மா. கமலவேலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மா. கமலவேலன் திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இவர் இந்திய மத்திய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1961 ஆம் ஆண்டில் இருந்து சிறுவர் நூல்களை எழுதி வருகிறார். சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளிலும் இவரது பங்களிப்பு உள்ளது. வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள், உரைச் சித்திரங்கள் வழங்கியுள்ளார்.

இவர் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு 1998ம் ஆண்டு மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்கி உள்ளது. கண்ணன், அரும்பு கோகுலம், சிறுவர்மணி ஆகிய சிறுவர் இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • சாகித்ய அகாதெமி குழந்தைகள் இலக்கியத்துக்கான “பாலசாகித்ய புரஸ்கார் விருது” "அந்தோணியின் ஆட்டுக்குட்டி" என்ற சிறுவர் நூலுக்கு கிடைத்துள்ளது. இப்பரிசு பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் மா.கமலவேலன்[1].
  • கோவை லில்லிதேவ சிகாமணிவிருது,
  • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது,
  • தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்ற விருது
  • அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேஷய்யா விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. எழுத்தாளர் மா.கமலவேலனுக்கு பாலசாகித்ய புரஸ்கார் விருது, தினமணி, ஆகத்து 27, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._கமலவேலன்&oldid=2636545" இலிருந்து மீள்விக்கப்பட்டது