மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் திருமூர்த்தி நகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்[தொகு]

திருமூர்த்தி நகர்[தொகு]

திருப்பூர் மாவட்டம்[தொகு]

திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்திமலை அடிவாரத்தில் திருமூர்த்தி நகர் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மிகவும் பழமையானது. இந்நிறுவனம் முதலில் ஆதாரக் கல்வி ஆசிரியர் பயிற்சி நிலையமாகச் செயல்பட்டு வந்தது.

DIET, TMNAGAR
இந்நிறுவனம்  அனைவருக்கும் கல்வி, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு 1986 ஆம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது.  அனைவருக்கும் தொடக்கக்கல்வி, எழுத்தறிவின்மையைப் போக்கல் ஆகியன தேசிய கல்விக்கொள்கையின் நோக்கங்களாகும்.  தொடக்கக்கல்வியின் தரத்தினை மேம்படுத்திடவும், பணியாற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளைப் புதுப்பிக்கவும் தேசிய கல்விக்கொள்கை முனைப்பினைக்காட்டியது.   இந்நிறுவனம்  முதல் கட்ட நிலையில் தமிழக அரசு ஆணை எண் 1799 (கல்வி) நள் 7.12.1988-ன் உத்தரவிற்கிணங்க நிலை உயர்த்தப்பட்டு 23.12.1988 முதல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமாகச் செயலாற்றி வருகின்றது.   இந்நிறுவனம் பத்து ஏக்கர் பரப்பில்  அரசு நிலத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்:

[1]