மா. ஜம்புலிங்கம் முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ராவ் பகதூர் மா. ஜம்புலிங்கம் முதலியார்(M. Jambulingam Mudaliar, 22 ஜூன், 1890 - 28 அக்டோபர், 1970) என்பவர் ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டறிந்து, நெய்வேலி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைக்க காரணமாகவும், நிறுவனம் அமைய 620 ஏக்கர் விளைநிலத்தை தானமாக கொடுத்தவரும் ஆவர்.[1][2]

பிறப்பு[தொகு]

அன்றைக்கு தென்னார்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கடலூர் வட்டத்தில் பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் செங்குந்த கைக்கோளார் மரபில் வசதிவாய்ந்த பெருநிலக்கிழார் மாசிலாமணி முதலியார் - சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தனர். இவர் விஜயலட்சுமி அம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள்.[3][4]

வகித்த பதவிகள்[தொகு]

 • தென்னார்க்காடு மாவட்டத்தில் தாலுகா போர்டு மெம்பர் ஆக இருந்துள்ளார் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்
 • கடலூர் மாவட்ட தாலுக்கா போர்டு தலைவராக 6 ஆண்டுகளும், ஜில்லா போர்டு மெம்பர் ஆக மூன்று ஆண்டுகளும் பணியாற்றினார்.
 • ஜில்லா போர்டு தலைவராக மூன்று ஆண்டுகளும் பதவி வகித்தார்.
 • கடலூர் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக மூன்று ஆண்டுகளும்

நகர மன்ற தலைவராக மூன்று  ஆண்டுகளும் பணியாற்றினார்.

 • நெல்லிக்குப்பத்தில் பேரூராட்சி தலைவராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
 • இவரின் நேர்மையான மக்கள் பணியை பாராட்டும் வகையில் ஆங்கிலேய அரசு ராவ் பகதூர் பட்டம் கொடுத்தது.[5][6][7][8][9]

செய்த மக்கள் பணிகள்[தொகு]

நெல்லிக்குப்பம் பேரூராட்சி தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலை முழுமூச்சாக கொண்டு வந்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டத்திற்கும் கடலூர் மாவட்டத்திற்கு தொடர்வண்டி பாதை இவர் தலைமையில் அமைத்துக் கொடுத்தார்

புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட தனது சொந்த செலவில் முழு முனைப்புடன் ஈடுபட்டு அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்காக பாலத்தை கட்டி கொடுத்தார்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம்[தொகு]

ஜம்புலிங்க முதலியார் தனக்குச் சொந்தமான நெய்வேலி கிராமத்து விவசாய நிலத்தில் தண்ணீருக்காகக் புதிய கிணறு தோண்டும்போது, கறுப்பு நிற திரவப்பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அதை அன்றைய ஆங்கிலேய அரசின் புவியியல்துறையின் கவனத்துக்கு அனுப்பிவைத்தார் ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. பின்பு இவரே தன் சொந்த செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு நிலக்கரி இருப்பதை கண்டுப்பிடித்தான்.[10]

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், அப்போது முதலமைச்சராக இருந்த இராஜாஜியிடம் அணுகி இந்த நிலக்கரி இருப்பதை பற்றி விளக்கினார். இருப்பினும் அரசு கண்டுக்கொள்ளவில்லை. பின்பு காமராஜர் முதலமைச்சர் ஆனா பின்பு அவர்களை அணுகி அவரிடம் விளக்கிக் கூறியுள்ளார் பின்பு காமராஜர் மூலமாக அன்று பாரத பிரதமராக இருந்த நேருவை சந்தித்து அவரிடம் விளக்கத்தை தந்துள்ளார்.[11][12][13][14] நிறுவனம் தொடங்க அன்று 150 கோடி ரூபாயை தேவைப்பட்டதால் மத்திய அரசு இதற்க்கு உதவி செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இதனை அறிந்த ஜம்புலிங்கம் முதலியார் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் உருவாக்த் தேவைப்படும் 620 ஏக்கர் நிலத்தை காமராஜர் தலைமையிலான மாநில அரசுக்கு தானமாக கொடுக்கிறேன் என்று அறிவித்தார்.[15]

நிறுவனத்துக்கு தேவைப்படும் நிலங்கள் ஜம்புலிங்கம் முதலியார் தானமாக வழங்கியதால் காமராஜர் தலைமையிலான மாநில அரசு, மத்திய அரசின் உதவி இல்லாமல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைத்தது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) இந்த நிறுவனத்திற்கு தானமாக ஜம்புலிங்கம் முதலியார் கொடுத்த 620 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு 2,500 கோடி ரூபாய் ஆகும்.[16]

இன்றைக்கு தென்னிந்தியாவிற்கு தேவைப்படும் மின்சாரம் 90 சதவீதம் அனல்மின் நிலையத்தில் இருந்துதான் உருவாக்கப்படுகிறது. இந்த  தென்னிந்திய அனல்மின் நிலையங்களுக்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி அனைத்தும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இருந்து அனுப்பப்படுகிறது.[17]

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் அனல் மின் நிலையம் 50,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இந்நிறுவனம் பல லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.[18]

நினைவுகள்[தொகு]

இவருக்கு நெய்வேலி குடியிருப்பில் முழு உருவ சிலை உள்ளது. இவர் பெயரில் நெய்வேலி குடியிருப்பில் ஓர் சாலை உள்ளது.[19]

உருதுணை[தொகு]

 1. "Tribute to a Trail Blazer" (PDF). Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited (in English). NLC India Limited. January–April 2013. p. 4.CS1 maint: date format (link) CS1 maint: unrecognized language (link)
 2. சொல்லாத சொல்
 3. [1]
 4. "Tribute to a Trail Blazer" (PDF). Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited (in English). NLC India Limited. January–April 2013. p. 4.CS1 maint: date format (link) CS1 maint: unrecognized language (link)
 5. "Rich tributes paid to Jambulinga Mudaliar" (17 March 2013).
 6. "History of Neyveli".
 7. "History".
 8. "NLC Recruitment 2015-2016 for 100 Graduate Executive Trainee Posts" (7 December 2015).
 9. "Tribute to a Trail Blazer" (PDF). Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited (in English). NLC India Limited. January–April 2013. p. 4.CS1 maint: date format (link) CS1 maint: unrecognized language (link)
 10. [ https://books.google.co.in/books?id=bK45AQAAIAAJ&q=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&dq=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&hl=en&sa=X&ved=2ahUKEwjS9J3f9s_sAhXVb30KHUSLDEMQ6AEwAHoECAIQAg நெய்வேலி]
 11. "History of Neyveli, Origin of Neyveli, Liginite in Neyveli".
 12. https://www.myheritage.com/names/jambulingam_mudaliar
 13. "Chairman's Message to Employees".
 14. "கடலூர்என்எல்சிக்கு 600 ஏக்கர் கொடுத்த ஜம்புலிங்க முதலியாருக்கு வெண்கலச் சிலை". தினமணி. 26 February 2013. https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2013/feb/26/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-600-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-638337.html. 
 15. [ https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/ ஜம்புலிங்கனார் பிறந்தநாள்]
 16. Kalaimakaḷ
 17. என்.எல்.சி லிமிடெட்
 18. என்.எல்.சி லிமிடெட்
 19. "Tribute to a Trail Blazer" (PDF). Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited (in English). NLC India Limited. January–April 2013. p. 4.CS1 maint: date format (link) CS1 maint: unrecognized language (link)