உள்ளடக்கத்துக்குச் செல்

மாஸ் காடிங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாஸ் காடிங் (P192)
மலேசிய மக்களவைத் தொகுதி
 சரவாக்
Mas Gading (P192)
Federal Constituency in Sarawak
மாஸ் காடிங் மக்களவைத் தொகுதி
(P192 Mas Gading)
மாவட்டம்இலுண்டு மாவட்டம் பாவு மாவட்டம்
வட்டாரம்கூச்சிங் பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை47,171 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிமாஸ் காடிங் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள்பாவு; இலுண்டு
பரப்பளவு1,481 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1977
கட்சி      ஜனநாயக செயல் கட்சி
மக்களவை உறுப்பினர்மோர்தி பிமோல்
(Mordi Bimol)
மக்கள் தொகை51,434 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1978
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

மாஸ் காடிங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kalabakan; ஆங்கிலம்: Kalabakan Federal Constituency; சீனம்: 加拉峇干国会议席) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு; இலுண்டு மாவட்டம்; பாவு மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P192) ஆகும்.[5]

மாஸ் காடிங் மக்களவைத் தொகுதி 1977-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1978-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1978-ஆம் ஆண்டில் இருந்து மாஸ் காடிங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

பாவு மாவட்டம்

[தொகு]

பாவு மாவட்டம் என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம்.[7][8] 1840-ஆம் ஆண்டுகளில் பாவு மாவட்டத்தில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் போர்னியோ நிறுவனத்தினால் (The Borneo Company) தங்கச் சுரங்கத் தொழில்கள் கையகப் படுத்தப்பட்டன. 1921-இல், சுரங்கத் தொழில்களில் வருமானம் குறைவானது. அதன் தொடர்ச்சியாகச் சுரங்கங்கள் மூடப்பட்டன.[9]

பிரதாக் சிகரம்

[தொகு]

1970-களின் பிற்பகுதியில் உலக தங்கத்தின் விலை உயர்ந்த போது சுரங்கங்கள் மீண்டும் திறக்கப் பட்டன. பின்னர் ஆசிய நிதி நெருக்கடி தொடங்கியபோது 1996-இல், அந்தச் சுரங்கங்கள் மீண்டும் மூடப்பட்டன.[10] 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுரங்க உரிமைகள் நார்த் போர்னியோ கோல்ட் நிறுவனத்திடம் (North Borneo Gold) இருந்தது.[11]

ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி, பிடாயூ மக்கள் தங்களின் முன்னோர்களின் நினைவாக, பாவு பகுதியில் உள்ள பிரதாக் சிகரத்தின் உச்சியில் சாகோய் - பிரதாக் தினத்தை (Jagoi-Bratak Day) கொண்டாடுகிறார்கள். அந்த நாளைக் குறிக்கும் வகையில், 1988 மே 1-ஆம் தேதி ஒரு நினைவுக் கல் அமைக்கப்பட்டது

மாஸ் காடிங் மக்களவைத் தொகுதி

[தொகு]




மாஸ் காடிங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[12]

  சீனர் (17.6%)
  இதர இனத்தவர் (1.5%)





மாஸ் காடிங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (51.27%)
  பெண் (48.73%)

மாஸ் காடிங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (6.47%)
  21-29 (21.45%)
  30-39 (19.52%)
  40-49 (16.99%)
  50-59 (16.74%)
  60-69 (11.32%)
  70-79 (5.39%)
  80-89 (1.7%)
  + 90 (0.41%)
மாஸ் காடிங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1978 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
மாஸ் காடிங் தொகுதி 1977-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
5-ஆவது மக்களவை P131 1978-1982 பெட்ரிக் உரேன்
(Patrick Uren)
பாரிசான் நேசனல்
(சரவாக் தேசிய கட்சி) (SNAP)
6-ஆவது மக்களவை 1982-1986 சுயேச்சை
7-ஆவது மக்களவை P154 1986-1990 பாத்தாவ் ரூபிஸ்
(Patau Rubis)
பாரிசான் நேசனல்
(சரவாக் தேசிய கட்சி) (SNAP)
8-ஆவது மக்களவை 1990-1995
9-ஆவது மக்களவை P166 1995-1999
10-ஆவது மக்களவை 1999-2004 திக்கி லாபே
(Tiki Lafe)
பாரிசான் நேசனல்
(சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி) (PDP)
11-ஆவது மக்களவை P192 2004-2008
12-ஆவது மக்களவை 2008-2013
13-ஆவது மக்களவை 2013-2018 நோகே கும்பேக்
(Nogeh Gumbek)
14-ஆவது மக்களவை 2018–2022 மோர்தி பிமோல்
(Mordi Bimol)
பாக்காத்தான் அரப்பான்
(ஜசெக)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
மோர்தி பிமோல்
(Mordi Bimol)
ஜனநாயக செயல் கட்சி (DAP)17,27455.051.66
லிடாங் திசென்
(Lidang Disen)
சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS)11,79437.5937.59 Increase
ரியான் சிம் மின் லியோங்
(Ryan Sim Min Leong)
சரவாக் நிலமகள் கட்சி (PBK)2,3117.367.36 Increase
மொத்தம்31,379100.00
செல்லுபடியான வாக்குகள்31,37998.39
செல்லாத/வெற்று வாக்குகள்5131.61
மொத்த வாக்குகள்31,892100.00
பதிவான வாக்குகள்47,17166.5210.54
Majority5,48017.464.03 Increase
      ஜனநாயக செயல் கட்சி கைப்பற்றியது
மூலம்: [13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகஸ்ட் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  8. "Malaysia: Administrative Division". City Population. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  9. "Zedex Minerals Ltd (ASX:ZDX) Bau Global JORC Resource Now 1.612 M oz Au". ABN Newswire. 5 November 2008 இம் மூலத்தில் இருந்து 28 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170528183157/http://www.abnnewswire.net/press/en/59000/. 
  10. Chew, Daniel (1990) Chinese Pioneers on the Sarawak Frontier 1841-1941 Oxford University Press, Singapore, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-588915-0
  11. Kaur, Amarjit (February 1995) "The Babbling Brookes: Economic Change in Sarawak 1841-1941" Modern Asian Studies 29(1): pp. 65-109, p.73
  12. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
  13. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]