மா. இளங்கண்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மா. இளங்கண்ணன் (பிறப்பு: ஆகத்து 18 1938) சிங்கப்பூரில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை கலைமகள் தொடக்கப் பள்ளியில் கற்றார்.

தொழில்[தொகு]

தகவல் கலை அமைச்சில் தமிழ்த் தட்டச்சராக அரசுப் பணியில் இணைந்து ஓய்வுபெறும் வரை 30 ஆண்டுகள் அப்பணியிலேயே சேவைசெய்தார். இவர் தொண்டன் எனும் இதழின் ஆசிரியராகவும், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இலக்கியப் பணி[தொகு]

1967ல் எழுதத் தொடங்கிய இவரின் முதல் படைப்பு ‘தீவலி' எனும் சிறுகதை 'தமிழ் முரசி'ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து சிறுகதை, நாவல் போன்ற துறைகளில் அதிகம் ஈடுபாடுகாட்டி வந்த இவர் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

 • வழி பிறந்தது (1975)
 • குங்குமக் கன்னத்தில் (1977)
 • கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன (1998)
 • தூண்டில் மீன் (2001)
 • வைகறைப் பூக்கள் (1990)
 • நினைவுகளின் கோலங்கள் (1993)
 • 2001: தூண்டில் மீன்.
 • 2001: இலட்சியங்களின் ஊனங்கள் (in People on the Bridge: An Anthology of ASEAN Short Stories; translated into Malay as Harapan Sapuna).
 • 2004: சுற்றிப் பார்க்க வந்தவர் (in கண்ணில் தெரியுதுவானம், 2001 and அயலகத் தமிழ் இலக்கியம், 2004).
 • 2006: சிங்கை மா. இளங்கண்ணனின்  சிறுகதைகள்.
 • 2006: பொருத்தம், கன்னிகாதானம், எங்கே போய்விடும் காலம்?
 • 2011: குருவிக் கோட்டம்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

 • ஆசியான் எழுத்தாளர் விருது (1982)
 • தமிழவேள் விருது (2000)

உசாத்துணை[தொகு]

 • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._இளங்கண்ணன்&oldid=2219054" இருந்து மீள்விக்கப்பட்டது