உள்ளடக்கத்துக்குச் செல்

மாளிகாவில புத்தர் சிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாளிகாவில புத்தர் சிலை
ஆண்டு7 ஆம் நூற்றாண்டு
வகைகற் சிற்பம்
இடம்மாளிகாவில, இலங்கை

மாளிகாவில புத்தர் சிலை, இலங்கையில், மாளிகாவில என்னும் இடத்தில் உள்ள நிற்கும் தோற்றத்தில் அமைந்த புத்தர் சிலை ஆகும். மாளிகாவில இலங்கையின் ஊவா மாகாணத்தில் உள்ள, மொனராகலை மாவட்டத்தில் உள்ளது. 7 ஆம் நூற்றாண்டில், அக்ரபோதி என்னும் இளவரசனால், உருவாக்கப்பட்ட இச்சிலை, பெரிய சுண்ணாம்புக் கற்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தனியாக நிற்கும் புத்தர் சிலைகளுள் மிக உயரமானது இதுவே. 1951ல் கண்டுபிடிக்கப்பட்டபோது இது பல துண்டுகளாக உடைந்திருந்தது. அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசாவின் வழிகாட்டலுக்கு இணங்க 1980ல் இச்சிலை மீண்டும் பொருத்தி அமைக்கப்பட்டது.

அமைப்பு

[தொகு]

தனியாக, நிற்கும் நிலையில் உள்ள புத்தர் சிலைகளுள் மிகவும் உயரமானதான இச்சிலை,[1] 11.5 மீட்டர் (37 அடி 10 அங்.) உயரமானது.[2] அவுக்கணை புத்தர் சிலை, புதுருவகல புத்தர் சிலை ஆகியவற்றுடன், மாளிகாவில புத்தர் சிலையும் பழங்கால இலங்கையைச் சேர்ந்த நிற்கும் புத்தர் சிலைகளுக்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.[3] இச்சிலை அவுக்கணை புத்தர் சிலையைத் தோற்றத்தில் ஒத்துள்ளதுடன், அபய முத்திரையின் அதே வேறுபாடான அசிசா முத்திரையுடன் கூடியது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dassanayake, Aravinda (21 October 2007). "Maligawila – a reflection of ancient glory". Sunday Observer இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303204507/http://www.sundayobserver.lk/2007/10/21/jun07.asp. பார்த்த நாள்: 6 March 2010. 
  2. "The majestic Maligawila Buddha statue". Sunday Observer. 27 November 2005 இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605112005/http://www.sundayobserver.lk/2005/11/27/bus20.html. பார்த்த நாள்: 6 March 2010. 
  3. Siriwera, W. I. (2004). History of Sri Lanka. Dayawansa Jayakody & Company. p. 287. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-551-257-4.
  4. Sarachchandra, B. S. (1977). අපේ සංස්කෘතික උරුමය (in Sinhala). Silva, V. P. pp. 123–124. {{cite book}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளிகாவில_புத்தர்_சிலை&oldid=3224645" இலிருந்து மீள்விக்கப்பட்டது