மாவேலிக்கரை கிருட்டிணன்குட்டி நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாவேலிக்கரை கிருட்டிணன்குட்டி நாயர்
பிறப்புமாவேலிக்கரை, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிமிருதங்கக் கலைஞர்

மாவேலிக்கரை கிருட்டிணன்குட்டி நாயர் (Mavelikara Krishnankutty Nair) (11 அக்டோபர் 1920 – 13 சனவரி 1988) மிருதங்கக் கலைஞராவார். ஆலப்புழா வெங்கப்பன் பிள்ளையிடமிருந்தும், வீச்சூர் கிருட்டிண ஐயரிடமிருந்து தனது பயிற்சியைப் பெற்றார். இவர், பழனி சுப்பிரமணிய பிள்ளையைத் தனது 'மானசீக குரு' வாகக் கருதினார். இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மசிறீ விருது பெற்ற இவர் கேரள சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றார். [1] கிருட்டிணன்குட்டி நாயர் திருவனந்தபுரத்தில் அனைத்திந்திய வானொலிக் கலைஞராகவும் இருந்தார். [2]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]