மா. சுப்பிரமணியன்
தோற்றம்
மா. சுப்பிரமணியன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | கோ. இளங்கோவன் |
| பின்னவர் | துரை கோவிந்தராசன் |
| தொகுதி | திருவையாறு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 14 ஏப்ரல் 1949 கோனேரிராஜபுரம், தஞ்சாவூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| வாழிடம் | கோனேரிராஜபுரம், நடுக்காவேரி, தஞ்சாவூர் மாவட்டம் |
| தொழில் | விவசாயி |
மா. சுப்பிரமணியன் (M. Subramanian) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கோனேரிராஜபுரம் கிராமத்தினைச் சேர்ந்தவர். திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி உயர்நிலைப் பள்ளி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருவையாறு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். [1]