகி மல்லெபூதண்ட எங்கள் தெலுங்குத் தாய்க்கு மல்லிகை மலர் மாலையை அணிவிப்போம்
மா கன்னதல்லிகி மங்களாரதுலு, மங்கல நறுமணப் பொருட்களை சமர்ப்பித்துப் போற்றுவோம்.
கடுபுலோ பங்காரு கனுசூபுலோ கருண, அவள் கருவில் தங்கம் உள்ளது, அவள் பார்வையில் கருணை உள்ளது.
சிருனவ்வுலோ ஸிருலு தொரலிஞ்சு மாதல்லி. அவள் சிரிப்பில் செல்வம் பொதிந்துள்ளது, அவளே எங்கள் தாய்
கலகலா கோதாரி கதலிபோதுண்டேனு தடுமாறாமல் பாய்கிறது கோதாவரி ஆறு
பிராபிரா க்ரிஷ்ணம்ம பருகுலிடுதுண்டேனு நேர்த்தியான கட்டுப்பாட்டோடு பாய்கிறது கிருஷ்ணா ஆறு
பங்காரு பண்டலே பண்டுதாயீ தங்கப் பயிர்கள் விளைகின்றன
முரிபால முத்யாலு தொருலுதாயி. அழகிய முத்துகள் குவிகின்றன
அமராவதினகர அபுரூப ஸில்பாலு அமராவதி நகரின் சிறப்புமிக்க சிற்பங்களும்
த்யாகய்ய கொந்துலோ தாராடு நாதாலு தியாகய்யரின் குரலில் பரவும் இனிய பாடல்களும்
திக்கய்ய கலமுலொ திய்யந்தனாலு திக்கன்னரின் நடையில் எழுந்த இலக்கியச் சுவையும்
நித்யமை நிகிலமை நிலசி வுண்டேதாகா காலம் முழுவதும் மாறாது சிறந்து விளங்குவன
ருத்ரம்ம புஜஸக்தி மல்லம்ம பதிபக்தி ருத்ரம்மாவின் மாண்பும் மல்லம்மாவின் கற்பும்
திம்மரஸு தீயுக்தி, க்ருஷ்ணராயல கீர்தி திம்மரசுவின் வீரமும் கிருஷ்ணராயரின் வீரதீரச் செயல்களும்
மா செவுலு ரிங்குமனி மாரும்ரோகேதாக எங்கள் செவியில் என்றென்றும் கேட்டுக் கொண்டே இருக்கும்
நீ பாடலே பாடுதாம், நீ ஆடலே ஆடுதாம் உன் நடனத்தை ஆடுவோம், உன் பாடலைப் போற்றிப் பாடுவோம்.
ஜை தெலுகு தல்லி, ஜை தெலுகு தல்லி ..... . எங்கள் தெலுங்குத் தாய்க்கு வெற்றி, தெலுங்குத் தாய்க்கு வெற்றி