மாவுலின்னாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாவுலிநாங்
Mawlynnong
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்கிழக்கு காசி மலை மாவட்டம்
வட்டம்பைனுர்ஸ்லா
நேர வலயம்IST (ஒசநே+5:30)

மாவுலின்னாங் என்னும் கிராமம், இந்திய மாநிலமான மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] இங்கு வாழும் மக்கள் தாய்வழி சமூகத்தை பின்பற்றுகின்றனர்.[2] இது ஆசியாவிலேயே சுத்தமான கிராமம் என்று அறியப்படுகிறது.[3]

இது பைனுர்ஸ்லா வட்டாரத்துக்கும், சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

புவியியல்[தொகு]

மாவுலின்னாங் கிராமத்தின் ஒரு சாலை

இது சில்லாங்கின் தெற்கில் 90 கி.மீ தொலைவில், இந்தியா-வங்காளதேசம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.[5]

மக்கள்[தொகு]

எபிஃபனி தேவாலயம்

இங்கு ஏறத்தாழ 500 மக்கள் வசிக்கின்றனர்.[6]

2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இங்கு 95 வீடுகள் உள்ளன.[7] இங்கு வாழும் அனைவரும் கல்வி கற்றிருக்கின்றனர்.[8] இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும். முக்கியப் பயிர் பாக்கு ஆகும்.[8] இவர்கள் காசி இன மக்கள் ஆவர்.[6]

தாய்வழி சமூகம்[தொகு]

காசி இன மக்கள், தங்கள் சொத்துக்களை கடைசி பெண்களுக்கே எழுதி வைப்பர். இங்கு தலைமுறையானது பெண்களை முன்னிறுத்தி இருக்கிறது. மகள்கள் தாயின் பெயரை தன் பெயருடன் சேர்த்து எழுதுவது வழக்கம்.[9]

தூய்மை[தொகு]

இந்த ஊர் தூய்மைக்கு பெயர் பெற்றது.[10] இங்கு சேர்க்கப்படும் கழிவுகளை மூங்கில் கூடைகளில் சேகரித்து, குழிக்குள் போட்டு, உரமாக பயன்படுத்துகின்றனர். டிஸ்கவர் இந்தியா என்ற பயண இதழ், இந்த ஊரை ஆசியாவின் சுத்தமான கிராமம் என்று 2003ஆம் ஆண்டில் அறிவித்தது.[8] The phrase has since caught on. Moasunep Kichu's documentary on the village, for instance, is called Asia's Cleanest Village.[11]

சுற்றுலா[தொகு]

இது சுற்றுலாத் தலமாகும். இங்கு வேர்களால் ஆன பழைமையான பாலம், சிறு முனையின் மீது சமன்பட்டு நிற்கும் பாறை ஆகியன உள்ளன. ஊர் முழுவதும் செடி,கொடி, மரங்களால் நிரம்பியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான குடில்கள் உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. IAY Report for Financial year 2010-2011
  2. Kingdom of girls: Women hold power in this remote Indian village" 'வாஷிங்டன் போஸ்ட். April 17th 2015. Retrieved on June 6, 2015.
  3. "Asia's Cleanest Village is in Meghalaya".
  4. Electoral roll of Pynurla (ST) constituency, Election Department, Government of Meghalaya.
  5. Magical Mawlynnong பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Meghalaya Tourism
  6. 6.0 6.1 Nieves, Evelyn. "Girls Rule in an Indian Village" (). த நியூயார்க் டைம்ஸ். June 3, 2015. Retrieved on June 5, 2015.
  7. Availability of MGNrega data on MGNREGA soft MIS[தொடர்பிழந்த இணைப்பு]
  8. 8.0 8.1 8.2 Eco Destination பரணிடப்பட்டது 2011-12-09 at the வந்தவழி இயந்திரம், Department of Tourism, Government of Meghalaya
  9. Where women of India rule the roost and men demand gender equality" 'தி கார்டியன். January 18th 2011. Retrieved on June 6, 2015.
  10. Mawlynnong - the cleanest village of Asia பரணிடப்பட்டது 2016-06-04 at the வந்தவழி இயந்திரம், India-north-east.com
  11. Asia's Cleanest Village by EMMRC K, 2013-06-21, 2015-04-20 அன்று பார்க்கப்பட்டது

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவுலின்னாங்&oldid=3484410" இருந்து மீள்விக்கப்பட்டது