மால்கான்கிரி

ஆள்கூறுகள்: 18°21′N 81°54′E / 18.35°N 81.90°E / 18.35; 81.90
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்கான்கிரி
—  நகரம்  —
மால்கான்கிரி
இருப்பிடம்: மால்கான்கிரி

, ஒடிசா

அமைவிடம் 18°21′N 81°54′E / 18.35°N 81.90°E / 18.35; 81.90
நாடு  இந்தியா
மாநிலம் ஒடிசா
மாவட்டம் மால்கான்கிரி மாவட்டம்
ஆளுநர் கணேசி இலால்
முதலமைச்சர் நவீன் பட்நாய்க்
மக்களவைத் தொகுதி மால்கான்கிரி
மக்கள் தொகை 23,110 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


178 மீட்டர்கள் (584 அடி)

குறியீடுகள்


மால்கான்கிரி (Malkangiri, ஒரியா மொழி:ମାଲକାନଗିରି) இந்திய மாநிலம் ஒடிசாவின் மல்கான்கிரி மாவட்டத்தின் தலைநகரமும் தெரிந்தெடுக்கப்பட்ட பகுதியும் (notified area committee) ஆகும். மல்கான்கிரியில் 1965ஆம் ஆண்டு முதல் தண்டகாரண்ய திட்டத்தின் கீழ் வங்காளதேச அகதிகள் மறுவாழ்வளிக்கப்படுகின்றனர். 90களின் துவக்கத்தில் ஈழத்தமிழர் பிரச்சினையை அடுத்து புலம்பெயர்ந்த சில இலங்கைத் தமிழ் அகதிகளும் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். இன்று பெரும்பாலனவர்கள் திரும்பிவிட்டாலும் இன்னமும் சிலர் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இது மாநிலத்தின் நக்சலைட் இயக்கம் தீவிரமாக இயங்கும் மாவட்டமாக விளங்குகிறது. 2011ஆம் ஆண்டு பெப்ரவரியில் மல்கான்கிரி மாவட்ட ஆட்சியர் நவீல் கிருஷ்ணாவும் பொறியாளர் பவித்ர மஜியும் நக்சலைட்களால் கைப்பற்றப்பட்டு பின்னர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.[1]

மக்கள்தொகை யாய்வு[தொகு]

2001 இந்திய கணக்கெடுப்பின்படி,[2] மல்கான்கிரியின் மக்கள்தொகை 23,110. மக்கள்தொகையில் ஆண்கள் 52% விழுக்காடும் பெண்கள் 48%. விழுக்காடும் உள்ளனர். கல்வியறிவு தேசிய சராசரியான 59.5% ஐவிட குறைவாக 57% ஆக உள்ளது. ஆண்கள் கல்வியறிவு 65% ஆகவும் பெண்கள் 48% ஆகவும் உள்ளது. 15% பேர்கள் ஆறு அகவைக்கும் குறைவாக உள்ளனர்.

அரசியல்[தொகு]

தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக நிமல் சந்திரா சர்க்கார் காங் 2004ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். .[3] மல்கான்கிரி நௌரங்பூர் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது..[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கான்கிரி&oldid=3567417" இருந்து மீள்விக்கப்பட்டது