மாஸ்டர் விநாயக்
விநாயக் தாமோதர் கர்நாடகி | |
---|---|
பிறப்பு | சனவரி 19, 1906 கோலாப்பூர், மகாராட்டிரம், இந்தியா |
இறப்பு | 19 ஆகத்து 1947 | (அகவை 41)
தேசியம் | ![]() |
பணி |
|
விநாயக் தாமோதர் கர்நாடகி (Vinayak Damodar Karnataki) (19 ஜனவரி 1906 - 19 ஆகஸ்ட் 1947) பொதுவாக மாஸ்டர் விநாயக் என்று குறிப்பிடப்படுகிறார். 1930கள் - 1940களில் பணியாற்றிய ஓர் இந்திய நடிகரும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]
மாஸ்டர் விநாயக் இந்தியாவின் மகாராட்டிராவின் கோலாப்பூரில் பிறந்தார். இவர் சுசீலா என்பவரை மணந்தார். மறைந்த நடிகை நந்தாவும் , நடிகை ஜெய்ஸ்ரீ டி. என்பவரை மணந்த திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜெயப்பிரகாஷ் கர்நாடகியும் இவரது பிள்ளைகளாவர்.
இவர் இந்திய திரைப்படத் துறையில் உள்ள பல ஆளுமைகளுடன் தொடர்புடையவர். இவரது சகோதரர் வாசுதேவ் கர்நாடகி ஒளிப்பதிவாளரானார். அதே நேரத்தில் புகழ்பெற்ற திரைப்பட பிரமுகர்கள் பாபுராவ் பெந்தர்கர் (1896-1967), பால்ஜி பெந்தர்கர் (1897-1994) இவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் வி. சாந்தாராமின் தாய்வழி உறவினராவார்.[1] இவர் விநாயக் மங்கேஷ்கர் குடும்பத்தின் ஒரு நல்ல நண்பராவார். மேலும், லதா மங்கேஷ்கரை திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தி [2] தனது திரைப்படமான பஹீலே மங்களகௌர் என்ற படத்தில் வாய்ப்பளித்தார்.[1]
இவர் 1936 இல் ஹன்ஸ் பிட்சர்ஸ் என்ற நிறுவனத்தை இணை நிறுவினார். இவரது படைப்புகளில், 1936ஆம் ஆண்டு வெளியான பிரம்மச்சாரி என்ற மராத்தி திரைப்படத்துக்காக இவர் சிறப்பாக நினைவுகூரப்பட்டார். இந்தப் படத்தில் முன்னணி நாயகியை ( மீனாட்சி சிரோத்கர் ) குளியல் உடையில் நடிக்க வைத்தது அபோது சர்ச்சைக்குரியதாக கருதப்பட்டது.
இறப்பு[தொகு]
விநாயக் 1947இல் மும்பையில் காலமானார். [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Archived copy". 14 October 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 October 2016 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ Encyclopedia of Bharat Ratnas. https://books.google.com/books?id=HkF3avvFvb4C&pg=PA208. பார்த்த நாள்: 4 May 2013.
- ↑ Death of Nanda's father பரணிடப்பட்டது 29 மார்ச் 2014 at the வந்தவழி இயந்திரம்; accessed 30 March 2014.