மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எனும் பொறுப்பில் ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் மாவட்டத்திலிருக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைக் கண்காணிப்பதுடன் மாணவர்களின் கல்வித்தரத்தை அதிகரிக்கவும் மாவட்ட அளவில் அரசுத் தேர்வுகளை நடத்தும் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கு உதவியாக வருவாய்க் கோட்ட அளவில் கல்வி மாவட்டம் பிரிக்கப்பட்டு மாவட்டக் கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் துணையுடன் பள்ளிக் கல்வி மேம்பாட்டிற்கு இவர் உதவுகிறார்.