மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் என்பது இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தின்[1] படி தேசிய அளவில் ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்தையும் தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் கீழ் தாலுகா சட்ட சேவைகள் குழுக்கள் செயல்படுகின்றன. இலவச சட்ட உதவியை அரசு வழங்குவதும், சம வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க உதவுவதும் இதன் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.

அதிகாரம்[தொகு]

சட்ட சேவைகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட அதிகாரம் மற்றும் செயல்பாடுகளைச் செய்யும் வகையில், மாநில சட்ட சேவைகள் ஆணையம்[2] என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரத்தை, ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும், இந்திய அரசியலமைப்பின் உறுப்பு 39-ஏ வழங்குகிறது.

அமைவிடம்[தொகு]

இந்திய அரசியலமைப்பின் உறுப்பு 39-ஏ வழங்குகிய அதிகாரத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம்[3] மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகத்தில் வடக்கு கோட்டை சாலையில் 'சட்ட உதவி மய்யம்' என்ற கட்டிடத்தில் அமைந்துள்ளது.

இந்த தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் கீழ் மாவட்ட சட்ட சேவைகள் ஆனையங்களும் மற்றும் தாலுகா சட்ட சேவைகள் குழுக்களும் செயல்படுகின்றன.

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் என்பது ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்தையும் தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.

அரசின் கடமை[தொகு]

சட்ட அமைப்பின் செயல்பாடுகள் சம வாய்ப்பின் அடிப்படையில் நீதியை ஊக்குவிப்பதை அரசு பாதுகாக்கும். குறிப்பாக, பொருளாதார அல்லது பிற குறைபாடுகள் காரணமாக எந்தவொரு குடிமகனுக்கும் நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த, இலவச சட்ட உதவியை அரசு வழங்குவதும் அரசின் கடமை ஆகும்.

செயல்பாடுகள்[தொகு]

மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் தேசிய சட்ட சேவைகள் ஆணையம்[4] கூறியுள்ள உதவிகளை பனர்களுக்கு வழங்குகிறது. "ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய துறைக்கு நியாயமான மற்றும் அர்த்தமுள்ள நீதியை உறுதி செய்வதற்காக உள்ளடக்கிய சட்ட அமைப்பை ஊக்குவித்தல்" என்பதே இதன் குறிக்கோள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]