மா. தவசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மா. தவசி, ஓர் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள முதுகுளத்தூரில் பிறந்த இவர், தமிழில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் சமூக அவலங்கள் தொடர்பான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதி இருக்கிறார். தென்னிந்தியாவில் நிகழும் சேவல் சண்டை தொடர்பான சேவல் கட்டு என்ற புதினத்திற்காக 2011 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாகித்திய அகாதமியின் விருதுப் பட்டியல் (பிடிஎப் வடிவில்),
  2. தமிழகத்தை சேர்ந்தவருக்கு சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருது (தினகரன்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._தவசி&oldid=2715113" இருந்து மீள்விக்கப்பட்டது