மா. அண்ணாதாசன்
தோற்றம்
மா. அண்ணாதாசன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | கே. எசு. முருகேசன் |
| தொகுதி | திருவெறும்பூர் |
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1984–1989 | |
| பின்னவர் | பாப்பா உமாநாத் |
| தொகுதி | திருவெறும்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 சனவரி 1937 தென்மலை, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அதிமுக |
| பிள்ளைகள் | 7 |
| வாழிடம் | பூசாரி தெரு, தூவாக்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு |
| தொழில் | வணிகர் |
மா. அண்ணாதாசன் (M. Annadasan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். தென்காசி மாவட்டம் தென்மலையில் சனவரி 27, 1937ஆம் ஆண்டு பிறந்த இவர், சிவகிரி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சேர்ந்த அண்ணாதாசன், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1980ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் மீண்டும் இத்தொகுதியில் 1984ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 02-03.
{{cite cite book}}: CS1 maint: year (link)