மாளா ஜெப ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாளா ஜெப ஆலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா, மாளா, திருச்சூர், இந்தியா
சமயம்மரபுவழி யூதம்
மாகாணம்கேரளம்
மாவட்டம்திருச்சூர் மாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு1934
செயற்பாட்டு நிலைபயன்பாட்டில் இல்லை

மாளா ஜெப ஆலயம் (Mala Synagogue) என்பது இந்தியாவின் மிகப் பழமையான ஜெப ஆலயமாகும். இது கேரளாவின் வரலாற்று மலபார் யூதர்களால் கட்டப்பட்டது. இது தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மாளா என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது. [1] இதை மாளா கிராம ஊராட்சி இதனை நிர்வகிக்கிறது. 1954-1955 [2] காலத்தில், கேரளாவிலிருந்து இசுரேலுக்கு மலபார் யூத சமூகத்தின் அலியா காரணமாக, சமூகம் ஜெப ஆலயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய யூத கல்லறை இரண்டையும் கிராம ஊராட்சியிடம் பாதுகாப்பிற்காக ஒப்படைத்தது. ஜெப ஆலயம் தற்போது செயலிழந்துவிட்டது, அதற்குள் எந்த மதப் பொருட்களும் இல்லை .

வரலாறு[தொகு]

பெண்கள் தேவாலயத்திற்குள் உட்காருமிடம்

இது மலபார் யூதர்களின் பாரம்பரிய நினைவுச்சின்னமாகும். மேலும் கேரளாவின் ஒத்திசைவான மத வரலாற்றின் ஒரு உதாரணமாக திகழ்கிறது. கேரளாவில் பரவூரிலும், கொச்சியைச் சுற்றிலிலும் இன்னும் பல ஜெப ஆலயங்கள் உள்ளது. ஒரு கருதுகோளின்படி நகரத்தின் பெயர் மாளா என்பது மல்-ஆகா என்ற எபிரேய வார்த்தையிலிருந்து தோன்றியிருக்கலாம். அதாவது "அகதிகளின் மையம்" [2] என்று பொருள் படும்.

இதன் தோற்றம் குறித்து வரலாற்றாசிரியர்களிடமிருந்து வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. திராவிட யூதரும் வரலாற்றாசிரியருமான பிரேம் தாசு சுவாமி தாசு எகுடி என்பவர், ஒரு பழங்கால யூத மலையாள நாட்டுப்புற பாடலில் கி.பி 1000 இல் கொடுங்கல்லூர் அரசன் ஜோசப் ரப்பன் என்பவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மரத்தைப் பயன்படுத்தி 11 ஆம் நூற்றாண்டில் ஜெப ஆலயம் கட்டப்பட்டது.என்று குறிப்பிடுகிறார். முதல் கட்டமைப்பு 14 ஆம் நூற்றாண்டில் அறியப்படாத காரணங்களால் அகற்றப்பட்டது ( 1341 ஆம் ஆண்டின் பெரிய பெரியார் வெள்ளத்திற்குப் பிறகு, ஆனால் வெள்ளம் காரணமில்லை) மற்றும் 1400 ஆம் ஆண்டில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

புனரமைக்கப்பட்ட 14 ஆம் நூற்றாண்டின் ஜெப ஆலயம் கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1792 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. 1780 களின் ஆரம்பத்தில் இரண்டாம் ஆங்கிலேய- மைசூர் போரின்போது திப்பு சுல்தானால் கேரளாவின் மைசூர் படையெடுப்பின் போது ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யப்பட்டது. இருப்பினும், 1817 ஆம் ஆண்டில் கொச்சியில் நிறுத்தப்பட்டிருந்த சி.எம்.எஸ் மிஷனரியான ரெவ். தாமஸ் டாசன் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். 1792 ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் மலபாரை சிறீரங்கபட்டின உடன்படிக்கையின் மூலம் ஆங்கிலேயரிடம் விட்டுக்கொடுத்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்ட போதிலும், ஜெப ஆலயக் கட்டிடம் இன்னும் இடிந்து கிடப்பதை அவர் கண்டறிந்தார். [3]

1909 ஆம் ஆண்டில், 19 ஆம் நூற்றாண்டின் பழைய கட்டிடம் அதே அஸ்திவாரத்தில் (பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ) மீண்டும் கட்டப்பட்டது. [3] 1597 ஆம் ஆண்டில் ஜெப ஆலயம் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் வரலாற்று சான்றுகள் இருப்பதைப் பற்றிய மற்றொரு பார்வையும் உள்ளது [சான்று தேவை] .

1955 ஆம் ஆண்டில் மாளா யூத சமூகம் இசுரேலுக்கு குடிபெயரத் தொடங்கியபோது, ஜெப ஆலயம் 1954 திசம்பர் 20 இல் மாளா கிராம ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பஞ்சாயத்து இப்போது ஜெப ஆலயத்திற்கு சொந்தமானது. அது ஒரு மண்டபமாக பயன்படுத்தப்பட்டது. ஜெப ஆலயம் ஒரு கல்லறையுடன் இருக்கிறது. கல்லறை ஏப்ரல் 1, 1955 அன்று மாளா கிராம ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. [2] [4] [5] [6] [7]

குறிப்புகள்[தொகு]

  1. "Cultural Heritage of Kerala". Ananthapuri.com. Archived from the original on 1 June 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
  2. 2.0 2.1 2.2 "Jewish Monument Mala Thrissur, Kerala". Mala.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
  3. 3.0 3.1 Waronker, Jay A. "The Synagogues of Kerala". cochinsyn.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08.
  4. "Architecture". Friends of Kerala Synagogues 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "ISJM Jewish Heritage Report". International Survey of Jewish Monuments. Archived from the original on 2001-05-15. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
  6. "Kerala Synagogues". Mapsofindia.com. Archived from the original on 10 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.
  7. "District of Kerala :: Trichur". Coco Planet Tour Company. Archived from the original on 2012-06-25. பார்க்கப்பட்ட நாள் 2012-06-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாளா_ஜெப_ஆலயம்&oldid=3567486" இலிருந்து மீள்விக்கப்பட்டது