மா. சா. மா. இராமச்சந்திரன்
தோற்றம்
மா. சா. மா. இராமச்சந்திரன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | மு. தமிழ்க்குடிமகன் |
| பின்னவர் | மு. தமிழ்க்குடிமகன் |
| தொகுதி | இளையான்குடி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 6 மார்ச்சு 1956 தேவக்கோட்டை |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | வழக்குரைஞர் |
மா. சா. மா. இராமச்சந்திரன் (M. S. M. Ramachandran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நகரைச் சேர்ந்தவர். இளநிலை அறிவியல், இளங்கலைச் சட்டப் படிப்பினை முடித்துள்ள இராமச்சந்திரன் வழக்குரைஞர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இராமச்சந்திரன், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் இளையான்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]