மால்குடி
மால்குடி | |
---|---|
உருவாக்கம் | ஆர். கே. நாராயணன் |
முதற் தோற்றம் | சுவாமி அண்டு பிரண்ட்ஸ் (1935) |
மால்குடி (Malgudi) என்பது ஆர். கே. நாராயணின் புதினங்கள், சிறுகதைகள் போன்றவற்றில் இடம்பெற்றற கருநாடகத்தின், ஆகும்பேயில் அமைந்துள்ளதாக சித்தரிக்கப்படும் ஒரு கற்பனை ஊராகும் . இது நாராயணின் பெரும்பாலான படைப்புகளில் கதை நடக்கும் இடமாக அமைக்கப்பட்டுள்ளது. அவரது முதல் புதினமான சுவாமி அண்ட் பிரண்ட்ஸ் தொடங்கி, அவருடைய பதினைந்து புதினங்களில் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும், அவரது பெரும்பாலான சிறுகதைகளுக்கும் களமாக இந்த கற்பனை ஊர் உள்ளது.
மால்குடியை இந்தியாவின் நுண்ணிய ஒரு வடிவமாக நாராயணன் சித்தரித்துள்ளார். மால்குடி டேசில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, 19 ஆம் நூற்றாண்டில் ஒரு கற்பனையான பிரித்தானிய அதிகாரியான சர் ஃபிரட்ரிக் லாலே ஒரு சில கிராமங்களை ஒன்றிணைத்து வளர்த்து அதன் மூலம் மால்குடி உருவாக்கப்பட்டது. சர் ஃபிரெட்ரிக் லாலியின் பாத்திரமானது 1905 இல் மதராஸ் கவர்னராக இருந்த ஆர்தர் லாலியை அடிப்படையாக கொண்டதாக இருக்கலாம்.[1] இப்போது சிமோகா மக்களவைத் தொகுதி உறுப்பினர் சிமோகா-தலகுப்பா தொடருந்து பாதையில் உள்ள அரசலு தொடருந்து நிலையத்தை மால்குடி தொடருந்து நிலையமாக மாற்றுமாறு இந்திய இரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
புவியியலும், தோற்றமும்
[தொகு]மால்குடி ஊரானது, மைசூர் மற்றும் மதராஸ் மாநிலங்களின் எல்லையிலும், மதராசிலிருந்து சில மணிநேர பயண நேரத்திலும், கற்பனையான மெம்பி காடுகளுக்கு அருகிலும், கற்பனையான சரயூ ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. [2] [3]
மால்குடி ஊர் ஒரு பனைக்கதை படைப்பு என்று நாராயணன் குறிப்பிட்டாலும் ஒருபுறம் ஆறும் மறுபுறம் காடும், லாலி சாலை, வெரைட்டி ஹால், பாம்பே ஆனந்த பவண் உணவு விடுதி போன்ற மால்குடியை சித்தரிக்கும் கட்டிடங்களும் பாதைகளும். வாசகர்கள் சிலரை அதன் உண்மையான இருப்பிடமாக மைசூர் என்று பூகிக்க வைக்கின்றனது.[சான்று தேவை] மால்க்குடி ஊராக சிலர் கருதும் 'இடங்களில்' காவேரி கரையில் அமைந்துள்ள இலால்குடி[சான்று தேவை] மற்றும் பழைய மைசூர் மாநிலத்தில் அமைந்துள்ள யாதவகிரி போன்றவை உள்ளன.[சான்று தேவை]
இடங்களும் அடையாளங்களும்
[தொகு]சரயு ஆறு
[தொகு]மால்குடி சரயு ஆற்றங் கரையில் அமைந்துள்ளது. சுவாமி அண்ட் ஃப்ரெண்ட்சில், சுவாமி, மணி, ராஜம் ஆகியோர் தங்கள் மாலை நேரங்களை ஆற்றங்கரையில் விளையாடியோ அரட்டையடித்தோ பொழுதை செலவிடுகிறார்கள். தி கைடு புதினத்தில், ஞாதுவான ராஜு, வறண்டுபோயுள்ள சரயுவின் கரையில், மழை வேண்டி உண்ணாநோன்பு இருக்கிறார். மகாத்மா காந்தி மால்குடிக்கு வரும்போது, சரயு ஆற்றங்கரையில் கூட்டங்களும் பேச்சுகளும் நடைபெறுவதாக சித்தரிக்கபட்டுள்ளது.
