மா. சுப்பிரமணியம் (ஈரோடு)
தோற்றம்
மா. சுப்பிரமணியம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | எம். சின்னசாமி |
| பின்னவர் | சு. முத்துசாமி |
| தொகுதி | ஈரோடு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 ஆகத்து 1935 ஈரோடு |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| தொழில் | வணிகர் |
மா. சுப்பிரமணியம் (M. Subramanian) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரைச் சேர்ந்தவர். ஈரோடு மாசான உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினைப் பயின்றுள்ளார். இளங்கலைப் படிப்பினை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் இளநிலைச் சட்டப்படிப்பினை சென்னை அரசு சட்டக் கல்லூரியிலும் முடித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஈரோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | மா. சுப்பிரமணியம் | 47,809 | 61.16% | 2.02% | |
| காங்கிரசு | கே. பி. முனுசாமி | 30,358 | 38.84% | 5.27% | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 17,451 | 22.33% | -3.25% | ||
| பதிவான வாக்குகள் | 78,167 | 69.24% | -9.34% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,15,588 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 2.02% | |||