மாலையிட்ட மங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலையிட்ட மங்கை
மாலையிட்ட மங்கை
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புகண்ணதாசன்
கதைகண்ணதாசன்
அய்யாப்பிள்ளை
மூலக்கதைசந்திரநாத்
படைத்தவர் சரத்சந்திர சட்டோபாத்யாயா[1]
இசைவிசுவநாதன் - ராமமூர்த்தி
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பண்டரி பாய்
மனோரமா
மைனாவதி
காகா ராதாகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவுஜி. ஆர். நாதன்
விநியோகம்ஏ.எல்.எஸ். வெளியீடு
வெளியீடு1958
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

மாலையிட்ட மங்கை என்பது 1958 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கவிஞர் கண்ணதாசனின் நிறுவனமான, கண்ணதாசன் பிலிம்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தை ஜி. ஆர். நாதன் இயக்கியிருந்தார். டி. ஆர். மகாலிங்கம், பண்டரிபாய், மனோரமா, மைனாவதி, பத்மினி பிரியதரிசினி, காகா ராதாகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விசுவநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[2] இந்தப் படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதியிருந்தார்.

நடிகர்கள்[தொகு]

படத்தின் சிறப்புகள்[தொகு]

1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக சாதனை படைத்த நடிகை மனோரமா இந்தத் திரைப்படத்தில் தான் அறிமுகமானார்.[3][4] இத்திரைப்படம் கவிஞர் கண்ணதாசன் தயாரித்த திரைப்படமாகும். இந்தப் படத்தில் இருந்துதான் கண்ணதாசன் ஒரு பாடல் ஆசிரியராக புகழ் பெற்றார். இந்தப் படத்தில் இடம் பெற்ற பதினைந்து பாடல்களும் மிகப் பிரபலமாகி பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. திரைப் படங்களில் இருந்து ஒதுங்கி இருந்த திரு டி.ஆர். மகாலிங்கம் அவர்கள் மீண்டும் இந்தப் படத்தின் மூலம் புகழ்பெற்றார். சரத்சந்திர சட்டோபாத்யாயா அவர்கள் எழுதிய 'சந்திரநாத்' என்னும் நாவலைத் தழுவி இப்படம் அமைந்திருந்தது.[1]

பாடல்கள்[தொகு]

விசுவநாதன் - ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கவிஞர் கண்ணதாசன் எழுதியவை.

இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் பாடிய "செந்தமிழ் தேன்மொழியாள்" எனும் பாடல் மிகப்பெரும் வெற்றி பெற்ற சிறப்பான பாடலாகும்.

எண் பாடல்கள் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம்(நி:நொ)
1 "செந்தமிழ் தேன் மொழியாள்" தெ. இரா. மகாலிங்கம் கண்ணதாசன் 04:26
2 "எங்கள் திரவிட பொன்னாடே" தெ. இரா. மகாலிங்கம் 03:25
3 "நான் இன்றி யார் வருவார்" தெ. இரா. மகாலிங்கம் & ஏ. பி. கோமளா 03:28
4 "செந்தமிழ் தேன் மொழியாள்" கே. ஜமுனா ராணி 04:48
5 "அம்மா உன்னைக் கொண்டு வானத்திலே" வி. என். சுந்தரம் 01:05
6 "அக்கரைச் சீமை போன மச்சான்" சீர்காழி கோவிந்தராஜன் & கே. ஜமுனா ராணி 04:10
7 "மாலையிட்ட மணமுடிச்சு" கே. ஜமுனா ராணி 03:28
8 "மழைக்கூட ஒரு நாளில்" எம். எஸ். இராஜேஸ்வரி 03:43
9 "இல்லறம் ஒன்றே நல்லறம்" பி. சுசீலா 04:11
10 "சாட்டையில்லா பம்பரம் போல்" திருச்சி லோகநாதன் & எம். எஸ். இராஜேஸ்வரி
வசனங்கள் பண்டரிபாய்
04:06
11 "திங்கள் முடி சூடும்" தெ. இரா. மகாலிங்கம் 02:22
12 "இந்நாடும் இம்மொழியும்... வெற்றித் திருநாடே" ஏ. பி. கோமளா 02:26
13 "அன்னையின் நாட்டைப் பகைவர்கள்" டி. எஸ். பகவதி 02:12
14 "வில் எங்கே கணை எங்கே" சீர்காழி கோவிந்தராஜன் 02:04
15 "அன்னம் போல பெண்ணிருக்கு" பி. சுசீலா 03:26

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-cinemas-bong-connection/articleshow/63873364.cms
  2. http://www.maalaimalar.com/2013/12/02220907/Manorama-introduced-Kannadhsan.html பரணிடப்பட்டது 2015-01-03 at the வந்தவழி இயந்திரம் மாலையிட்ட மங்கை திரைப்படம்- மாலைமலர்
  3. "50 years of Manorama" (in en-IN). The Hindu. 30 June 2008. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/50-years-of-Manorama/article15384181.ece. 
  4. Smitha Sadhanandan (30 September 2002). "Having the last laugh". "தி இந்து". Archived from the original on 12 மார்ச் 2003. பார்க்கப்பட்ட நாள் 30 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலையிட்ட_மங்கை&oldid=3660671" இலிருந்து மீள்விக்கப்பட்டது