தெருக்களும் சுற்றுப்புறங்களும்
[தொகு]கடை வீதி மால்குடியின் மையத் தெருவாகும். அதில் பாம்பே ஆனந்த் பவண் மற்றும் ட்ரூத் பிரிண்டிங் ஒர்க்ஸ் உள்ளிட்ட பல பெரிய கடைகள் அமைந்துள்ளன. கபீர் தெரு மால்குடியின் உயரடுக்கு மக்களின் வசிப்பிடமாகும். அதே சமயம் லாலி விரிவாக்கம் என்பது பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்கள் வசிக்கும் புதிய வரவிருக்கும் பகுதியாகும். எண்ணெய் வியாபாரிகளின் இருப்பிடமான எல்லம்மன் தெரு, கடைசித் தெரு, அதைத் தாண்டி சரயு ஆறு உள்ளது. மற்ற தெருக்களில் குரோவ் தெரு, காளிகாட் லேன் மற்றும் விநாயக் முதலி தெரு ஆகியவை அடங்கும்.
எல்லம்மன் தெருவிற்கும் ஆற்றுக்கும் இடையில் நல்லப்பாவின் தோப்பும் தகனக் கூடமும் உள்ளன. தீண்டத்தகாதவர்களும், துப்புரவுப் பணியாளர்களும் ஆற்றின் கீழ் கரையில் வசிக்கின்றனர்.
கட்டடங்கள்
[தொகு]பழைய வெரைட்டி ஹாலுக்குப் பதிலாக 1935ல் பேலஸ் டாக்கீஸ் கட்டப்பட்டது. ஆல்பர்ட் மிஷன் பள்ளி மற்றும் ஆல்பர்ட் மிஷன் கல்லூரி ஆகியவை மிகவும் பிரபலமான கல்வி நிறுவனங்கள். வாரியப் பள்ளி மற்றும் நகர தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.
மற்ற அடையாளங்கள்
[தொகு]மால்குடியில் ஒரு சிறிய தொடருந்து நிலையம் உள்ளது. இது பல அத்தியாயங்களில் கதையின் மையமாக உள்ளது. மால்குடியின் முக்கிய மருத்துவமனை மால்குடி மருத்துவ மையம் (எம்எம்சி). குதிரைமீது அமர்ந்திருக்கும் சர் ஃபிரெட்ரிக்கின் சிலை மற்றொரு முக்கிய அடையாளமாக அமைகிறது. மற்றொரு முக்கியமான இடம் தி போர்டுலெஸ், பெயர் பலகை ஏதும் இல்லாத சிறிய உணவகம். போர்டுலெஸ் மால்குடியின் தற்போதைய நிகழ்வுகள் குறித்த விவாத மையமாக உள்ளது.
மெம்பி காடு
[தொகு]சரயு ஆற்றின் மறுபுறம் மெம்பி காடு உள்ளது. இது பல குன்றுகளையும் குகைகளையும் கொண்டுள்ளது. அங்கு காணப்படும் விலங்குகளில் புலி, மான், லாங்கர் குரங்கு, எருமை போன்றவை ஆகியவை அடங்கும்.
சமகால பண்பாட்டில்
[தொகு]கன்னட நடிகரும் இயக்குனருமான சங்கர் நாக் இயக்கிய 1986 ஆம் ஆண்டய இந்தியத் தொலைக்காட்சித் தொடரான மால்குடி டேஸ், ஆர். கே. நாராயணின் பெயரிடப்பட்ட படைப்புகளை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இது பெரும்பாலும் கர்நாடகத்தின் சீமக்கா மாவட்டத்தில் ஆகும்பே அருகே படமாக்கப்பட்டது. ஆனாலும் சில இதன் அத்தியாயங்கள் பெங்களூர் மற்றும் கர்நாடகத்தின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள தேவராயனதுர்காவிலும் படமாக்கப்பட்டன.
மால்குடி " தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம்" என்ற கருத்து பரலக கற்பனையில் வேரூன்றியுள்ளது. தென்னிந்திய பாணியிலான உணவகங்கள் "மால்குடி" என்ற பெயரிலோ அதை ஒத்திதாகவோ உள்ளன. சியாம் குழுமம் சென்னை, பெங்களூர், ஐதராபாத்த் போன்ற இடங்களில் மால்குடி உணவகங்களை நடத்தி வருகிறது. [4] [5] கொல்கத்தாவில் "மால்குடி ஜங்சன்" என்ற உணவகம் உள்ளது. [6]
குறிப்புகள்
[தொகு]- ↑ Narayan, R.K. (1956). Lawley Road and other stories. Madras: Orient Paperbacks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0882530623.
- ↑ Khatri, Chote Lal (2006). R.K. Narayan: Reflections and Re-evaluation. India: Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176257138.
- ↑ Narayan, R.K (2000). Memories of Malgudi. Chennai: Penguin India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780141002453.
- ↑ "Archived copy". Archived from the original on 12 October 2007. பார்க்கப்பட்ட நாள் 22 October 2006.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy". Archived from the original on 17 May 2011. பார்க்கப்பட்ட நாள் 22 October 2006.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "The Telegraph - Calcutta : Metro". www.telegraphindia.com. Archived from the original on 2007-09-30.